செவ்வாய், 21 ஜூன், 2016

பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் - திருக்குறள் சிறுகதைப் போட்டியில் சூலத்துக்கு ஆறுதல் பரிசு.

பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் நடத்திய சிறுகதைப் போட்டியில் சூலத்திற்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது .

இதை முகநூலில் எழுத்தாளர் திரு. கந்தையா முருகதாசன் அவர்கள் பகிர்ந்திருந்தார்கள். எனது அன்புத் தோழி நிம்மி சிவா அவர்கள் ஜெர்மனியில் நிகழ்வு நடைபெற்ற போது எனக்காக அதை இன்பாக்ஸில் தெரிவித்துப் பாராட்டியிருந்தார்கள். நிகழ்வில் உடனுக்குடன் அவர் அனுப்பிய புகைப்படம். எனக்காக துறுதுறுப்போது காத்திருந்து பகிர்ந்த அந்த அன்பு உள்ளத்துக்கு நன்றியும் அன்பும் முத்தங்களும்..
திரு. கந்தையா முருகதாசன்.

////நாம் நடத்திய திருக்குறள் சிறுகதைப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கதைகள்:
"வழி தெரிந்தது" - (முதலாம் இடம்) - ஐஸ்வர்யன் - இந்தியா
"கனவின் நிஜம்" (இரண்டாம் இடம்) - சச்சிதானந்தம் கஜன் இலங்கை
"ஆக்காட்டி" (மூன்றாம் இடம்) - கோமகன் - பிரான்சு
"நீல நிற வான்கடிதம்" (மூன்றாம் இடம்) - எஸ். கருணானந்தராஜா - இங்கிலாந்து
ஆறுதல் பரிசு பெற்ற கதைகள்:
---------------------------------------------
"சூலம்" தேனம்மை லெக்ஷ்மணன் - இந்தியா
"ஆணவம்" ம.தி. முத்துக்குமார் - இந்தியா
"புதிய உலகம்" தனசேகர் - இந்தியா
"நல்ல குணங்களே நம்மிடை அமரர் பதங்களாம்" ஷைலஜா நாராஜணன் - இந்தியா
"குளிர் காற்று "ஆர். ராஜேஸ்வரி - இந்தியா
"பாதை காட்டும் பாதம்" - மைதிலி தயாபரன் - இலங்கை
"கடைசி ஆசை" - க. கிருஸ்ணவேணி - இலங்கை
"வானம் வசப்படும்" - ப. பசுபதிராஜா - யேர்மனி
"ஆசை மனதளவு" - நிவேதா உதயராஜன் - இங்கிலாந்து
"தண்டனை" - மறைமுதல்வன் - இங்கிலாந்து
(கதைத் தேர்வில் ஈடுபட்ட நடுவர் குழுவினருக்கு கதை எழுதிய எவரின் பெயரையும் நாங்கள் கொடுக்கவில்லை. கதைகளைத் தேர்வு செய்யக் கொடுத்ததன் பின்பு அனைத்து நடுவர்களும் ஒரு நாள் சந்தித்து கதைகளை அக்கு வேறு ஆணி வேறாக விவாதித்தே பிரிசுக்குரிய கதையைத் தேர்ந்தெடுத்தோம். சூடான விவாதஙகளும் நடைபெற்றன.கதைகளை எழுதிய அனைத்து வாசகர்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறோம்.)


எழுத்தாளர் திருமதி நிம்மி சிவா :- 

பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட திருக்குறளுக்கான சிறுகதைப் போட்டியில் எனது தோழியும் , கவிஞரும் , பிரபல எழுத்தாளருமான தேனம்மை லக்‌ஷ்மணனால் எழுதப்பட்ட ‪#‎சூலம்‬ என்ற சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது. பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் சார்பில் வாழ்த்துக்கள் தோழியே ❤️
‪#‎Germany‬


நம் உயர்வில் மகிழும் தோழமை கிடைத்தது மட்டுமல்ல அதைத் திறந்த உள்ளத்தோடு பாராட்டி மகிழ்ந்ததும் அற்புதம். நன்றி நிம்மி சிவா & கந்தையா முருகதாசன் சார். தங்கள் இருவருக்கும் பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்துக்கும் எனது பணிவான நன்றியையும் அன்பையும் சமர்ப்பித்துக் கொள்கின்றேன். வாழ்க வளமுடன். ! 


4 கருத்துகள் :

Srimalaiyappanb sriram சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...