எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ட்ரான்சிஸ்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ட்ரான்சிஸ்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 டிசம்பர், 2019

டேப்ரெக்கார்டர், கேஸட்ஸ், சிடி, ட்ரான்சிஸ்டர், வாக்மென்.

தொழில் நுட்பங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. அன்றைக்கு உபயோகப்படுத்திய அநேகப் பொருட்களை இன்று செல்ஃபோன் இடமாற்றம் செய்துவிட்டது.

பேஜர், ஃபேக்ஸ், ரேடியோ , டேப்ரெக்கார்டர், கம்ப்யூட்டர், லாப்டாப், ஐ பாட், டிவி, சினிமா, காமிரா, ஆடியோ கேஸட்ஸ்,வீடியோ கேஸட்ஸ், கம்ப்யூட்டர் ஹேண்ட் கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன், கடிகாரம், கால்குலேட்டர்,டிக்கெட் புக்கிங், லாண்ட்லைன் தொலைபேசி, அஞ்சல் சேவை, கொரியர் , திசைகாட்டி, நியூஸ் பேப்பர்கள், மேகஸீன்கள் போன்றவற்றை செல்ஃபோன் ஒரே வீச்சில் தூக்கிக் கடாசிவிட்டது.

அதுவும் செல்ஃபோனில் ஆன்லைன் பார்க்க ஆரம்பித்தபிறது எல்லாமே ஒரு சொடக்கில்.உடனே இண்டர்நேஷனல் கால் பேசுவது என்பதை அன்றைக்கெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. நாள் கணக்கில் ஆகும். இன்றைக்கு நினைத்தவுடன் வாட்ஸப்பில் ( முன்பு ஸ்கைப், மெசஞ்சர், ) பேச முடிகிறது. அதுவும் வீடியோ கால் !

இந்த ரேடியோ, ரேப்ரெக்கார்டர் எல்லாம் இப்போதும் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவோர் குறைவுதான். 85 களில் அனைவர் வீட்டிலும் ரேடியோ இருக்கும் . காலை ஏழேகால் , மதியம் பன்னிரெண்டேமுக்கால், மாலை 6 மணிச் செய்திகளும், சிலோன் பாடல்களும், ஞாயிறு மதியம் அகிலபாரத நாடகம், இரவில் சில நாடகங்களும் மதியம் பழைய & ஹிந்திப் பாடல்களும் கேட்க வாய்க்கும்.

டேப்ரெக்கார்டர் வந்த புதிதில் ஆராதனா, பாபி ஆகிய கேஸட்டுகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். அம்மாவிடம் சில சினிமாக்களும் கேஸட்டுகளாக இருந்தன. சங்கே முழங்கு, திருவிளையாடல் போன்றவை.

பாக்யராஜின் புதிய வார்ப்புகளின் “ வான் மேகங்களே வாழ்த்துங்கள் “ என்ற பாடலை ரதி அக்னிஹோத்ரிக்காகப் பலமுறை கேட்டிருப்போம். ”சுராலியா ஹை தூ மேரே தில் கோ “ “ ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த் ஹோ “ ” மேரே சப்னோங்கி ராணி கப் ஆயே கீ தூ “ எல்லாம் அப்போதைய தேசிய கீதம்.

ப்ரொஃபஸர் அழகர்சாமி அவர்களின் மகள் ராணி, சுதா ஆகியோர் எங்கள் காலனியில் வசித்து வந்தார்கள். அவர்கள் மாமா மலேஷியாவிலிருந்து அவர்களுக்கு ஒரு டேப்ரெக்கார்டர் அனுப்பினார். அதில் தாமரைப்பூ போட்டிருக்கும் . பக்கவாட்டில் ஸ்விச்சுகள் இருக்கும். அதில் வார் இருப்பதால் அதை ராணி தோளில் போட்டுக் கொள்வார். “ தாமரைப்பூ டேப்ரெக்கார்டர் “ என அவள் சொல்வது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. :)

இந்த டேப்ரெக்கார்டர் என் திருமணத்தில் மாப்பிள்ளைக்குச் ( மாப்பிள்ளைக்கு வைக்கும் சாமான்கள் ) சீராக வைத்தது. டேபிள்ஃபேன், டேபிள் , சேர், உடைகள், உள்ளாடைகள், துவாலைகள், சூட்கேஸ், ஷேவிங் செட், செண்ட், பாடிஸ்ப்ரே இன்னபிற


இந்த ஃபிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர்/ரேடியோவை நான் கிச்சனில் பாட்டுக் கேட்க என் கணவர் வாங்கிக் கொடுத்தார் :)

இந்த கேஸட்டுக்களெலாம் திருமணம் செய்தபின் வாங்கியது. அம்மா , மாமா, தம்பி ஆகியோர் கொடுத்ததும் உள்ளது . அழகன் பாட்டுக்கள் ரொம்பப் பிடிக்கும்.