இந்தியன் இங்க்- ட்ரக் அடிக்ஷன் , பென்சில் ட்ராயிங்- மோனாலிசா, போஸ்டர் கலர் - இயற்கை.
கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் காம்பெடிஷன்கள் நடக்கும். அதில் இந்தியன் இங்க், பென்சில் ட்ராயிங், போஸ்டர் கலர் இதெல்லாம் தனியாகப் பங்குபெறும் போட்டிகள். இன்னும் கார்டூன் ட்ராயிங் எல்லாம் உண்டு.
இந்தியன் இங்க் ட்ராயிங் ட்ரக் அடிக்ஷனின் கோர முகத்தைக் காட்டுகிறது. இதற்கு 4 ஆம் பரிசு கிடைத்தது.
பென்சில் ட்ராயிங்கில் கம்யூட்டர் பைனரி கோட் கள் போல இரண்டு சிம்பல்களை மட்டும் உபயோகப்படுத்தி வரைந்துள்ளேன். மோனாலிகா புன்னகைக்கிறாரா, முறைக்கிறாரா என நன்கு பார்த்துச் சொல்லுங்கள்.:). இதற்கு 5 ஆம் பரிசு கிடைத்தது.
நமக்குக் கார்ட்டூன் எல்லாம் வரையும் அளவு திறமை இல்லை. ( நாம் ஒரு ரெக்கார்டு நோட்டு அண்ட் ஓவிய நோட்டு ஓவியர்பா..:) தரையில் ரங்கோலி, க்ரைன் கார்ப்பெட், சாண்ட் கார்ப்பெட், மாக்கோலம், பொடிக்கோலம் போன்ற போட்டிகளும் நடைபெறும்.
கல்லூரியில் உங்களைக் கவர்ந்த இடத்தை வரையுங்கள் என்றார்கள். ஆஷா இன்ஃபேண்ட் ஜீசஸ் சிலையையும் கெபியையும் வரைந்து முதல் பரிசு பெற்றாள். நாம எப்பவும் ஜூவாலஜி லாபிலிருந்து பராக்குப் பார்க்கும் ரோட்டை இதில் நான் வரைந்துள்ளேன். பரிசு எதுவுமில்லை.. பின்ன வேடிக்கை பார்த்ததுக்கெல்லாம் பரிசா கொடுப்பார்கள்.
ரங்கோலி , க்ரெயின் கார்ப்பெட் , சாண்ட் கார்ப்பெட் போன்றவை துறை, மற்றும் வருடம் வாரியான குழுமப் போட்டிகள், பொடிக்கோலம், மாக்கோலம் போன்றவை தனிப்போட்டிகள். ஒவ்வொரு போட்டியிலும் இரண்டாம் மூன்றாம் இடத்தையாவது பெற்றுவிடுவோம். :)
இந்தக் கோலங்கள் எல்லாம் டீம் வொர்க். எனவே வேதியல் துறைக்கு 3, 4 ஆம் இடம் கிடைத்தது. ஆர்ட்ஸ் க்ரூப்கள்தான் இதிலெல்லாம் முதலிடம். நாங்கதான் எப்பவும் லேபே கதின்னு கிடக்கிறவங்களாச்சே. வெள்ளிக் கிழமைகளில் அசோசியேஷன் ஹவர்ஸுக்கே ஆரம்பிச்சபின்னாடிதான் லேபிலேருந்து ஓட்டையான ஏப்ரன கழட்டியபடி ஓடி வருவோம்.
சும்மா திருமணம்தான் செய்துக்கப் போறோம்னா ஏதோ ஹிஸ்டரி, சோஷியாலஜி எடுத்துப் படிச்சிட்டு இதெல்லாம் ஜாலியா என்ஜாய் செய்திருக்கலாம். வேதியல் படிச்சுட்டு ( கல்யாணம் ஆனப்புறம்) குழம்பு வைக்கும் போது கான்சண்ட்ரேஷனா இருந்தா வாட்டர் ஆட் பண்ணி டைல்யூட் பண்ணுன்னு பேசி தொப்பி வாங்கியதுதான் மிச்சம். :)

5 ஆம் பரிசு படம் திருப்தியாக சிரிக்(இருக்)கிறது போல் உள்ளது... வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குதொப்பி வாங்குவதும் சந்தோசம் தானே... ஹிஹி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அத்தனையும் அசத்தல்..
பதிலளிநீக்குநல்லாப் பார்த்தாச்சு. மோனாலிசா சிரிக்கிறாங்க.
Muthalidam kidakka pokuthu ippothu kavalai padaatheer.
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
பதிலளிநீக்குநன்றி சாரல். :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!