எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 டிசம்பர், 2016

சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டில் இருந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை உள்ள புகைப்படங்களை ஒரு நண்பரின் பாரம்பரிய இல்லத்தில் காண நேர்ந்தது. அதில் இருந்த உயிர்த்துடிப்பும் வாழ்வும் அதைப் புகைப்படம் எடுக்கத் தூண்டியது.

விதம் விதமான ஓவியங்களின் பாணி அவை வரையப்பட்ட வண்ணக் கலவைகள் மற்றும்  லேசாய்ப் பழுக்காய் ஏறிய டிசைன் சட்டங்களால் வடிவமைக்கப்பட்ட கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் கண்ணைக் கவர்ந்தன.

புகைப்படங்கள் ஒரு காலகட்டத்தின் வாழ்வியலை உணர்த்துபவை.

அவை ஒரு நாட்டின் இனத்தின் மக்களின் வாழ்க்கையைப் பதியம் செய்திருப்பவை.

அன்றைய கலாச்சாரம்,நாகரீகம், பண்பாடு, வீடுகள், அன்றைக்குப் புழக்கத்தில் இருந்த உடைகள், நகைகள், விழாக்கள், இறைவழிபாடு ஆகியவற்றை அறிய உதவுகின்றன.

நம் வேர்கள் எவ்வளவு ஆழமானவை என்பதையும் உணர்த்துகின்றன. 

என்னைக் கவர்ந்த சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.

இங்கே சில வெளிநாட்டு வாழ்வியல் ஓவியங்களும் இடம் பெற்றிருந்தன. மலேயா, மியான்மர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழ்ந்திருந்தபோது வாங்கியவையாகவோ வரையப்பட்டனவாகவோ இருந்திருக்க வேண்டும்.

உடையணிந்திருக்கும் பாணியும் பூக்களும் பழங்களும் இவர்கள் கற்பனை மாந்தர்களோ, ரிஷி பத்தினிகளோ, கந்தர்வர்களோ, யட்சிகளோ  என எண்ணத் தோன்றுகிறது.
நிலையில் கண்ணாடியில் எனாமலில் வரையப்பட்ட லெக்ஷ்மியும் யானைகளும்.

நதிக்கரையோரம் காத்திருக்கும் ஆங்கில மாதுவும் ஜப்பானியப் பெண்ணும். காத்திருத்தல் எங்கும் ஒன்றுதான் போல. :)
இன்னொரு புகைப்படத்தில் தூரத்தே தெரியும் கோட்டையும் அதைக் கடந்து கழுதையின் மேல் சுமை ஏற்றி வரும் பெண்ணும்.


இயற்கைக் காட்சிகள். கடற்கரை ஓரமும் தென்னை மரங்களும்.
இயற்கைக் காட்சிகள். பனி படர்ந்த நிலமும் கம்பளி அணிந்த மேய்ப்பரும் செம்மறி ஆடுகளும்.
பழனி தெண்டாயுதபாணி.
பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர்.
இதுதான் சுவிட்ச் போர்டு. கறுப்பு சுவிச்சுகள். இப்பவெல்லாம் எந்தக் குபேரப் பட்டிணத்தில் தேடினாலும் கிடைக்காது :)
ரவிவர்மா எனாமல் ஓவியத்தில் கிருஷ்ணர். நீலவண்ணக் கண்ணன்.:)
அந்தக் காலத்திய குடும்ப நண்பர்கள் உறவினர்கள் புகைப்படம்.
அப்போது கோட் போட்டு எடுப்பது ஒரு ஃபேஷன். அதே போல் பக்கத்தில் ஒரு பூந்தொட்டியும் இடம் பெறும்.
அறுபத்தி மூன்றாம் ஆண்டுப் பள்ளிப் புகைப்படம். ELE  என்றால் எலிமெண்டரி ஸ்கூல் என நினைக்கிறேன்.தெரில.

1938, 40 - 41, & 62 ஆகியவற்றில் எடுத்த சஷ்டியப்தபூர்த்தி , அமெரிக்கன் கல்லூரிப் புகைப்படங்கள். !
அப்பத்தாவோ ஆயாவோ :)
பாட்டையா பாட்டியாயா சஷ்டியப்த பூர்த்தி . தங்களுக்குப் போட்ட மாலைகளைக் குழந்தைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கும் போட்டு அழகு பார்ப்பார்கள்.
71 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்.
அந்தக்கால வீடுகளின் அமைப்பு, ஆண்கள் கழுத்தில் அங்கவஸ்திரம் அணிந்திருப்பது, பெண்கள் பின் கொசுவம் வைத்துத் தட்டுச் சுத்தாகக் கண்டாங்கிச் சேலை கட்டி இருப்பது, சிறுபெண்கள் சித்தாடை அணிந்திருப்பது, பையன்கள் ட்ரவுசர் அணிந்திருப்பது, குழந்தைகள் இரட்டைச் சடை போட்டிருப்பது ஆகியன காணலாம்.  வீடுகளில் சீமை ஓடுகளும் நாட்டு ஓடுகளும் பாவி இருப்பார்கள். வீடுகள் காரைக்கட்டிடங்களாக அமைந்து இருக்கும்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் கவனிச்சீங்கன்னா தெரியும் . அனைவரும் ஹெல்தியா ஒல்லியா இருக்காங்க. ஒபீஸ் யாருமே இல்லை. எல்லாரும் நல்ல உழைப்பாளிகள். சுறுசுறுப்பா பளிச்சின்னு இருக்காங்க. கண்ணாடி போட்டவங்க யாருமே இல்லை. இயற்கை உணவு, இயற்கை உடல்நிலை. கொடுத்து வைத்தவர்கள். :)

9 கருத்துகள்:

 1. நன்றி. அருமை.

  // இயற்கை உணவு, இயற்கை உடல்நிலை. கொடுத்து வைத்தவர்கள்.//
  ஆமாங்க ஆமா. உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்துகொண்டு உழைக்காமத் தின்று ஊதிப்போனவய்ங்க நெறைய இருக்காய்ங்க.

  பதிலளிநீக்கு
 2. நன்றி மாதேவி

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  நன்றி விசு சார் .ஹிஹி யாரை சொல்றீங்க. கம்ப்யூட்டர்லேயே உக்கார்ந்து இருக்குற என்னை இல்லீல்ல :)

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 4. புகைப்படங்கள் மிக அழகு அதிலும் அந்த ஸ்விட்ச் போர்டு, உறவினர் புகைப்படங்கள் அந்தக்காலத்தின் நல்ல சூழலை விள்க்குகிறது நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல்....

  பதிலளிநீக்கு
 5. நன்றி துளசி சகோ

  நன்றி வெங்கட் சகோ

  கருத்துக்கு நன்றி பெயரில்லா.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...