எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 நவம்பர், 2019

வாசிப்பை வளர்க்கும் ஷாப்பிங் மால்கள் - இன்ஃபர்மேஷன் லைப்ரரி.

ஜெர்மனியிலும் சரி, யூரோப் முழுவதும் சரி. ரயில் நிலையங்களில் ப்ரஸ் & புக்ஸ் என்னும் புத்தகக் கடைகளும், ரெவே, கொடி, அல்டி, லிடில், ரியல், நெட்டோ, போகோ போன்ற ஷாப்பிங் மால்களிலும் பயணப் பாதையில் மோட்டல்களிலுமே  புத்தகக் கடைகளைப் பார்க்கலாம். பாதிக்குப் பாதி ஆஃபரிலும் கூட புத்தகங்கள் கிடைக்கின்றன ! முக்காலே மூணு சதம் அந்தந்த தேசத்தின் மொழிகளில்தான் கிடைக்கின்றன. ஆங்கிலப் புத்தகங்கள் ரொம்பக் கம்மி. ( ஆங்கிலம் மாதிரியே இருக்கும். ஆனால் அது ஜெர்மன், ஃப்ரெஞ்ச், இத்தாலி :) . கட்டுரைகள், த்ரில்லர்கள், ரொமாண்டிக் நாவல்களோடு இங்கே சமையல் புத்தகங்களும் , குழந்தைகளுக்கான நூல்களும் கூட கொட்டிக் கிடக்கின்றன.

ரயிலில் நின்று கொண்டோ உட்காந்து கொண்டோ வாசிப்பவர்களை இந்நாடுகளில் அதிகமும் பார்க்கலாம். இவர்கள் என்னைக் கவர்ந்ததால் அங்கே எடுத்த புத்தகசாலைப் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறேன். வாசிப்பவர்களை எடுக்க என் கூட வரும் என் மகன் தடா போட்டுவிடுவார்.

இவை அனைத்தும் ஸ்விஸ், இத்தாலி, வெனிஸ், ரோம், போன்ற நகரங்களைக் கடந்து செல்லும்போது இருக்கும் மோட்டல்களில் எடுத்தவை.


இது டிட்லிஸ்ஸிலிருந்து வெனிஸ் செல்லும் வழியில் எடுத்தது.

50 முதல் 70 சதம் வரை ஆஃபர் ! ஆண்ட்ரியா கேமில்லரி  கலெக்‌ஷன்ஸ் அதிகம்.

ஞாயிறு, 23 ஜூன், 2019

வாசிப்பை சுவாசிப்போம்.

வாசிப்பை சுவாசிப்போம்.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்றார் ஃப்ரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ . உடற்பயிற்சி உடலுக்கு நயம் பயப்பதைப் போல வாசிப்பு மூளையைப் புத்துணர்வாக்கும் என்பது பொன்மொழி.
இன்றைய இளம் தலைமுறையினர் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் வரும் நாலுவரி மெசேஜை பார்வேர்டு செய்வதும் அதைப் படிப்பதுமே பொழுதுபோக்கு, இலக்கியம் என்றிருக்கிறார்கள். இது நுரையை மட்டுமே ஒருவர் உண்டு வாழ்வது போன்றது என்று திரு ஞானசம்பந்தன் அவர்களும் நமது மண்வாசம் நான்காம் ஆண்டு ஆரம்பவிழாவில் கடிந்து இருக்கிறார். உண்மையான பிரச்சனைகளை இனம்காணவும் நல்லிணக்கத்தோடு கூடிய நற்சமுதாயம் அமையவும் வாசிப்பு அவசியம்.
புத்தக வாசிப்பு உங்களுக்கு உலகத்தையும் மனிதர்களையும் வாசிக்கக் கற்றுக் கொடுக்கும். கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் தனது அக்னிச் சிறகுகள் நூலில் கூறி இருக்கிறார். அக்கனவுகளை வளர்த்தெடுப்பது நெறிப்படுத்தப்பட்ட நன்னூல் புத்தக வாசிப்பே.