எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 ஜூன், 2013

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

சிக்கனம் என்றால் என்ன.. ? செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது, ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது இவற்றையே சிக்கனம் என்று சொல்லலாம்...அவ்வாறு தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பைப் பெருக்கினால் சிறப்பாக வாழலாம். தனிமனித சிக்கனம் வீட்டையும் மேம்படுத்தும். நாட்டையும் மேம்படுத்தும். 


சிங்கப்பூரின் பொருளாதாரம் உயர்ந்ததற்குக் காரணமே சிக்கனமும் சேமிப்பும்தான். ஏனெனில் கிராஸ் டொமஸ்டிக் ரேட்( GROSS DOMESTIC RATE ) - மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பார்க்கும் போது சிங்கப்பூர் மக்களின் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதாக நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரின் எகனாமிஸ்ட் BY TOH MUN HUNG சொல்கிறார். 

சிக்கன வாழ்வை வாழ்ந்து மாளிகை கட்டி கட்டு செட்டாக வாழும் செட்டிநாடு எங்கள் ஊர்சிங்கப்பூரிலும் வாழும் தமிழரும்  சிக்கனமாக வாழ்ந்து பல ஆன்மீக, கல்வித் தொண்டுகளைச் செய்து வருகின்றனர்.

ஆற்றில் போட்டாலும் அளந்து போடுஎன்பார்கள். ஆறு பலருக்கும் உபயோகமாவது. ஆன்மீகம் என்ற ஆற்றில் நம் உழைப்பால் விளைந்ததும் சேரட்டும் என்று உலகெங்கும் இருக்கும் இஸ்லாம் பெருமக்கள் தங்கள் உழைப்பில் ஒரு பகுதியைசக்காத் பணம் ”( வறியவர்களுக்கு அளிக்கும் நிதியுதவி ) என்ற பெயரில் தானமாக வழங்குவார்கள். தங்கள் வாழ்வை ஆற்றுப் படுத்திய இறைவனின் திருநாளில் ஏழை எளிய மக்களும் பயன்பெறவே இவ்வாறு செய்தார்கள். இதெல்லாம் அவர்கள் சுய உழைப்பில் பெற்ற வருமானத்திலிருந்து தங்களுக்கான  செலவைச் சுருக்கி  மற்றவர்களுக்கும் அளித்தார்கள்.

வரவு எட்டணா.. செலவு பத்தணா”  என்று வாழ்வது சிறப்பன்று. ஒவ்வொருவரும் தங்கள் சம்பாத்தியத்தில் இருந்து முதல் செலவே சேமிப்பாகக் கொள்ள வேண்டும். ஆயிரம் வெள்ளி சம்பாதித்தால் அதில் ஐந்து சதவிகிதம் சேமிப்பாகப் போட வேண்டும். இது பின்னாளில் நம் முதுமையில் நமக்கு உதவும்.

வருமுன் காவாதவன் வாழ்க்கை எரிமுன் வைத்தூறு போலக் கெடும்என்பதாய் சிக்கனமும் சேமிப்பும் அற்றவன் திடீரெனப் பெருந்தேவை வரின் யாரோ ஒருவரிடம் கடன் என்று கையேந்த நேரும். அது போல ஒவ்வொரு செலவையும் யோசித்தே செய்ய வேண்டும். வியாபாரம் செய்கிறேன் என்று அகலக் கால் வைத்து விட்டு அவதிப்பட்டு சொத்துக்களை விற்றுக் கடன் படாமல் தன்னால் என்ன செய்ய இயலும் என்று யோசித்து ஈடுபட்டால் கடன் படாமல் வாழலாம்

சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தாலும் சிக்கன வாழ்வு வாழ்ந்தவர்களே மக்கள் தொண்டில் சிறப்பான தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழகம் வந்தபோது ஏழை மக்கள் உடுத்தும் உடை பார்த்து தன்னுடைய உடைகளுக்கான செலவைக் குறைத்தவர் அண்ணல் மகாத்மா. பென்சிலைக் கூட கடைசி வரை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறுவார். இதே போல் பெரியார் அவர்களும் தன்னுடைய செலவைச் சிக்கனம் செய்து கட்சிப் பணிக்கும் மக்கள் சேவைக்கும் பயன்படுத்தினார்.

என் உறவினர் ஒருவர் சம்பளம் வந்ததுமே முதலில் வீட்டு வாடகை, பால், மளிகை, கேபிள், சமையல் வாயு, இண்டர்நெட், பேப்பர், கரண்ட், தண்ணீர், தொலைபேசி ஆகியவற்றுக்கு உரிய பணத்தைக் கொடுத்து விடுவார். அல்லது தனியாக எடுத்து வைத்து விடுவார். ஆன்மீகத்துக்கு குறிப்பிட்ட அளவு பணம் எடுத்து வைத்து தேவை ஏற்படும் போது கொடுப்பார். இன்சூரன்ஸ், போஸ்ட் ஆஃபீஸ், வங்கி  ஆகியவற்றில் குறிப்பிட்ட அளவு பணமும் போட்டு விடுவார். அதே போல் அன்றே தன்னிடம் வீட்டு வேலை செய்யும் ஆளுக்கும் சம்பளத்தைக் கொடுத்து விடுவார்.

மொத்தமாக பணம் கிடைக்கும்போது வீட்டுக்குத் தேவையான சாமான்களை அன் சீசன் சமயத்தில் தள்ளுபடியில் வாங்கி விடுவார். கடனுக்குக் கிடைக்கிறதே என்று தேவையில்லாத பொருட்களை என்றைக்கும் வாங்கியதே இல்லை. அதே போல் தங்கம், வெள்ளி , இடம், மனை, வீடு ஆகியவற்றில் முதலீடு செய்வார். அவரிடம் என்றைக்கும் பணத்தட்டுப்பாடு என்பதே இருந்தது இல்லை. அதே போல் யாரிடமும் கடன் வாங்கியதும் இல்லை

இவ்வாறு இருந்தால் முதுமை, நோய் வரும்போது யாரிடமும் கையேந்தும் நிலை ஏற்படாதுமுதுமை வாழ்வும் இனிதாக அமையும். நம்மிடம் நம் சேமிப்பில் தேவையான பணம் கட்டாயம் இருந்தால்தான் முதுமையையும் அதன் தொடர்பான வாழ்வையும் பிள்ளைகளை நாடாமல் தைரியமாக எதிர் கொள்ள முடியும்

வருமானத்தை முடிந்தால் அதிகப்படுத்தி  தேவையான செலவைச் செய்பவர்களுக்கு வாழ்வு சிறப்பானதாகவே அமைகிறது.

சரி சிக்கனம் என்பது பணத்தைச் செலவழிக்காமல் இருப்பதில் மட்டும்தானா. அதைவிட கிடைத்தற்கரிய இயற்கை வளங்களை செலவழிப்பதிலும் சிக்கனம் காட்ட வேண்டும். அநாவசியமாக நாம் செலவழிக்கும் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றையும்  சேமிக்க வேண்டும். காற்றையும் மாசுபடாமல் வைக்க வேண்டும்

தேவையற்ற இடங்களில் மின் பயன்பாடு ஒழிக்கப்பட்டால்  சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் அணு உலைக்கெல்லாம் தேவையே இல்லை. லிஃப்டுகளையும் பல மாடிகளைக் கடப்பதற்கு உபயோகப்படுத்தலாம். சிறிய மாடிகளை நடந்தே ஏறலாம். உடல் பயிற்சியாகவும் இருக்கும். உடலுக்கும் நலம் பயக்கும்.
தண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்தியும் மழை நீரை சேமித்தும் வந்தால் வருங்காலத் தலைமுறை கடல் நீரிலிருந்து தண்ணீர் எடுக்கும் அவதிக்கு ஆளாகாது

காற்றை, ஓசோன் லேயரில் ஓட்டை ஏற்படுத்தும் பெட்ரோல் புகை , குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிப்படும் வாயு ஆகியவற்றைத் தடுக்க முடிந்தவரை பொதுமக்கள் உபயோகப்படுத்தும் போக்குவரத்து சாதனங்களை உபயோகப்படுத்த வேண்டும். தேவை ஏற்பட்டால்   மட்டுமே காரை உபயோகப்படுத்த வேண்டும். குளிர் பதனப் பெட்டியில் சேமிப்பதைக்  குறைத்து ப்ரெஷாகக் கிடைக்கும் பொருட்களை உபயோகப்படுத்தினால் ஆரோக்கியமும் கூடும்

நாம் நம்முடைய சிக்கன நடவடிக்கைகளின் மூலம் நம்முடைய வாழ்வு சிறப்பதோடு நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்துகிறோம். நம் பின் வரும் தலைமுறைகளுக்கும் நமக்குக் கிடைத்த வளங்களை வளமை குன்றாமல் வழங்கிச் செல்கிறோம்

எனவே எதிலும் சிக்கன வாழ்வே சிறப்பான வாழ்வு

சிக்கன வாழ்வை வாழ்ந்து சேமித்து மக்கள் சக்தியையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தும் சிங்கப்பூர் மக்களைப் போல சிக்கனமாய் வாழ்வோம். வரும் தலைமுறைகளையும் வளமாக வாழவைப்போம். !!!


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.


5 கருத்துகள்:

  1. இன்றைய உண்மையான நிலையையும், பழமொழிகள், திருக்குறள் என அனைத்தும்... நன்றாக எழுதிக் கொடுத்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. சரி சிக்கனம் என்பது பணத்தைச் செலவழிக்காமல் இருப்பதில் மட்டும்தானா. அதைவிட கிடைத்தற்கரிய இயற்கை வளங்களை செலவழிப்பதிலும் சிக்கனம் காட்ட வேண்டும். அநாவசியமாக நாம் செலவழிக்கும் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றையும் சேமிக்க வேண்டும். காற்றையும் மாசுபடாமல் வைக்க வேண்டும்.

    தேவையற்ற இடங்களில் மின் பயன்பாடு ஒழிக்கப்பட்டால் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் அணு உலைக்கெல்லாம் தேவையே இல்லை. லிஃப்டுகளையும் பல மாடிகளைக் கடப்பதற்கு உபயோகப்படுத்தலாம். சிறிய மாடிகளை நடந்தே ஏறலாம். உடல் பயிற்சியாகவும் இருக்கும். உடலுக்கும் நலம் பயக்கும்.
    தண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்தியும் மழை நீரை சேமித்தும் வந்தால் வருங்காலத் தலைமுறை கடல் நீரிலிருந்து தண்ணீர் எடுக்கும் அவதிக்கு ஆளாகாது.


    Save 20% for old age life and spend 1% to charity from earnings.

    Ippothu mazhai kaalam. Everyone can do their level best to preserve(harvest) water in many ways.

    Nalla pathivu.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன்

    நன்றி மணவாளன்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. நல்ல கருத்து இன்னொரு முக்கியமான சிக்கனம் ஒன்று உண்டு . அது சொல் சிக்கனம்.குடும்பத்திலும் பணியாற்றும் இடங்களிலும் எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ அவ்வளவு நன்மைகள் பெருகும். பல பிரச்சினைகள் தீரும்
    லெ.சங்கரநாராயணன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...