எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 24 டிசம்பர், 2016

கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.

என் குழந்தைகள் அணிந்திருந்த கவுடு இது. இதைக் கண்டிகை என்றும் தெய்வீக மணி என்றும் உருத்திராக்கம் என்றும், ருத்ராக்ஷம் என்றும் சொல்கிறார்கள். இப்படி வெள்ளியாலோ தங்கத்தாலோ பிடித்து இருந்தால் ருத்ராக்ஷத்திற்குக் கவுடு என்று பெயர். !

என் குழந்தைகள் சிறியவர்களாய் இருந்தபோது  சிவப்பு/கருப்புக் கயிறு கட்டி கண்டத்தில் படும்படி இதை அணிவித்திருந்தேன். அவர்கள் பாட்டையா ருத்ராக்ஷத்தில் வெள்ளிபிடித்துப் போடும்படிக் கொடுத்திருந்தார்கள். குழந்தைகள் சில வருடங்கள் அணிந்திருந்தார்கள். அந்த சிவப்புக் கயிறு ஒரு முறை அறுந்தபின் (டெல்லியில் பள்ளிப்பருவம் )  அதன்பின் அணிவிக்கவில்லை. :(  இது ஐந்துமுக ருத்ராக்ஷம். ஓம் நமசிவாய என்று ஒரு முறை காலையில் சொல்வதுண்டு.

கண்டத்தில் எப்போதும் படுவதால் ஞாபக சக்தி பளிச்சிடும், சளி போன்ற உடல்நலக் கோளாறுகள் அண்டாது. ருத்ராக்ஷத்தில் பட்டு மேனியில் படும் நீர் மருத்துவ சக்தி கொண்டது என்று சொன்னார்கள்.
ருத்ரனின் கண்களில் இருந்து தோன்றியது என்றும் கண்ணீர்தான் ருத்ராக்ஷமாக மாறியது என்றும் சொல்கிறார்கள். ருத்ராக்ஷ மரங்களில் இருந்து விளைந்த பழங்களே ருத்ராக்ஷ மணிகள் என்கிறார்கள். ஹரித்துவார் ரிஷிகேஷ் சென்றபோது அங்கே நிறைய ருத்ராக்ஷ மாலைகள் விற்பனையில் இருந்தன. ஆனால் சுத்தபத்தமாகப் போடவேண்டும் என்று சொன்னதால் வாங்கவில்லை. வீட்டில் இருக்கும் ருத்ராக்ஷமாலை ஐயப்பன் கோயிலுக்குப் போகும்போது போட்டுக் கொள்வார்கள். சிலர் இதில் சிறு ருத்ராக்ஷங்களாகப் பொறுக்கி தங்கம் பிடித்துப் போடுவதுண்டு. நெல்லி அளவுள்ள பெரிய ருத்ராக்ஷங்களே சிறப்பு என்று சொல்லப்படுகிறது.
ஒன்றுமுதல் 21 முகங்கள் வரை கொண்ட ருத்ராக்ஷங்கள் உண்டு. அவற்றை அணிந்தால் பாவம் போகும், கோள்களின் கொடுமை அடங்கும், மும்மலம் நீங்கும், நோய் நொடி தீரும், லெக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கண் திருஷ்டி போக்கும், வியாபாரத்தை அதிகரிக்கும், பார்ப்பது புண்ணியம் அணிவது அதைவிடப் பலமடங்கு புண்ணியம் தரும், என சிவமஹா புராணம், பத்மபுராணம் , தேவி பாகவதம், சிவரகஸ்யம், திருக்கோட்டூர் புராணம் ஆகியன சொல்கின்றன.


அண்டவெளியில் உள்ள கதிர்களை வாங்கிச் சேமித்து வைக்கின்றன. இதை அணிந்து பூஜை நியம நிஷ்டைகள் செய்யும்போதும் இதன் மேல் தண்ணீர் பட்டு மேனியில் படும்போதும் பலன்கள் அதிகரிக்கிறது .

துறவியரும் சிவனடியாரும் மட்டுமல்ல . ( இங்கே திருவாசகம் முற்றோதல் செய்யும் ஆண்பெண் அனைவரும் ருத்ராக்ஷம் அணிகிறார்கள் ). மங்கையரும், குழந்தைகளும் கூட அணியலாமாம். கபிலநிற, வெண்ணிற, கருப்பு நிற செந்நிற பொன்னிற ருத்ராக்ஷங்கள் உண்டென்று சொல்லப்படுகிறது. சிரவண/ஆவணிமாதத்தில் அணிவது சிறப்பென்று கூறுகிறார்கள்.

பெங்களூரு போன்ற நகரங்களில் ருத்ராக்ஷ கண்காட்சிகள் நடத்தப்படுவதோடு எண் கணிதப்படி பிறந்தநாளை ஒட்டி ருத்ராக்ஷம் தேர்ந்தெடுப்பதைக் குறித்தும் மாலை செய்து அணிவது குறித்தும் இலவச விளக்கம் அளிக்கப்படும் என்று கூறி இருந்தார்கள். !

உடம்பில் உள்ள ஏழு சக்கரங்களை ருத்ராக்ஷம் அணிவது சமநிலைப் படுத்துது. மனித உடலில் உள்ள நரம்பு மண்டலத்தின் மின்காந்த சக்தியைத் தூண்டி முக்தியை அடையச் செய்கிறது. தூக்கமின்மை , மனச்சோர்வு, மன அழுத்தம், இதயநோய், தோல் நோய், இரத்த அழுத்த நோய் ஆகியவற்றை நீக்குது. எனவே இதை ருத்ராக்ஷ தெரஃபி என்று சொல்கிறார்கள் ! .

சிவ கோத்திரத்தில் பிறந்த அனைவரும் ருத்ராக்ஷமும் விபூதியும் அணிந்து ஐந்தெழுத்து மந்திரத்தினை ( திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாட்சரம் )  தினம் இரு முறையாவது சொல்வார்கள். இங்கே இருப்பவை எல்லாம் நகரச் சிவன் கோயில்களே. எனவே ருத்ராக்ஷம் அணிவது வாழ்வில் இன்றியமையாதது ஆகிறது.



6 கருத்துகள்:

  1. ஹரித்வாரில் ருத்ராக்ஷ மரங்கள் பார்த்திருக்கிறேன். அவை அணிவதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் படித்ததுண்டு. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கவுடு என்ற சொல்லை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் காசிக்குச் சென்றபோது ஓர் ஊரில் ருட்ராட்ச மரத்தைப் பார்த்தோம். பல புதிய தகவல்களை இப்பதிவு மூலமாக அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ருத்ராஷம் பற்றி அறிந்திருந்தாலும் உங்க பதிவிலிருந்து பல தகவல்கள் அறிய முடிந்தது.

    பதிலளிநீக்கு
  4. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்.

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...