எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வாசகர் கடிதங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசகர் கடிதங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 நவம்பர், 2019

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 5.

தினமலர் சிறுவர் மலரில் இதுவரை 50 வாசகர் கடிதங்கள் வரை இதிகாச புராணக்கதைகளைப் பாராட்டி வெளியாகி உள்ளன. படித்ததோடு நின்றுவிடாமல் சிரத்தை எடுத்து அதைப் பாராட்டிக் கடிதம் எழுதித் தெரிவித்த வாசகர்களின் அன்புக்கு நன்றி.



எறிபத்தரின் கதையைப் பாராட்டிய ஸ்ரீரங்கம் வாசகர் திரு. ப. சரவணன் அவர்களுக்கு நன்றி.

புதன், 13 நவம்பர், 2019

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 4.

தினமலர் சிறுவர் மலரில் இதுவரை 50 வாசகர் கடிதங்கள் வரை இதிகாச புராணக்கதைகளைப் பாராட்டி வெளியாகி உள்ளன. படித்ததோடு நின்றுவிடாமல் சிரத்தை எடுத்து அதைப் பாராட்டிக் கடிதம் எழுதித் தெரிவித்த வாசகர்களின் அன்புக்கு நன்றி.


புராணக் கதைகளைப் பாராட்டிய திருவையாறு வாசகர் திரு. கா. தரணிவேலன் அவர்களுக்கு நன்றி.

செவ்வாய், 19 மார்ச், 2019

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம். - 3.

தினமலர் சிறுவர்மலரில் வெளிவந்த வாசகர் கடிதங்களை அந்த அந்த இடுகைகளிலேயே போட்டிருந்தாலும் இவை அதற்குப் பின் வந்தவைகள். நன்றி வாசகர்களுக்கு. மனமார்ந்த நன்றி தினமலருக்கும் ஆசிரியர் தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கும்.



சாவித்ரியின் கதையைப் பாராட்டிய கங்களாஞ்சேரி வாசகி மு. இனியா அவர்களுக்கு நன்றி.

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம். - 2.

தினமலர் சிறுவர்மலரில் வெளிவந்த வாசகர் கடிதங்களை அந்த அந்த இடுகைகளிலேயே போட்டிருந்தாலும் இவை அதற்குப் பின் வந்தவைகள். நன்றி வாசகர்களுக்கு. மனமார்ந்த நன்றி தினமலருக்கும் ஆசிரியர் தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கும்.


பகீரதனின் விடாமுயற்சிக் கதையைப் பாராட்டிய காரைக்கால் வாசகி. ஆர். மீனா அவர்களுக்கு நன்றி.

திங்கள், 18 மார்ச், 2019

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 1.

தினமலர் சிறுவர்மலரில் வெளிவந்த வாசகர் கடிதங்களை அந்த அந்த இடுகைகளிலேயே போட்டிருந்தாலும் இவை அதற்குப் பின் வந்தவைகள். நன்றி வாசகர்களுக்கு. மனமார்ந்த நன்றி தினமலருக்கும் ஆசிரியர் தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கும்.




மகன் போதித்த ஞானம் - மருதவாணன் கதையைப் பாராட்டிய வந்தவாசி வாசகர் காசிதாசன் அவர்களுக்கு  நன்றி.

சனி, 3 அக்டோபர், 2015

சிறுகதைக்கு வாசகர் கடிதம். !

காரைக்குடி புத்தகத்திருவிழாவும் தினமணியும் இணைந்து நடத்திய  சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற  சிவப்புப் பட்டுக் கயிறு சிறுகதைக்கு வந்த வாசகர் கடிதம். !


வெள்ளி, 18 செப்டம்பர், 2015

புதிய பயணியில் வாசகர் கடிதம். !

புதிய பயணி இதழில் வெளியான என்னுடைய கட்டுரைக்கு வந்த வாசகர் கடிதத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

செவ்வாய், 30 ஜூன், 2015

கல்கி கவிதைக்கு வாசகர் கடிதங்கள். பாகம் - 2.


மத்யப் ப்ரதேஷ். ஜபல்பூரில் மிலிட்டரி ஹாஸ்பிட்டலில் பணிபுரியும் குமார் என்பவர் எழுதிய கடிதம் இது.

பேட்டைவாய்த்தலை , பழங்காவேரி திருச்சியைச் சேர்ந்த ஜி ரவீந்திரன் எனது கவிதை பாலசந்தரின் கறுப்பு வெள்ளைப் படம் மாதிரி இருந்ததாக எழுதி இருக்கிறார். :)

செவ்வாய், 23 ஜூன், 2015

கல்கி கவிதைக்கு வாசகர் கடிதங்கள். - பாகம் 1.

எல்லாப் புகழும் சுசீலாம்மாவுக்கே !!!. :)

கல்கியில் ”கிராமத்துத் திருவிழா “ கவிதை வெளிவந்தவுடன் வாசகர் கடிதங்கள் வரத் தொடங்கின. முதன் முதலில் பாராட்டு மழை.. ஒரே இன்ப வெள்ளம். :) இதை  எல்லாம் சுசீலாம்மாவிடம் சொன்னபோது அவர்கள் வந்த கடிதங்களை எல்லாம் ஃபைல் பண்ணி வைக்க சொன்னார்கள். அந்த ஃபைலில் இருந்து ஒரு பதினைந்து கடிதங்களைப் பகிர்கிறேன்.

நிறையப் பேர் கவிதையாகவே கடிதம் எழுதி இருக்கின்றார்கள். சிலர் தாங்கள் இயற்றிய கவிதைகளையும் பார்வைக்கு அனுப்பி இருந்தார்கள். !

இது பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்வியியல் கல்லூரியில் இருந்து மஹிலா என்பவர் எழுதியது. சில சமயம் இது ஒருவரா மூன்று பேரா என்று யோசித்திருக்கிறேன் :)


ஞாயிறு, 31 மே, 2015

புதிய பார்வை :- வாசகர் கடிதம்.

மதுரையில் இருந்து புதிய பார்வை என்ற இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. ஆசிரியர் அகமுடை நம்பி. அறிவுடை நம்பி என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தார்.

அந்தப் புதிய பார்வையில் வெளியான சிறுகதைக்கு வந்த வாசகர் கடிதம் இது.

வேலை கிடைச்சிட்டுது என்ற சிறுகதை வெளியாகி இருந்தது.

அந்த சிறுகதை இதுதான்.

புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை. 

அதற்குத் திருவிடை மருதூரைச் சேர்ந்த எழில்வேந்தன் என்பவர் வாழ்த்துக் கடிதம் எழுதி இருக்கிறார்.

வியாழன், 23 ஏப்ரல், 2015

வாசகர் கடிதங்கள், குமுதம் பக்தி ஸ்பெஷல். !



ஜனவரி  15 - 31 , 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த பூஜையறைக் கோலங்களைப் பாராட்டிய எஸ்.பிரபாவதி, மெய்யூர் அவர்களுக்கு நன்றி.!


2014 ஜனவரி 1 - 15 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த பொங்கல் கோலங்களைப் பாராட்டிய கடலூர், வெ. லெக்ஷ்மிநாராயணனுக்கு நன்றிகள்.. !!

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

வாசகர் கடிதங்கள்...!!! - பாகம் 1

மெல்லினம் ஆஸ்த்ரேலியாவிலிருந்து வரும் தமிழ் மாத இதழ். சித்திரை, வைகாசி என்று தமிழ் மாதத் தொடக்கத்திலேயே இந்த இதழ் வெளியிடப்படுகிறது. இரண்டாண்டுகளாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் மெல்லினம் இதழில் என்னுடைய பெண்மொழிக் கட்டுரைகளுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக சகோ . திரு மணிமாறன் கூறினார். அதில் என் கட்டுரை பற்றி வெளிவந்த ஒரு வாசகியின் கடிதம் இங்கே. மிக்க நன்றி ஜெயலெட்சுமி, சிட்னி.

 லேடீஸ் ஸ்பெஷலில் இருமுறை கவர் போட்டோக்களில் என்னுடைய சாதனைப் பெண்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஆட்டோ சாந்தியும், இருளர் இன விளக்கு வசந்தியும். என்னுடைய கட்டுரைகளைப் படித்துவிட்டு தன்னுடைய தோழி ஊக்கம் பெற்றதாக ஒரு வலைப்பதிவ நண்பர் கூறினார். அஹமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர்  இந்தப் புத்தகம் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் ப்ரேயர் முடிந்தவுடன் தமிழ் பள்ளியில் சில பக்கங்கள் வாசிக்கப்படுவதாகவும் கூறினார்.  அவர்கள் இருவருக்கும் நன்றிகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...