எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 டிசம்பர், 2016

அஞ்சீர் நட்ஸ் அல்வா ( அத்திப்பழ அல்வா )

அஞ்சீர் நட்ஸ் அல்வா ( அத்திப்பழ அல்வா )

தேவையானவை:- காய்ந்த அத்திப்பழம் – பதினைந்து , நெய் – கால் கப்,, பாதாம் + முந்திரி  – ஊறவைத்து தோலுரித்து பொடித்தது – அரை கப், சர்க்கரை – முக்கால் கப் , பால்பவுடர் – முக்கால் கப் , ஏலப்பொடி – கால் டீஸ்பூன், அலங்கரிக்க குச்சியாக நறுக்கப்பட்ட பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து காய்ந்த அத்திப்பழங்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும். மென்மையானவுடன் தண்ணீரை வடிகட்டவும். மிக்ஸியில் வேகவைத்த அத்திப்பழங்களை மட்டும் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து வைக்கவும். நெய்யை அடி கனமான பாத்திரத்தில் போட்டு பொடித்த பாதாமை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். இதில் அரைத்த அத்திப்பழ பேஸ்ட்., பால்பவுடர், சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் விடாமல் கிளறவும். இறுகியதும் ஏலப்பொடி தூவி இறக்கி பாதாம் துருவல் தூவிப் பரிமாறவும்.

இதில் அடங்கி உள்ள சத்துக்கள்.

அத்திமரத்தில் பூவும் விதைகளும் சேர்ந்தே அத்திப் பழமாக உபயோகப்படுகின்றது. இது உணவை விரைவில் ஜீரணிக்க செய்கின்றது. மலச்சிக்கல் நீங்கும். பித்தத்தை வெளியேற்றி சுறுசுறுப்பைக் கொடுக்கும். ஈரல் நுரையீரலையும் சுத்தம் செய்கின்றது. கால் நோய் வராது, வாய் துர்நாற்றத்தை நீக்கும். தலைமுடியும் நீளமாக வளர்கிறது இதைக் குழந்தைகள் சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரித்து உடல் சீரான வளர்ச்சி அடையும். கண்பார்வையைத் தெளிவாக்கும் விட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவையும் இரு மடங்கு தாது உப்புகளும் இரும்புச்சத்தும் அடங்கி இருக்கிறது. மாங்கனீசு பொட்டாசியம் கால்ஷியம் நார்ச்சத்து அதிகம் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இரும்பு 2 மிகி, கால்ஷியம் 100 மிகி, புரதம் 2 கி இருக்கிறது.

பாதாமில் நார்ச்சத்தும் புரதமும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான நல்ல கொழுப்பும் விட்டமின் ஈயும், மாங்கனீசும் மக்னீசியமும் பைட்டிக் அமிலமும் அடங்கி உள்ளன.

முந்திரியில் செலினியம் காப்பர் மக்னீஸியம் இருக்கு. நரம்பு எலும்பு முடிவளர்ச்சி ஆகியவற்றுக்கு நல்லது.  நெய்யில் விட்டமின் ஏ, ஈ, கே 2, சிஎல்ஏ அமிலம் ஆகியன அடங்கி இருக்கு.கான்சர் வருவதைத் தடுக்கிறது. சீனியில் எனர்ஜி கிடைக்குது. எனவே அஞ்சீர் அல்வா சாப்பிட்டு தேர்வுகளை அஞ்சாம எதிர்கொள்ளுங்கள். 


 ிஸ்கி:- ஓட்ஸ் ஹி பர்ஃபி செய்முறையைப் ாராட்டிய நெய்வேலி வாசி எஸ்.கே. ஸ்ரீவித்யாகண்ணன் அவர்குக்கன்றி. !

3 கருத்துகள்:

  1. அஞ்சீர் மிகவும் நல்லது. அது பயன்படுத்திய ஹல்வாவும்........

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...