எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 ஜூன், 2016

என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !

வார்த்தை விளையாட்டு என்ற இந்த ஒரு நிமிடம் நிகழ்ச்சி என்னவென்றால் ஒரு நிமிடம் ஆம் இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லாமல் உரையாட வேண்டும். ஒரே வார்த்தையை மூன்று முறைக்குமேல் உபயோகிக்கக் கூடாது. இதுதான் ரூல்ஸ்.

கல்கி பவளவிழாக் கொண்டாட்டத்தின்  ஒரு பகுதியாக இந்த நிகழ்வும் கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்காகக் கோகுலத்தின் சார்பில் கடந்த ஜூன் 11 அன்று நிகழ்த்தப்பட்டது. ஈக்காடுதாங்கலில் கல்கி அலுவலக மாடியில் ஷாமியானா  , சேர்கள், மின் விசிறிகள் போடப்பட்டிருந்தது.

கல்கி குழும நிர்வாக இயக்குநர் திருமதி லெக்ஷ்மி நடராஜன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்கள் இந்த ஒரு நிமிடம் நிகழ்ச்சியை நிகழ்த்தினார்கள்.  இதில் முதலில் வந்தவர் பெயர் தர்ஷன். இவர் ஒரே வார்த்தையில் முடியும் என்று எதற்கோ பதில் சொல்லிவிட்டு விலகினார். கோகுலம் ஆசிரியர் உரையாடலில் கில்லாடி என்றாலும் குழந்தைகளின் தவறை அதிகபட்சம் விட்டுக் கொடுத்தார்.:)
அடுத்தடுத்து வந்த பிள்ளைகளின் பெயர் ஞாபகம் இல்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையில் அல்லது ஒரே வார்த்தையை மூன்றுமுறை கூறி அவுட்டானார்கள்.


இந்தச் சிறுவனும் அப்படித்தான்.
இந்தப் பெண் மட்டுமே தாக்குப் பிடித்து ஜெயித்தார் ( பெயர் குறித்துக் கொள்ளாததால் ஞாபகம் வரவில்லை . இத்தனைக்கும் நோட்பேட் பேனா கொடுத்திருந்தார்கள்.! ) அவர்கள் ப்ரிண்ட் செய்த காகிதத்தில் குறித்ததால் பெயர் எழுதிக்கொள்ளவில்லை.
அதே போல் மங்கையர் மலர் ஆசிரியை மீனாக்ஷி மேடமும் ஒரு நிமிட உரையாடலில் வெற்றி வாகை சூடினார்கள்.
அடுத்து வந்த குழந்தைகள் எவ்வளவோ ஜாக்கிரதையாகப் பதில் அளித்தும் அவுட்டானார்கள். :)
இவரும்தான். :) என்ன  புத்தகம் படிப்பாய் எனக் கேட்டார் ஆசிரியர். இந்தப் பெண் கோகுலம் புத்தகம்  படிப்பேன் என்றார். ! கோகுலம் பொறுப்பாசிரியர்கிட்டேயேவா என்று சிரிப்பலை பறந்தது.

அடுத்தடுத்த கேள்விகளில்  தன்னை மறந்து புத்தகம் என்ற வார்த்தையை மூன்றுமுறை இவர் உபயோகித்து விட்டதால் அவுட்டானார்.
அடுத்த நிகழ்ச்சி பாடல் போட்டி. அருமையான தமிழ்ப் பாடலைப் பாடிய இந்தப் பெண் தான் முதல் பரிசுக்கு உரியவர். நல்லகுரல்வளம். இனிமை. கீதம் சங்கீதம்.
அடுத்துப் பாடிய இவரும் நன்றாகப் பாடினார். ஆனால் பெரும்பகுதிக் குழந்தைகள் சினிமா பாடலைப் பாட விரும்பினார்கள். எல்லாவற்றிலும் பயிற்சி கொடுத்திருந்தால் ஜெயித்திருப்பார்கள். மேலும் இந்த அளவு பங்கேற்றதே சிறப்பு எனவும் தோன்றியது. ஊழியர்களின் மனைவிகள் அமைதியும் பொறுமையும் காத்துப் பிள்ளைகளைப் பாடச் சொன்னார்கள் . மகிழ்வோடு அமர்ந்து பங்கேற்க வைத்தார்கள்.
மாயவரத்தான் அவர்களுக்கும் எனக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்கள். மாயவரத்தான் அவர்களுக்கு நிர்வாக இயக்குநரும்.
எனக்கு மில்கா ப்ரெட் நிறுவனத்தில் முக்கியப்பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவரும் நினைவுப் பரிசை வழங்கினார்கள். ஒரு ட்ராவல் பேக், ட்ரைஃப்ரூட்ஸ் டப்பா, ஒரு மில்கா ப்ரெட் அஸார்ட்டட் பேக், பணமுடிப்பு ஆகியவையே அப்பரிசுகள்.நன்றி கோகுலம் சீர் கொடுத்துச் சிறப்பித்தமைக்கு. :)
அடுத்து ஒரு அழகிய முயற்சியாக அங்கே பணிபுரியும் மினிஷா, செல்வி இன்னும் சில இளம்பெண்கள் பாடினார்கள். க்ரூப் சாங் கோரஸாக நன்றாக இருந்தது. :) நானும் ஒரு பாட்டுப் பாடினேன். என்னவென்றா கேட்கின்றீர்கள்.. உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும். என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும். சிச்சுவேஷன் சாங் . ஹிஹி.
ஆங்கில கோகுலத்தின் ஆசிரியை மங்கா அவர்களும் மிக அருமையாக நிகழ்வை நடத்திச் செல்ல உறுதுணையாக நின்றார்கள். செல்வி, மினிஷா, மற்ற இருவர் மற்றும் ஒலி அமைப்பாளர்கள், ஊழியர்களின் பணியும் பாராட்டுக்குரியது. நன்றி கல்கி, கோகுலம் & மங்கையர் மலர். !

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராக.

கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.

கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.

திருக்குறள் தீபன். 

என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !

கத்தியை விழுங்கிய மலேஷியா சங்கர்.

கல்கியும் நானும் &  FIVE - D - THEORY -யும்.7 கருத்துகள்:

 1. பகிர்வுக்கு நன்றி

  http://ypvn.myartsonline.com/

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள். இனிமையான நேரங்கள். ஆமாம், நீங்கள் பாடுவீர்களா? அடடே...

  பதிலளிநீக்கு
 3. அருமையான நிகழ்வுப்பதிவு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. அருமையான நிகழ்வு. நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 6. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  நன்றி ஸ்ரீராம்

  நன்றி ஜம்பு சார்

  நன்றி சுரேஷ் சகோ

  நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...