எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 17 ஜூன், 2016

கண்ணுக்கு (பசு)மை அழகு. !

ஒரு நர்ஸரி நிறுவனத்தார் ஹோட்டலில் கண்காட்சி நடத்தினார்கள். அரிய வகைச் செடிகளும், மூலிகைகளும் கூட அதில் இடம் பெற்றிருந்தன. ஹோட்டலில் திருமண வைபவங்கள், சடங்கு நிகழ்ச்சி, நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள், அலுவலக மீட்டிங்குகள், அல்லது பொருட்காட்சி போல ஏதும் சேல் எல்லாம் பார்த்திருக்கிறேன்.

முதன்முறையாக ஒரு நர்ஸரிக் கண்காட்சியைப் பார்த்தேன். குன்றக்குடிக்கு அருகில் இருக்கும் வள்ளல் அழகப்பர் நர்ஸரி நிறுவனத்தார் காரைக்குடி சுபலெக்ஷ்மி பேலஸ் ஹோட்டலில் இந்தக் கண்காட்சியை நிகழ்த்தினார்கள். வீட்டுள்ளே வளரும் செடிகள், மூலிகைகள், ரோஜாக்கள், காக்டஸ்கள் , போன்ஸாய் செடிகள் , தென்னங்கன்றுகள் மற்றும் நாம் பெயர் மட்டுமே கேள்விப்பட்டு, பார்த்திராத செடிகள் அனைத்தையும் பார்த்தேன். எனவே ஒரு பசுமைப் பதிவு. ( நாம ஃப்ளாட்டுல வெந்தயக்கீரையும் மல்லியும் வளக்குறோம்ல. :) சுற்றுச்சூழல் விழிப்புணர்வுல நமக்கும் பங்கிருக்கு, அக்கறை இருக்குன்னு சொல்லிக்கத்தான் :)

பாக்கெட் விதைகளைத் தூவிட்டு வந்ததா தங்கச்சி ஏஞ்சல் சொல்லி இருந்தா. துளசி வைங்கன்னு வாட்ஸப்புல வந்துது. கார்ல போம்போது காடா இருக்க இடமெல்லாம்  விதைகளை வீசிட்டுப் போங்கன்னு கூட ஒரு மெசேஜ் பார்வேர்டு வந்தது. நம்ம பங்களிப்பா ஃப்ளாட் வீட்டுக்காரங்க வீட்டுக்கொரு தொட்டிச் செடி வைங்கன்னு ஒரு ரெக்வெஸ்ட் செய்யத்தான் இந்த போஸ்ட் :)

வெல்கம் மக்களே. ஒவ்வொரு செடிகிட்டயும் அழைச்சிட்டுப் போறேன் வாங்க :)



பூக்களைப் பார்வையிடுகிறார் தலைவர் :)
பாரிஜாதம் & அரளி மஞ்சள் கன்றுகள்.
லச்சைகெட்ட கீரைன்னு நினைக்கிறேன்.
போன்ஸாயாம். கொன்றைச்செடி மாதிரி இருந்தது. ப்ளூமேரியோ சிங்கப்பூர் என்று போட்டிருந்தது.
ஏதோ மூலிகை ஆவாரம் பூ மாதிரி இருந்தது. அட இதுதான்பா நாகதாளியாம். ! இந்தப் பேர்ல ஒரு கதை படிச்சிருக்கேன்.
பூட்ஸ் போட்ட யானைக்கால் தென்னைகள் :) பனைகள். :)
செவ்வந்திப்பூமுடிச்ச சின்னக்கா :) பக்கத்துல ரோசாப்பூ ரவிக்கைக்காரிகள். :)
120 ரூபாய்னு மட்டும் தெரியுது என்ன செடின்னு தெரிலயேப்பா. பூ அழகா இருந்ததால சுட்டுட்டேன். அன்னிக்கே  எழுதி இருக்கணும் . இப்ப மறந்து போச்சு :)
கடுகுக் கீரை !
அலமாண்டாவா தெரில.
மாடர்ன் பனை ?!
டெர்ரகோட்டா ஆனையும் விலங்குகளும் முகப்பில். இதன் பக்கம்தான் இண்டோர் ப்ளாண்ட்ஸ் தொட்டி இருந்தது. விலை அதிகமில்லை ஜெண்டில்மேன் 400 ரூ தான் . டிவிகிட்ட வைக்கலாம்.
வித விதமான காக்டஸ் படைகள்.
வண்ணத்தொட்டிகள்
க்ரோட்டன்ஸ்
அவங்களோட கொரியன் க்ராஸும் இருக்காங்க.
திரும்ப வெளில வந்துட்டோம். குளு குளுன்னு ஒரே ஏசி எஃபெக்ட்.
ஆள விட அதிகமா வளர்ந்த அழகுச்செடிகள் இவை. வீட்டின் இருபுறமும் வைக்கலாம். பொடானிகல் பேரும் தெரியாது. பூர்வீகப் பேரும் தெரியாது. சும்மா ரசிச்சு ஃபோட்டோ மட்டும் எடுத்துக்கிட்டேன். :)
விசிறி வாழை எல்லாம் போஸ்டர்லதான்.ஆமா தேவையான செடி எல்லாம் வாங்கிக்கிட்டீங்களா. 

 ”சரிங்க போய்ட்டு வாங்க.  உங்க வீட்ட பசுமையாக்குங்க. ஏன்னா பசுமை கண்ணுக்கு அழகு” அப்பிடின்னு சொல்றாங்க இந்தம்மணி . அத அந்த ஐயனார் குதிரையும் ஆமோதிச்சுது !

உங்க இல்லம் பசுமை இல்லம் ஆக வாழ்த்துகள். !


4 கருத்துகள்:

  1. உங்கள் இல்லம் பசுமை இல்லமாகட்டும்.... நல்ல விஷயம்.

    சில செடிகள் புதிதாய் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நாகேந்திர பாரதி சகோ

    நன்றி வெங்கட் சகோ. ஆம் நானும்தான் புதிய செடிகளைப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு

  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...