எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 ஜூன், 2016

சிவப்புப் பட்டுக் கயிறு -நூல் வெளியிடு புகைப்படங்கள்.

சென்னையில் நடைபெற்ற 39 வது புத்தகத் திருவிழாவில் எனது ஐந்தாவது நூல் - சிறுகதைத் தொகுதி - சிவப்புப் பட்டுக் கயிறு வெளியிடப்பட்டது.

தென்னக ரயில்வேயில் உயர் பொறுப்பில் இருக்கும் திரு . இளங்கோவன் ஐஆர் எஸ் அவர்களும், சாஸ்த்ரி பவனில் உயர் பொறுப்பில் இருக்கும் திருமதி கீதா இளங்கோவன் அவர்களும் வெளியிட, இயக்குநர் திரு. ஐ எஸ் ஆர் செல்வகுமார் அவர்களும், என் அன்புத் தங்கை புவனேஸ்வரி மணிகண்டன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.

எனது தம்பி அருணாசலம் ,அவரின் துணைவியார்  இந்து, எனது கணவர் , டிஸ்கவரி புத்தக நிலைய வேடியப்பன் சகோ , சஞ்சய் சகோ ஆகியோர் உடனிருக்க, நான் மிகவும் மதிக்கும் வலைப்பதிவர்கள் சுப்பு தாத்தா என்ற சூர்யா சார், கணேஷ் பாலா சகோ, கார்த்திக் சகோ ( ஸ்கூல் பையன் ), பத்ரிக்கையாளர் கவிமணி, இளமதி பத்மா, பாரு குமார், அனிதா ராஜ், கவிதா ரவீந்திரன், மணிவண்ணன் பார்த்தசாரதி, விஜய் மகேந்திரன், கமலி பன்னீர் செல்வம், நாச்சியாள் சுகந்தி, உமா மோகன், லதா அருணாசலம், வெங்கட் சகோ, காஞ்சிபுரம் தியாகராஜன், கோபி கண்ணதாசன், கவிஞர் தஞ்சை எழிலன், மதுமிதா ராஜா, ஆகியோர் கலந்து கொண்டும் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டும் சிறப்பித்தார்கள்.

முக்கியமான தருணத்தில் என் காமிராவும் செல்ஃபோனும் காலை வாரி விட தோழி லதா அருணாசலமும், மணிவண்ணன் பார்த்தசாரதி சாரும், வெங்கட் சகோவும் புத்தக வெளியீட்டைப் படம் எடுத்து அனுப்பி உதவினார்கள். நன்றியும் அன்பும் வாழ்த்துகளும் அனைவருக்கும். என் மதிப்பிற்குரிய இளங்கோ சாரும், தோழி பத்மா இளங்கோ அவர்களும் கலந்து கொள்ளவில்லை என்ற குறையைத் தவிர வேறொன்றும் இல்லை. இரு நாட்களாக உடல் நலக் குறைவினால் நிகழ்வைப் பதிவேற்ற இயலவில்லை. இப்போதுதான் நேரம் கிடைத்தது.நன்றி மக்காஸ்.

 புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.


சிவப்புப் பட்டுக் கயிறு - புத்தகத்தைப் படித்துவிட்டுக் கூறுங்கள். டிஸ்கவரி புத்தக நிலையத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளது.

ஸ்பெஷல் டிஸ்கி:-  புத்தகத் திருவிழா சென்று வந்தது பற்றி எனது பெருமதிப்பிற்குரிய சூர்யா சார் ( சுப்பு தாத்தா ) வீடியோ பதிவேற்றி உள்ளார்கள். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை என்ற குறையும் உண்டு. இங்கே உள்ள புகைப்படங்கள் அங்கே வந்த தோழமைகள் அன்புள்ளத்தோடு எடுத்துக் கொடுத்தது. நன்றி மக்காஸ்.:)

Menaka Subburathinam
I had been to BOOK FAIR AT ISLAND GROUNDS.YESTERDAY EVENING AND HAD ENGAGED OLA SHARE,
MAINLY TO ATTEND THE FUNCTION RELATED TO THE RELEASE OF THE NEW BOOK BY MADAM Thenammai Lakshmanan
LISTEN TO MY EXPERIENCES.


10 கருத்துகள்:

 1. புத்தக வெளியீட்டிற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்......

  பதிலளிநீக்கு
 2. மகிழ்ந்தேன்
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள். உங்களது எழுத்துப்பணி மென்மேலும் சிறக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான படங்களுடன் கூடிய அழகான பதிவு. மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் பதிவர் ஒற்றுமை ஓங்குக

  பதிலளிநீக்கு
 6. நன்றி ஸ்ரீராம்

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி ஜம்பு சார்

  நன்றி உமையாள்

  நன்றி விஜிகே சார்

  நன்றி பாலா சார்

  நன்றி இராமாநுசம் சார்

  பதிலளிநீக்கு
 7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...