எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கவுடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவுடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 டிசம்பர், 2016

கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.

என் குழந்தைகள் அணிந்திருந்த கவுடு இது. இதைக் கண்டிகை என்றும் தெய்வீக மணி என்றும் உருத்திராக்கம் என்றும், ருத்ராக்ஷம் என்றும் சொல்கிறார்கள். இப்படி வெள்ளியாலோ தங்கத்தாலோ பிடித்து இருந்தால் ருத்ராக்ஷத்திற்குக் கவுடு என்று பெயர். !

என் குழந்தைகள் சிறியவர்களாய் இருந்தபோது  சிவப்பு/கருப்புக் கயிறு கட்டி கண்டத்தில் படும்படி இதை அணிவித்திருந்தேன். அவர்கள் பாட்டையா ருத்ராக்ஷத்தில் வெள்ளிபிடித்துப் போடும்படிக் கொடுத்திருந்தார்கள். குழந்தைகள் சில வருடங்கள் அணிந்திருந்தார்கள். அந்த சிவப்புக் கயிறு ஒரு முறை அறுந்தபின் (டெல்லியில் பள்ளிப்பருவம் )  அதன்பின் அணிவிக்கவில்லை. :(  இது ஐந்துமுக ருத்ராக்ஷம். ஓம் நமசிவாய என்று ஒரு முறை காலையில் சொல்வதுண்டு.

கண்டத்தில் எப்போதும் படுவதால் ஞாபக சக்தி பளிச்சிடும், சளி போன்ற உடல்நலக் கோளாறுகள் அண்டாது. ருத்ராக்ஷத்தில் பட்டு மேனியில் படும் நீர் மருத்துவ சக்தி கொண்டது என்று சொன்னார்கள்.
ருத்ரனின் கண்களில் இருந்து தோன்றியது என்றும் கண்ணீர்தான் ருத்ராக்ஷமாக மாறியது என்றும் சொல்கிறார்கள். ருத்ராக்ஷ மரங்களில் இருந்து விளைந்த பழங்களே ருத்ராக்ஷ மணிகள் என்கிறார்கள். ஹரித்துவார் ரிஷிகேஷ் சென்றபோது அங்கே நிறைய ருத்ராக்ஷ மாலைகள் விற்பனையில் இருந்தன. ஆனால் சுத்தபத்தமாகப் போடவேண்டும் என்று சொன்னதால் வாங்கவில்லை. வீட்டில் இருக்கும் ருத்ராக்ஷமாலை ஐயப்பன் கோயிலுக்குப் போகும்போது போட்டுக் கொள்வார்கள். சிலர் இதில் சிறு ருத்ராக்ஷங்களாகப் பொறுக்கி தங்கம் பிடித்துப் போடுவதுண்டு. நெல்லி அளவுள்ள பெரிய ருத்ராக்ஷங்களே சிறப்பு என்று சொல்லப்படுகிறது.
ஒன்றுமுதல் 21 முகங்கள் வரை கொண்ட ருத்ராக்ஷங்கள் உண்டு. அவற்றை அணிந்தால் பாவம் போகும், கோள்களின் கொடுமை அடங்கும், மும்மலம் நீங்கும், நோய் நொடி தீரும், லெக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கண் திருஷ்டி போக்கும், வியாபாரத்தை அதிகரிக்கும், பார்ப்பது புண்ணியம் அணிவது அதைவிடப் பலமடங்கு புண்ணியம் தரும், என சிவமஹா புராணம், பத்மபுராணம் , தேவி பாகவதம், சிவரகஸ்யம், திருக்கோட்டூர் புராணம் ஆகியன சொல்கின்றன.