எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 9 ஜூன், 2016

கோகுலத்தில் குழந்தைப் பாடல்கள். புத்தகத் திருவிழா போகலாம்.

5. புத்தகத் திருவிழா போகலாம். :-

புத்தகத் திருவிழா போகலாம்
பொம்மைப் படங்கள் வாங்கலாம்

புதுப் புதுச் சேதிகள் கற்கலாம்
பரிசுப் பொருளாய்க் கொடுக்கலாம்.பாட்டி சொன்ன கதைகள் இருக்கும்
தாத்தா சொன்ன விடுகதை இருக்கும்

அக்கா போட்ட புதிரும் இருக்கும்
அண்ணன் சொன்ன காமிக்ஸ் இருக்கும்!

நாடு நகரம் மக்கள் பத்தி வாசிப்போம்
நண்பனாய்ப் புத்தகங்களைச் சுவாசிப்போம்.

நன்னெறிக் கதைகள் படித்து யோசிப்போம்
நல்வழிப்படுத்தும் விஷயங்களைப் பூசிப்போம்.

டிஸ்கி :- இந்தப் பாடல் தேனாஞ்சி என்ற புனைபெயரில் ஜூன் 2016 கோகுலத்தில் வெளியானது. நன்றி கோகுலம்.


4 கருத்துகள்:

 1. அடடே... வாழ்த்துகள். அதென்ன தேனாஞ்சி?

  பதிலளிநீக்கு
 2. குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்குமான அழைப்பு. அருமை.

  பதிலளிநீக்கு
 3. ஸ்ரீராம் தேன் அக்கா அப்பிடீங்கிற மாதிரி தேனாஞ்சி. :)

  நன்றி ஜம்பு சார்.

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...