எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 15 டிசம்பர், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.

581. கோயில் மாலை வருதல். - முறையான அங்கீகாரம். ஒன்பது கோவில்கள் உண்டு. அவை நகரச் சிவன் கோயில்களாகவும் இருக்கும். மாப்பிள்ளை பெண் இருவர்  சார்ந்த கோயிலிலும் இருந்து மாப்பிள்ளை பெண் இருவருக்கும் கோயில் மாலை வந்தால்தான் அவர்கள் கோயில் புள்ளியாக அங்கீகரிப்படுவார்கள். முதலில் அந்த மாலையைத்தான் மாப்பிள்ளையும் பெண்ணும் அணிவார்கள்.

582. வாழைப்பழம் தடவுதல் :- திருமணச் சடங்குகளில் ஒன்று. திருப்பூட்டி முடிந்ததும் மாப்பிள்ளைக்கு மச்சினன் கொழுந்தியாளும் மணப்பெண்ணுக்கு நாத்தனார் கொழுந்தனார்களும் வாழைப்பழத்தை வாயில் ஊட்டுவதாகத் தடவி விடுவார்கள் . ( இன்றைய பர்த்தே பார்ட்டிகளில் கேக்கை அப்புவது போல :) 

583. சாப்பாடு போடுவது :- திருப்பூட்டி முடிந்ததும் மணவறையில் மாப்பிள்ளை அமர்ந்திருக்க பெண் சாப்பாடு போடுவார். ஒரே பாத்திரத்தில் புதிதாகச் சமைத்த சாதம் குழம்பு கறி எல்லாவற்றையும் ( ஐயர் சொல்லச் சொல்லப் ) பெண் போட  மாப்பிள்ளை அதை ஆட்காட்டி விரலால் தொடுவார். அதன்பின் கைகழுவ மாப்பிள்ளைக்கு அதிலேயே தண்ணீரை ஊற்றுவார் மணப் பெண். இது ஒரு சடங்கு மட்டுமே. சில ஊர்களில் மாப்பிள்ளைக்கு இலை போட்டு முட்டை எல்லாம் அவித்து வைத்துப் பரிமாறுவார்கள்.

584. தலைச்சீலையில் முடிவது :- பெண்ணிடம் ஒரு வெற்றிலை பாக்கைக் கொடுத்து இடுப்பில் முடிந்து வைத்துக் கொள்ளச் சொல்வார்கள்.

585. சதுர ஆலாத்தி & நீராலாத்தி:-  இட்லியில் மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் விட்டுப் பிசைந்து நான்கு சிவப்புக் கூம்புகளாகச் செய்து அதில் திரியைச் செருகி வைப்பார்கள். பெண்ணழைக்கும்போது சதுர ஆலாத்தி எடுப்பது வழக்கம். நீராலாத்தி என்பதில் மஞ்சள், சுண்ணாம்பை நீரில் கலந்து அதில் வெற்றிலையைக் கிள்ளிப் போட்டு மாப்பிள்ளை பெண்ணைச் சுற்றி ஆலாத்தி எடுத்து திருஷ்டி கழியட்டும் என்று கொட்டுவது வழக்கம்.

586. காப்பு அவிழ்த்தல் :- திருமணத்தன்று காலை பகவணம் செய்து ஐயர் கொடுக்கும் காப்பைக் கட்டுவார்கள். (காப்பு என்பது சிவப்புப் பட்டுத் துண்டில் ஒரு சிறிய வெள்ளிக் காசை முடிந்து மணிக்கட்டில் கட்டுவது.) முதலில் மணமகனுக்கும் பின் மணமகளுக்கும் மணையில் அமர்ந்து சடங்குகள் செய்யும்போது அவரவர்  மாமக்காரர்கள் கட்டுவார்கள்.

587. காப்புக் கழட்டிக் கால்மோதிரம் இடல்.:- திருமணம் முடிந்ததும் நாத்தனார் அல்லது மாமியார் மணப்பெண்ணின் கரத்தில் தன்னுடைய காப்பை அணிவித்து அதன் பின் கால்மோதிரம் எனப்படும் மிஞ்சியை ( மூன்று வெள்ளி வளையங்கள் ) அணிவிப்பார்கள். இதற்காக முன்பே அளவெடுத்துச் செய்து வைத்திருப்பார்கள்.

588. கும்பிட்டுக்கட்டிக்கொள்ளுதல் - மாப்பிள்ளையும் பெண்ணும் பெரியோர் அனைவரிடமும் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளுதல்.

589. பெண்ணழைத்தல் :- பெண் வீட்டில் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டில் மாலை நேரத்தில் மேளதாளம் முழங்க உறவினர் சூழ பால் பானையோடு பெண்ணை அழைத்து வருவார்கள்.

590. குலம்வாழும் பிள்ளை எடுத்தல் :- பெண்ணழைத்தபின் சில சடங்குகள் நடைபெறும் அதில் ஒன்று குலம்வாழும் பிள்ளையை எடுத்தல். சாமி வீட்டின் முன் பொங்கல் சமைக்கப்பட்டு மூன்று இலைகளில் போடப்பட்டிருக்கும். அதன் முன் மூன்று செம்புத்தவலைகளில்/அண்டாக்களில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். அந்தத் தண்ணீரில் பெண், மாப்பிள்ளையின் மாமக்காரர்கள் இருவர் கரத்தையும் பிடித்து உள்ளே விடுவார்கள். அதில் ஒரு குழந்தை உருவம் வைக்கப்பட்டிருக்கும். அதை மாப்பிள்ளை தேடி எடுத்துப் பெண் கையில் கொடுக்கவேண்டும். 

591. திருப்பூட்டும் சடங்கு -  மாப்பிள்ளையின் அம்மா செய்துகொள்வது. நிறைநாழி, கத்திரிக்காய் வைத்தும், சிலேட்டு விளக்கு வைத்தும், சடங்குத்தட்டு வைத்தும் கெண்டிச் செம்பில் வெத்திலை. பாக்கில் பால் ஊற்றிச் சடங்கு செய்வார்கள். மணப்பெண் மணையில் நிற்க மாமியார் கீழே நின்று சடங்கு செய்வார்கள். தன்னைப் போல நிறைவாக மணமகளும் வாழவேண்டும் என்று வாழ்த்தவே இச்சடங்கு செய்யப்படுகிறது.

592. மணவறைச் சடங்கு - மாப்பிள்ளையின் சகோதரி செய்துகொள்வது. மேலே கூறியது  போலச் செய்வார்கள்.

593. பெண்ணழைத்த சடங்கு. - இதை மாமியார், நாத்தனார் அல்லது மாப்பிள்ளையின் பாட்டியார் ( தந்தைவழி ) கூடச் செய்து கொள்ளலாம்.

594. அரசாணிக்கால் அவிழ்த்தல். :- திருமணம் முடிந்ததும் நல்ல நேரம் பார்த்துப் பங்காளிகள் அரசாணிக்காலை அவிழ்ப்பார்கள். இதில் கிலுவைக் கம்பு பாலைக் கம்பு அரச இலை ஆகியவை கட்டப் பட்டிருக்கும்.
 
595. பாக்குப் பணம்.- திருமணம் சொல்லப்போகும் இடத்திலெல்லாம் உறவினர்கள் சொல்ல வந்தவர்களுக்குப் பாக்குப்பணம் கொடுப்பார்கள். இது அன்றைக்கு அணாவில் இருந்தது இன்றைக்குப் பத்து ரூபாயாக உயர்ந்திருக்கிறது :)

596. மாத்துக் கட்டுதல்
 நீல மாத்து திருமணத்துக்கு சிவப்பு மாத்து கேதத்துக்கு

திருமணப் பந்தலின் மேல் நீல மாத்துக் கட்டுதல் சிலப்பதிகாரக்கண்ணகி காலத்திலிருந்தே இருக்கிறது . மேலிருந்து பல்லி போன்றவை மணமக்கள் மேல் விழுந்துவிடாமல் இருக்கவே கட்டப்பட்டது இன்று சும்மா தூணுக்குத் தூண் கட்டிவிட்டுப் போகிறார்கள். இதைக் குடிவண்ணார் செய்வார்கள். இன்று வீட்டுக்குத் துணி அயர்ன் செய்து தருபவர்கள் செய்கிறார்கள். 

597. சிவப்பு மாத்து விரிப்பது.

இது இறந்தபின் கட்டத்தலத்துக்கும் போகும் சிவபதவி வண்டியின் முன்னால்   விரித்துச் செல்வது. இதற்கு இறந்தவரின் பெண்பிள்ளைகள் இந்தச் சிறப்பைத் தங்களின் தாய்/தந்தைக்கு வழங்கச் சொல்லி விரிக்கும் ஊழியருக்குப் ( குடிவண்ணார் )  பணம் கொடுப்பார்கள். ரெட் கார்பெட் வழியனுப்புவிழா.

598. உபதேசம் கேட்டல் -   கணவன் மனைவி இருவரும் உபதேசம் கேட்பார்கள் . தினம் குளித்தபின் ஐந்தெழுத்து மந்திரம் ஓதி உடலெங்கும் திருநீறு பூசிக் கொள்வார்கள், ஆண்கள்ிலூர் மத்ிலும் பெண்கள் ுலாவூர் த்ிலும் உபம் கட்பார்கள்.

599. சுவீகாரம். :- பிள்ளை இல்லர்கள் உிலங்கள் கோயில் சார்ந்தர்கின் பிள்ளைகையங்கள் ிள்ளையாகத் த்ெடுப்பு உண்டு. இில் இப்பு பெண் பிள்ளைகையும் சிலர் த்ெடத்ுக் கொள்கிறார்கள். இில் இருப்பர் எு சின்னச் ித்ப்பா.ிள்ளை வச்ென்ற எடத்ு இந்தப் புகைப்பம்.

600. மார்கி , திருவாதிரைப் புதுமை :-   புகைப்படங்கள். சித்தாடை மற்றும் அணிகலன்கள்.  

ில் இருப்பர்கள் எனு அத்ைகள். வந்தா அத்& ீனா அத் ெரியத்ை சஸ்வி & சின்னத்ை ருக்ி. இில் சித்ாடை எனப்பும் அரைப் புடை அளுள்ள ாவிகை அணிந்திருப்பார்கள். காசுமாலை, ங்காய் மாலை போன்றற்றையும் இன்னும் ஒட்டியாணம், காப்பு, டோலக் , ப்ரேஸ்லெட், புரூச் ோன்ற எல்லா நைகையும் அணிந்திருப்பார்கள்.  

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்    



2 கருத்துகள்:

  1. பல சொற்களை நான் கேட்டதில்லை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...