எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
PAINTINGS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PAINTINGS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 நவம்பர், 2017

நான் வரைந்த பென்சிலைகளும் பேனாக்காதலர்களும்.

கல்லூரியில் படிக்கும்போது பாடம் நல்லா எழுதுறமோ இல்லையோ படம்நல்லாப் போடுவேன். தினம் ரெக்கார்ட் நோட் வரையிறதையே ப்ளஸ்டூவில் இருந்து காலேஜ் வரை ஒரு தவம் மாதிரிப் பண்ணிட்டு இருந்தேன்.

முதல் இரண்டு வருடம் பிஸிக்கிஸ் ஆன்சில்லரி. மூன்றாம் வருடம் ஸூவாலஜி. அதே போல் முதல் இரண்டு வருடம் மொழிப்பாடங்கள் உண்டு. தமிழ் & ஆங்கிலம். மூன்றாம் வருடம் மேஜர் சப்ஜெக்ட்ஸ் மட்டும்தான்.

இந்தப் படம் THE SECRET OF WORK BY VIVEKANANDA என்ற ஒரு  ஆங்கில அசைன்மெண்டுக்காக வரைந்தது. மிஸ் இதுக்காக நாலரை மதிப்பெண் கொடுத்திருக்காங்க. :)

மணியம் செல்வன், கோபுலு, ராமு, ஆதிமூலம், ட்ராட்ஸ்கி மருது, ஜெயராஜ், மாருதி என்று எனக்குப் பிடித்த ஓவியர்கள் அதிகம். இவர்களின் பாணியை வைத்தே சொல்லிவிடலாம்.  மசெவின் நாயகிகள் ஆங்கில வனிதைகளாகவும் ஜொலிப்பார்கள். திட்டமான எல் போன்ற மூக்கும் நேர்க்கோடுகளும் இவர் ஸ்பெஷல். சொஃபிஸ்டிகேடட் & ரிச் லுக் இருக்கும் இவரது ஓவியங்களில். மேன்மக்களைப் போல இருப்பார்கள் அனைவருமே.

கோபுலு அதிகம் நாடகம், சிறுகதைகளில் மனிதர்களின் செழிப்பான உருவத்தையும் நல்ல கிளி போன்ற மூக்கையும் வரைவார். தீர்க்கமான ஓவியங்கள். சமூகத் தொடர்களில் இவரது ஓவியம் பரிச்சயம்.

ராமுவின் ஓவியங்கள் சுருட்டைக் கேசம் போல் சுருண்டு சுருண்டு இருக்கும் . அந்த ஒவ்வொரு சுருளும் வெகு அழகாக வந்து மனதிற்குள் ஒரு உருவைப் படைப்பது அற்புதம். அக உணர்வைப் படைக்கும் ஓவியங்கள். வெகு தீவிரமான ஓவியமொழி இவருடையது.

ஆதிமூலம் ஓவியத்தில் முகத்தின் நிழல்களும் பேசும். !. கோட்டுச்சித்திரபாணி இவருடையது. வெகு சிக்கலானது . சில சமயம் கறுப்பு வெள்ளைப்  புகைப்படங்கள் போன்றது.

ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியம் கம்பீரமானது. ஒன்றில் ஒன்றைக் கொண்ட இரட்டை ஓவியங்களாக இருக்கும். மனிதர்களும் பொருட்களும் கலந்து கட்டி நம்மை அக்கதையின் கருவை தீவிரமாக உணரவைப்பார்கள். சாட்டையை வீசியது மாதிரி  ஒரு அடர் மொழி கொண்டது இவரின் ஓவியங்கள்.

ஜெயராஜ் கேட்கவே வேண்டாம் ஓவிய உலக பிரம்மா. பெண்களையும் ஆண்களையும் செக்ஸியாகப் படைத்து உலவ விடுபவர். சுஜாதா கதைகள் என்றால் இவர் படம்தான் ஞாபகம் வரும். அபாரமான , அபாயகரமான சடன் ஸ்ட்ரோக்குகள் இவரின் ஸ்பெஷாலிட்டி.

மாருதி காவியக் காரிகைகளைப் படைத்துக் காதலிக்க வைப்பவர். இவரின் நாயகிகள் சுருட்டைக் கேசமும், அழகிய இதழ்களும் காந்தப் பார்வையும்  கொண்டு காதலிக்க வைப்பவர்கள். இவரது ஓவியங்களைப் பார்க்கும்போது தண்ணென்ற குளிர்ச்சி பரவும்.  இவர்கள் அனைவருமே என் ஆசான்கள். நான் ஒரு பத்துப்பன்னிரெண்டு படம்தான் வரைந்திருப்பேன். அதுவும் மூன்று நான்கு மணி நேரம் எடுக்கும். ரப்பர் எல்லாம் போட்டு அழிப்பதுண்டு :) எடுத்தவுடன் மெல்லிசாக அவுட்லைன் போட்டுப் பின் வரைவேன். பென்சிலாலும், பேனாவாலும் இண்டியன் இங்காலும் ( பேனாவில் தொட்டு ) வரைந்ததுண்டு. முன்பு கூட நான் கலந்துகொண்ட காம்பெடிஷன்களின் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்களைப் போட்டிருந்தேன்.

இந்த ஓவியப்  பெண் மண்டி போட்டிருக்கும் பொஸிஷன் சரியில்லை என்று இப்போது தோன்றுகிறது . அதேபோல் டிசைன் சங்குபோல் அல்லது குட்டிக் கொம்பு போல் ( கொம்பூதுதல் )  ஒன்றை வரைந்துள்ளேன். சங்கு இப்படி இருக்குமா தெரியல. :) தலையிலிருந்து விழும் சல்லாத்துணி ரொம்பப் பிடித்தது.
இது யாரோ வரைந்ததை பத்ரிக்கையில் பார்த்து வரைந்திருப்பேன் என நினைக்கிறேன். ஹாஸ்டலில் இருக்கும்போது ஓவியக்காரி என நினைத்துப் பார்த்த வெட்டி வேலைகள் இப்போது ப்லாக் போஸ்டாக உதவுகின்றன. :)

திங்கள், 12 ஜூன், 2017

காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும்.

மயில்மேல் வள்ளி தெய்வானையுடன் ஷண்முகநாதன்.

செந்தாமரைப்பூவில் மஹாலெக்ஷ்மி 

காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும்.

அதென்னவோ தெரியலை. விநாயகரை ( பிள்ளையார்பட்டி விநாயகர் படம் தவிர ) இங்கே உள்ள வீடுகளில் ஓவியமா பார்ப்பது அரிதாயிருக்கிறது.

கிட்டத்தட்ட நூறாண்டுகள் நூற்று நாற்பதாண்டுகள், இருநூறு ஆண்டுகள் தாண்டிய வீடுகள் இங்கே இருக்கின்றன. இவற்றில் தேக்குமர வேலைப்பாட்டுக்கே ஒருவர் ஆயுள் முழுதும் சம்பாதிக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் ரங்கோன்/மியான்மரிலிருந்து தேக்குக் கட்டைகளைக் கப்பலில் அனுப்பி அவற்றை வெட்டித் தொண்டி துறைமுகத்துக்கு படகில் எடுத்து வந்து அதன் பின் மாட்டு வண்டியில் வீடு வந்தடைந்து செதுக்கி தூண்கள் கடைந்திருக்கிறார்கள்.

மேல்தளம், ரீப்பர்கள், தூண்கள், சப்போர்ட் அலங்காரங்கள், இன்னபிற செய்த தச்சர்கள் என்ன ஆனார்களென்றே தெரியவில்லை.. இதேபோன்ற ஒன்றே ஒன்றைக்கூட இன்றிருக்கும் தச்சர்களால் உருவாக்க முடியாது.

மர வேலைப்பாடுகளின் வரலாறாவது கொஞ்சம் புரிபடலாம்.

ஆனால் இந்த இயற்கை வண்ண ஓவியங்கள் யார் வரைந்தது என்றே தெரியவில்லை. இதன் பின் பெரும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.

பெரும்பாலும் ஸ்ரீதேவி பூதேவியுடன் கருடனில் பறக்கும் பெருமாள், தான்ய லெக்ஷ்மி, தனலெக்ஷ்மி, தாமரைப் பூவிலமர்ந்த மஹாலெக்ஷ்மி, மயில்மேலமர்ந்த முருகன் வள்ளி தெய்வானை, வெண்ணெய்த்தாழிக் கிருஷ்ணன், பாமா ருக்மணியுடன் கிருஷ்ணன், ராதையுடன் கிருஷ்ணன், கோபியருடன், யசோதையிடம் பாலருந்தும் பாலகனாக, ஆவினங்கள் சூழ என அநேகம் கிருஷ்ணனைச் சுற்றியே அமைந்துள்ளன.

ஓரிரு ஓவியங்கள் மட்டுமே வட்ட டிசைன்கள், பூக்கள், இலைகள், யாழ் வாசிக்கும் இரு மகளிர், அதன் மேல் விளிம்பில் குதிரையும் சிங்கமும் கொடிபிடிக்கும் தோற்றம், என வித்யாசமாக உள்ளது.  


புதன், 17 மே, 2017

காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.



கிருஷ்ணலீலையைப் படமாக வரைந்து வைத்திருக்கிறார்கள். பல்வேறு ஆண்டுகள் பராமரிப்பு இன்மையால் பூட்டிய வீட்டின் அறைகளுக்குள் எல்லாம் காரை பிடித்துப் போய்க் கிடக்கின்றன. 
கிருஷ்ணனின் ராசலீலை ஓவியங்களில் நான்குதான் தேறியது.





திங்கள், 9 நவம்பர், 2015

காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

காரைக்குடி வீடுகளில் இம்மாதிரியான 202. ஓவியப் படங்களைக் காணமுடியும். கிருஷ்ணர் ராதை , குழந்தைகள் அம்மாக்கள், தேவதைகள் கண்ணுக்கு விருந்தாய் பல புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். ஆனா இது 203. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னான கால கட்டத்தில் நிகழ்ந்திருக்கும்னு தோணுது. ஏனெனில் பெரும்பாலான ( கிருஷ்ணர் ராதை, புராண இதிகாச சம்பவங்கள் தவிர ) ஆங்கில மாதுக்களும் அவர்களின் அழகு ( அம்மண ! ) குழந்தைகளும் தோட்டத்தில் அல்லது மரத்தைச் சுற்றி ஆடும் படங்கள்தான்.
மேலே பாருங்க என்னா சேட்டை என்னா சேட்டை. ரெண்டு பயலுக அந்தர் பல்டி அடிக்கிறானுங்க ரெண்டு பேர் கை கோர்த்து தட்டாமாலை சுத்துறானுங்க. வீட்டுல வைச்சு மேய்க்க முடியலன்னு தோட்டத்துக்கோ மரத்தடிக்கோ தள்ளிட்டு வந்துட்டாங்க போல அம்மாக்கள். ஆனா பாருங்க எல்லாம் ஒன்னு ரெண்டுல்ல கிட்டத்தட்ட ஒன்றரை டஜன் குழந்தைகள். !
ஆனா அம்மாக்கள் இருவர்தான். ஒருவர் கைக்குழந்தை தேவதையை முத்தாடுகிறார். அவரின் முழங்காலைப் பற்றி தன்னைக் கொஞ்சமாட்டாரன்னு ஒன்னு பார்த்துட்டு இருக்கு. இன்னொருவரின் உடைக்குள் முகத்தை மூடிப் பொதித்துக் கொள்கிறது குழந்தை. அந்த அம்மா கையில் ஒரு தோல் குடுவை. மரத்தின் பீடத்தின் மேல் நிற்கும் இரண்டு குட்டி வாண்டுகள் கீழே நிற்கும் குழந்தை மேல் தண்ணீரைப் பீச்சி அடிக்கின்றன. ! பூக்களால் கட்டப்பட்ட கயிறை வைத்து ஸ்கிப்பிங்க் போல ஒரு ஆட்டம் வேறு நிகழ்கிறது அந்தப் பக்கம்.

வியாழன், 15 அக்டோபர், 2015

காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

துர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ..

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.

காரைக்குடி வீடுகள் தேக்குமரக் கதவுகள், சிற்ப வேலைப்பாடுகள் , ஆத்தங்குடி/இத்தாலியன் மார்பிள்ஸ், பெல்ஜியம் கண்ணாடிகள், வடிவழகோடு அமைக்கப்பட்ட பித்தளைத் தாழ்வாரங்கள், மரச் செதுக்கல்கள், ப்ளாச்சுகள் இவற்றோடு ரசிக்க வேண்டிய இன்னொரு அம்சம் அதன் 182. ஓவியங்கள்.

சுவற்றில் மேலே வரந்தையாக  மற்றும் வாசல் நிலைகளில் ,ஜன்னல் நிலைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் சரித்திர இதிகாச புராண முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும் வாழ்வியல் நிகழ்வுகள், யோகா, தியானம், வாழ்வியல் இச்சை, விலங்குகள், பூக்கள், பறவைகள், தெய்வத் திரு உருவங்கள் போன்றவையும் இடம் பெறும்.

183. வசிஷ்டரும் காமதேனுவும். :-

இங்கே வசிஷ்டரும் காமதேனுவும் ஹோமத்தின் முன்னால். ஒரு வனமே கண்முன் விரிகிறதல்லவா. காமதேனுவிடம் பாலருந்தும் நந்தினி கன்றுக் குட்டியும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.



184/ தனலெக்ஷ்மி :-

வெள்ளி, 21 ஜூன், 2013

இந்தியன் இங்க்- ட்ரக் அடிக்‌ஷன் , பென்சில் ட்ராயிங்- மோனாலிசா, போஸ்டர் கலர் - இயற்கை.

இந்தியன் இங்க்- ட்ரக் அடிக்‌ஷன் , பென்சில் ட்ராயிங்- மோனாலிசா, போஸ்டர் கலர் - இயற்கை.

கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் காம்பெடிஷன்கள் நடக்கும். அதில் இந்தியன் இங்க், பென்சில் ட்ராயிங், போஸ்டர் கலர் இதெல்லாம் தனியாகப் பங்குபெறும் போட்டிகள். இன்னும் கார்டூன் ட்ராயிங் எல்லாம் உண்டு.
Related Posts Plugin for WordPress, Blogger...