எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 14 டிசம்பர், 2016

இங்கிவரை யாம் பெறவே…



இங்கிவரை யாம் பெறவே…

நன்றி அறிவித்தல் நாள் என்று உலகெங்கும் நவம்பரில் கொண்டாடப்படுகிறது. நம் வாழ்வில் வருடம் 365 நாளும் நமக்கு சேவைசெய்து வரும் சிலருக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதவே போதாது. 

தேவதைகள் உபதேவதைகள் என்று கேள்விப்பட்டிருப்போம். என் ஆயாவைச் சுற்றி இருந்த, இருக்கும் உபதேவதைகள் சிகப்பி அக்கா, ராமாயி அக்கா, பாக்கியத்தக்கா, சித்ரா, பாண்டி அக்கா, பாக்கியம். இதில் சிகப்பி அக்கா சற்றேறக்குறைய கால் நூற்றாண்டுக்கும் மேல் எங்கள் ஆயாவீட்டில் பணிபுரிந்திருப்பார். அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைத்து ருசிவரச் சமைப்பார். 

பெயருக்கேற்றார்போல சிகப்பாக இருப்பார் சிகப்பி அக்கா. குவர்த்த் ண்டட்டி மாட்டி இருப்பார். அவர் சிகப்புக்கும் அழுக்கும் அு ரொம்பப் பத்ாக இருக்கும். ாமாயி அக்கில் கிறு மாட்டி உருண்டக் ண்ணாடி போட்டிருப்பார். மூவக்கும் உள்ள ஒற்றுமை என்னென்றால் முன்கொசுவம் வத்ுச் சேலை கட்டாமல் பின்கொசுவம் வத்த் ட்டுச் சுற்றாகக் கட்டி இருப்பார்கள். மூவுமே அள்ளி முடிந்தண்டை போட்டிரப்பார்கள். எளிமை என்பன் உருவங்கள்.

தினப்படி சமையல் போகத் திருகையில் உப்புமாவுக்கு உடைப்பதும், சீடைக்காய் உருட்டுவதும், பத்தி வளவுகளில் உப்புக்கண்டம், ஊறுகாய் வத்தல் வரளி என்று எதையாவது காயவைத்து எடுப்பதுமாக இருப்பார்கள் ஆயாவும் சிகப்பி அக்காவும். 

அமயம் சமயம் என்றால் வீடு மெழுகித்தரவும் மெஷினுக்குப் போய்வரவும் பலகாரம் செய்தால் உதவி செய்யவும் என்று ராமாயி அக்கா வருவார். 



சொல்லி விட்டால் போதும் பாக்கியத்தக்கா நெல் அவிக்க வந்துவிடுவார்கள். நெல்லறையில் இருந்து நெல் அள்ளி வந்து மிகப் பெரும் காண்டா அடுப்பில் விறகெரித்து நெல் அவிக்கும் கிடாரத்தில் போட்டு பித்தளை அகப்பையால் கிளறும் காட்சி அந்த வயதில் ஆச்சர்யப்படுத்தியதுண்டு. 

கரண்டியால் அள்ளிப் போட்டு பத்தியில் வரிவரியாய்க் கிண்டிவிடுவதும் காய்ந்ததும் மூட்டையாக அள்ளி மெஷினுக்குச் சென்று அரைத்து வந்து உஸ் உஸ் என்ற ஒலியோடு சுளகில் புடைத்துச் சிலாத்தும் காட்சியும் ஓவியமாய்ப்  படிந்த ஒன்று. புடைத்து எடுக்கும்போது கல் நெல் பொறுக்கி இடிந்தது, முழுசு, குருணை என்று பிரித்து இடிந்ததைக் கொழுக்கட்டை, புட்டு போன்றவைக்கும், முழு அரிசியை சோறு வடிக்கவும், குருணையை இட்லிக்கும் பிரித்துக் கொட்டுவார்கள்.  இப்போதைப் போலக் கடை அரிசி எல்லாம் இல்லை. 

அம்சு அக்கா கனகு அக்கா ஆகியோரையும் மறக்க இயலாது. சின்னக் குழந்தையாயிருந்தபோது என்னைத் தூக்கி வைத்திருந்த அம்சு அக்காவை காரைக்குடியில் ஒரு நாள் சந்தித்தேன். தேனுக்கண்ணு என்று கூறி கட்டிப்பிடித்துக் கொஞ்சி முத்தமிட்டார்கள். அந்த இனிப்போடு ஒரு புகைப்படம் எடுத்தேன். இப்போது பஜ்ஜிக்கடை நடத்தி வரும் தம்பிக்கு உதவியாக இருக்கிறார்கள். சிகப்பி அக்கா, அம்சு அக்கா, பாக்கியம் அக்கா ராமாயி அக்கா, கனகு அக்கா இவர்களெல்லாம் எங்கிருந்தோ வந்த கண்ணன் போன்றவர்கள். இந்த அன்பைப் பெற என்ன தவம் செய்துவிட்டோம்..


கனகு அக்காவின் பிள்ளைகள் இப்போது வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.அவர்களின் சின்ன மகனுடன் ஆஸ்த்ரேலியா சென்று ஒரு மாதம் தங்கிவிட்டு வந்திருக்கிறார்கள். ஒரு திருமண வைபவத்தில் என்னைக் கண்டதும் கட்டி அணைத்து முத்தமிட்டுக் கொஞ்சினார்கள். எனக்கும் மிக மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்து எனக்காகத் தொண்டு செய்த கண்ணனைக் கண்டதில்.

இவர்கள் சிறு குழந்தையாயிருந்தபோது எங்கள் ஆயா வீட்டில் என்னைத்தூக்கி வைத்திருந்த கனகு அக்கா. 😍😍😍😍

 
முத்தி அக்கா எண்ணெய் தேய்த்துவிட வாராவாரம் வருவார்கள். அதே போல் முத்தாத்தா அக்கா முழுக்குத் துணி எடுக்கவும் வெளுக்கவும் வருவார்கள். இவர்கள் எல்லாரு ஆண்டான் அடிமை என்றில்லாமல் ஒண்ணுமண்ணாப் பழகி வருவார்கள். ஆயா பெருவாரியாகக் கொடுப்பது போக சிகப்பி அக்காவும் கருப்பாயிக்கு உப்புமா, சீடைக்காய், சீகைக்காய் என்று எடுத்து வைத்துக் கொடுப்போம் என்று ஆயாவிடம் சொல்வார்கள்.
 
அனுவல் சமயங்களில் மீன் உரசும்போது சிகப்பி அக்கபார்க்க விடமாட்டார்கள். ’ஏ புள்ள குட்டிகளா உள்ளே ஓடிப் போங்க.. மீன் உரசுரதப் பார்த்தா சாப்பிட மாட்டீர்கள்’ என்று சொல்லி விரட்டுவார்கள். இன்றும் கூட அக்கா அம்மியில் அரைக்கும் மசாலா வாசத்துக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. ஆயாவிடம் பணி புரிந்தபின்னர் என் இரு தம்பிகளுக்காக வடித்துபோடவும் சென்னை வந்து சில ஆண்டுகள் தங்கி இருந்தார்கள்.

ராமாயி அக்காவும் பாக்கியத்தக்காவும் மறைந்தது வருத்தமளித்தது என்றால் சிகப்பி அக்காவின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. கருப்பைப் புற்று என்று தெரியாமல் ரத்தக்கசிவு என்று நினத்ுச் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். தன் சொந்த ஊருக்குச் சென்று சிலகாலம் வாழ்ந்திருந்து இறைவனடி சேர்ந்தார்கள். நம் குடும்பத்தில் ஒருவராகவே பழகி நமக்காகவே உழைத்து வாழ்ந்து மறைந்துசென்ற மாமிர்கான இவர்களை எல்லாம் மறக்கக் கூடுமோ.

4 கருத்துகள்:

  1. நல்ல செயல், உதவி போன்றவற்றை நன்றி என்று சொல்வது தான் பொருத்தம். அந்த நன்றிகளை நல்ல செயல்களைப் போற்றுவது தான் செய்நன்றி அறிதல். அந்த செய்நன்றி அறிதலை நெகிழ் வோடு செய்துள்ளீர்கள்.
    ஒரு குவளை நீர் கொடுத்தற்கு எல்லாம் நன்றி சொல்லி கணக்கை வெற்றுச் சொற்களால் நேர் செய்வது மேற்கத்திய கலாச்சாரம். அந்த செய்நன்றி அறிதலை நெகிழ்வோடு செய்துள்ளீர்கள். பிறகு, அதன் நீட்சியான உலக நன்றி அறிவித்தல் நாள் என்பதை முன் நிறுத்துவது எதற்கு? நலந்தா

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு. எத்தனை நல்ல மனிதர்கள். இப்போதெல்லாம் இந்த அன்யோன்யம் மனிதர்களுக்கு இருப்பதில்லை என்று தான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  3. நன்றி நலந்தா ஜம்பு சார்

    நன்றி வெங்கட் சகோ உண்மை.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...