எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
AVAL VIKATAN லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
AVAL VIKATAN லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 டிசம்பர், 2016

கணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும் குழந்தைகளும்.

கணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும் குழந்தைகளும்.

திருமணம் என்பது ஒரு கோட்டை வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியேறத் தவிக்கிறார்கள் என்று சொல்வதுண்டு. எந்த விஷயத்திலும் நீயா நானா என்று வலுவாக முழு எதிர்ப்போடு ஆண் பெண் இருவரும் சண்டையிடும் பந்தம் இந்தக் கணவன் மனைவி உறவுதான். 

இரண்டு வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்கள் ஒன்றிணையும்போது பல்வேறு கருத்து மாறுபாடுகளைச் சந்திக்க நேர்கிறது. அன்றைய திருமணங்களில் பெரும்பகுதியும் பெண் ஆணைச் சார்ந்து இருந்ததால் கருத்துவேறுபாடுகள் முடங்கிப் போய்விட்டன. விட்டுக் கொடுத்து போதல் பெண்ணின் கடமையாகவே வலியுறுத்தப்பட்டது. ஆனால் இன்றோ ஆண் பெண் இருவரும் இணையர்கள். இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள் கை நிறைய சம்பாதிக்கின்றார்கள். எனவே யார் விட்டுக் கொடுப்பது எனப் பட்டிமன்றங்கள். 

காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணமோ இருமணம் ஒன்றிணையாவிட்டால் அதிருப்தி, அக்கறை இன்மை, சுயநலம், ஈகோ, சலிப்பு, வெறுப்பு,  கோபம், வெறுமை, விரக்தி, சண்டை ஆகியன தலை எடுக்கத் துவங்கி விடுகின்றன. 

மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் ஜாதி மதம் இனம் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பெற்றோர் செய்யும் திருமணங்களில் பெற்றோர் கட்டாயத்துக்காகத் திருமணம் செய்யும் ஜோடிகள் அதன் பின் ஒருவருக்கொருவர் பிடித்தமில்லாமல் தங்கள் தங்கள் கூட்டுக்குள் முடங்கிக் கொள்கிறார்கள்.  ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பும் விழைவும் வேறாக இருப்பதால் வெறுப்புக் கூடிவிடுகிறது. 

வியாழன், 1 டிசம்பர், 2016

சமையலறைப் பாதுகாப்பும் சுகாதாரமும். :-

சமையலறைப் பாதுகாப்பும் சுகாதாரமும். :-

நம்ம குடும்பத்தின் ஆரோக்யம் நம்மளோட கிச்சன்லேருந்துதான் தொடங்குது. காலை காஃபி, டிஃபன், மதிய சாப்பாடு, மாலை ஸ்நாக்ஸ் காஃபி, இரவு உணவு என ஒரு நாளைக்கு இல்லத்தரசி குறைஞ்சது மூணு தரமாவது அடுக்களையில் வேலை செய்ய வேண்டி இருக்கு. அப்படி இருக்கும்போது அதோட பாதுகாப்பும் நம்ம சுகாதாரமும் பாதுகாக்கப்படணும்னா சில டிப்ஸை ஃபாலோ பண்ணலாம். 

கிச்சன்ல இருக்க வேண்டிய ஐட்டம் க்ளவுஸ், பிடிதுணி, டவல்ஸ், டிஷ்யூஸ், இடுக்கி, கத்திரிக்கோல் கத்தி ஸ்பூன்ஸ் போர்க்ஸ், கட்லெரி செட், இவை எல்லாத்தையும் குழந்தைகள் கையில் படாத இடத்துல வைக்கணும். 

அதே போல ஹேண்ட்வாஷ், லிக்விட் சோப், சோப் ஆயில், ஸ்பாஞ்ச், சிங்க் க்ளீனிங் ஐட்டம்ஸ், டாய்லெட் க்ளீங்க் ஐட்டம்ஸ் எல்லாத்தையும் குழந்தைகள் பார்வைக்கும் கைக்கும் எட்டாதவாறு வைப்பது உத்தமம்.  

கிச்சன்ல ப்ரிட்ஜை வைக்க வேண்டாம். அதுல கம்ப்ரஸர் கேஸ் இருக்குறதால நிறைய இடைவெளிவிட்டு ஹால்லதான் வைக்கப்படணும். அதுபோல அதுல அலமாரி மாதிரி நிறைய சாமான்களை அடைச்சு வைக்காம அழகா டேட் போட்டு அடுக்கி மூடி வைச்சுக்கணும். அதிகப் பழசு எல்லாம் வைச்சு ஐஸ்பெட்டியை ஊசப்பெட்டி ஆக்கிட வேண்டாம். மாதம் ஒரு முறையாவது பொருட்களை வெளியே எடுத்து சுத்தம் செய்யணும்.

கிச்சன் ஜன்னல்களுக்கு திரைச்சீலை வேண்டவே வேண்டாம். காஸ் சிலிண்டரும் இரண்டு இருந்தால் பக்கம் பக்கமா வைக்க வேண்டாம். ஐ எஸ் ஐ தரத்தில் உள்ள அடுப்பு, டியூப், ரெகுலேட்டரையே உபயோகிக்கணும். கேஸ் வாங்கும்போது சேஃப்டி வால்வ் சரியா செயல்படுதான்னு செக் செய்து வாங்கணும். இரண்டு பர்னரும் சரியா எரியுதான்னு செக் செய்து ஒரு வருடத்துக்கு ஒருதரமாவது  ஆதரைஸ்டு சர்வீஸ்மேனைக் கூப்பிட்டுக் க்ளீன் செய்யணும். 

புதன், 30 நவம்பர், 2016

பதின்பருவப்பெண்கள் எதிர்கொள்ளும் மனம் உடல் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வும் :-



பதின்பருவப்பெண்கள் எதிர்கொள்ளும் மனம் உடல் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வும் :-
இதை இந்த இணைப்பிலும் படிக்கலாம்.
HAPPY TO SHARE MY ARTICLE IN AVAL VIKATAN. !

பெண்கள் டீன் ஏஜ் பருவத்தைச் சிக்கலின்றி கடக்க... அவசியம் செய்ய வேண்டியவை!

பேதை பெதும்பை  மங்கை  மடந்தை  அரிவை  தெரிவை பேரிளம்பெண் என்று கூறப்படும் பருவங்களில் மங்கையும் மடந்தையும் பதின்பருவத்துக்குரியது. எது நல்லது எது கெட்டது என்று முழுமையாக உணரமுடியாத ரெண்டுங்கெட்டான் பருவம். ஆனாலும் தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக் கொள்ளும் பதின்பருவப் பெண் ஒரு பிரச்சனை என்றால் அம்மாவிடம்தான் தஞ்சம் புகுவார் .

பொதுவாக டீனெஜர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வையும் பார்ப்போம். 

பதின் பருவத்தில்தான் அதிகமா வளர்சிதை மாற்றம் ஏற்படுது. உடல் வளர்ச்சி போல மூளை வளர்ச்சியும் இந்தப் பருவத்தில்தான் அதிகம். அதுக்காகப் பெண்கள் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின், மினரல், நல்ல கொழுப்பு, இரும்புச்சத்து, கால்ஷியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கணும். #மீல் ப்ளானிங் முக்கியம்.

முதன் முதலில் தனது உருவத் தோற்றம். ஹெல்த் கான்ஷியஸ் அதிகம் இருக்கும். பரு, மரு, தலையில் முடி உதிர்தல், முகத்தில் கை கால்களில் அதிகம் ரோமம் வளர்தல் அவங்களுக்கு கவலையை உண்டாக்கும். தங்கள் உடை, தோற்றம் பற்றி அதிக கவலை இருக்கும். ஹீல்ஸ் அணிதல், டாட்டு குத்திக் கொள்ளுதல், உடலில் துளையிட்டு வளையங்கள் அணிந்து கொள்ளுதல்னு அவங்க விருப்பங்கள் வேறாக இருக்கும். கட்டாயப்படுத்தாம ஓரளவு பிடிச்சத செய்ய விடுங்க #சரியான வழிகாட்டுதல் முக்கியம்.

புதன், 23 நவம்பர், 2016

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் பாதுகாப்பும். ( அவள் விகடனில் )

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் பாதுகாப்பும் :-

அவள் விகடன் இணைப்பில் இங்கேயும் படிக்கலாம்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு யுக்திகள்!

அம்மி கொத்துறோம், அருகாமனை சாணை பிடிக்கிறோம்., சவுரி முடி வேணுமா, கூடை சேர் பின்னித் தரோம் என்று சொல்லி என்று வேவு பார்த்து உளவு சொல்லி கிராமப்புறங்களில் தனியா இருக்கும் இல்லத்தரசிகளைக் குறிவைத்து வீட்டில் கொள்ளை நடக்கிறது.  நகை பாலீஷ் பண்ணித் தரோம் என்று சொல்லி அவர்கள் கரைக்கும் சொல்யூஷனில் நகையை உருக்கி எடுத்துக் கொள்வதும் நடக்கிறது.

”ஒரே வெய்யில் தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீர் தாங்க  ” என்று விற்பனைப் பிரதிநிதி உடையில் கேட்ட ஒரு பெண்ணிற்கு இரக்கப்பட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற பெண்ணைப் பின் தொடர்ந்து அவரும் இன்னும் சிலரும் உள்ளே வந்து கத்தியைக் காண்பித்து போட்டிருந்த நகைககளைக் கழட்டிச் சென்றுவிட்டிருக்கிறார்கள்.

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் பேசி அப்பா அம்மா மற்றும் வீட்டு விபரத்தை விசாரித்து வீட்டுக்கு வந்து அந்தப் பெண்ணின் அம்மாவிடம் அவரது கணவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தன்னை ரேஷன் சாமான் வாங்க அனுப்பியதாகச் சொல்லி ரேஷன் கார்டு பணம் பைகள் வாங்கி  ஒரு ஆள் எஸ்கேப்பாகிவிட மாலை வரை பொருட்கள் வரும் என்று அந்தத் தாய் காத்திருக்கிறார். மகளும் கணவரும் வந்த பின்தான் உண்மை தெரிந்திருக்கிறது ஏமாந்தது.