எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 மார்ச், 2014

அன்ன பட்சி பற்றி இரத்தினவேல் ஐயா

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து எனக்கு பெருமாள் தாயார் புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தார் ரத்தினவேல் ஐயா அவர்கள். அவருடனும் அவரது துணைவியார் உமா அவர்களுடனும் பேசி இருக்கிறேன்.

வலைத்தளக் கவிதைகளைப் பார்த்துவிட்டு சமுதாய நண்பன் என்ற இதழுக்கு என்னுடைய கவிதைகளைக் கேட்டு வாங்கிப் போடச் செய்ததுமல்லாமல் எனக்கு ஒரு வருடத்துக்கான சந்தாவும் கட்டி அந்தப் புத்தகங்கள் என்னை அடையுமாறு செய்திருக்கிறார். என்னுடைய 9 கவிதைகள் சமுதாய நண்பனில் வந்திருக்கின்றன.


சமுதாய நண்பன் பற்றி நான் எழுதிய இடுகைகள் இதோ.

1.சமுதாய நண்பனும் சில நிகழ்வுகளும்.

2. ஈரோடு சங்கமமும், வெல்விஷர் தேவதைகளும்.


 நன்றி பேரன்புக்கு இரத்தினவேல் ஐயா. இவர்களின் பெயரை நான் நூலிலும் நன்றியறிதலில் குறிப்பிட்டு உள்ளேன். உங்கள் அனைவரின் தொடர்ந்த  ஆதரவினாலும் ஊக்கத்தினாலும்தான் நான் கவிதை நூல் போட முடிந்தது.///நான் படித்த புத்தகம்.

அன்ன பட்சி – எழுதியவர்: திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன்.

(நமது முகநூல் நண்பர் திருமதி Thenammai Lakshmanan).

வெளியீடு: அகநாழிகை பதிப்பக வெளியீடு: 36
www.aganazhigaibookstore.com
email: aganazhigai@gmail.com

விலை ரூ.80 = பக்கங்கள் 96.

அருமையான கவிதைப் புத்தகம்.
என்னை ஈர்த்த கவிதைகளை தொடர்ந்து பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திருமதி Thenammai Lakshmanan

என்னை ஈர்த்த கவிதை: (பக்கம் 21)

விவ ‘சாயம்’

சாணி சருகு
வேப்பம் பிண்ணாக்கு
மக்கிப் போன தோல் தழை
மழை பெஞ்சா மண்ணுழப்பி

இத்தனையும் விட்டுப்புட்டு
கை நிறைய அள்ள
கலப்புரம் போட்டு
மேலே அள்ள
மேலுரம் போட்டு

பருத்தி வரும்னு பதறிப் பார்த்தும்
கத்திரிக்காய்க்கு மரபணு மாத்தியுங்
காத்திருந்தா

சாயாத்தண்ணியா கருத்து வந்தது
சாயத்தண்ணி
துவைச்ச நுரையாட்டம்
பார்த்தீனியம் கூட பட்டுப் போக

குடிச்சுக் குடல் அழிஞ்சு
புண்ணாகிக் கிடக்கு
கரப்புத் தட்டிப் போய்
வெடிச்ச முலைக் காம்பாட்டம்
எனக்குப் பாலூட்டிய பூமி.////


இதற்கு சிரத்தை எடுத்து அழகான படங்களும் போட்டு என் கவிதையைப் பகிர்ந்துள்ளார்.////நான் படித்த புத்தகம்.

அன்ன பட்சி – எழுதியவர்: திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன்.

(நமது முகநூல் நண்பர் திருமதி Thenammai Lakshmanan).

வெளியீடு: அகநாழிகை பதிப்பக வெளியீடு: 36
www.aganazhigaibookstore.com
email: aganazhigai@gmail.com

விலை ரூ.80 = பக்கங்கள் 96.

அருமையான கவிதைப் புத்தகம்.
என்னை ஈர்த்த கவிதைகளை தொடர்ந்து பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திருமதி Thenammai Lakshmanan

என்னை ஈர்த்த கவிதை: (பக்கம் 24)

விளையாட்டு

கிச்சுக் கிச்சு தாம்பூலம்
விளையாடத் தொடங்கி
கிளியாந்தட்டில் சுற்றி
குலை குலையாய்
முந்திரிக்காயை பறித்து
கொள்ளையடித்தவன்
ஒளிந்து பிடித்து விளையாட
பல்லாங்குழிகளாய்
சிதறிக் கிடந்தது பரவசம்.
பசுக்களை வாரியவன்
சுற்றத் தொடங்கினான்
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததென
தங்கத் துளிகளாய்
மிதந்து கொண்டிருந்தது தேகம்.

நன்றி நண்பர்களே.///


//////நான் படித்த புத்தகம்.

அன்ன பட்சி – எழுதியவர்: திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன்.

(நமது முகநூல் நண்பர் திருமதி Thenammai Lakshmanan).

வெளியீடு: அகநாழிகை பதிப்பக வெளியீடு: 36
www.aganazhigaibookstore.com
email: aganazhigai@gmail.com
விலை ரூ.80 = பக்கங்கள் 96.


அருமையான கவிதைப் புத்தகம்.
என்னை ஈர்த்த கவிதைகளை தொடர்ந்து பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திருமதி Thenammai Lakshmanan

என்னை ஈர்த்த கவிதை: (பக்கம் 28)

சிகண்டியின் சாம்பலும் அமிர்தமும்.

சிகண்டியாய் இருப்பது எளிதல்ல
கொஞ்சம் குத்தும் பார்வைகள்
சேமிக்க வேண்டும்
ஊசிகளில் உறைந்து கிடப்பவனிடம்
திரும்பச் செலுத்த

வெளுப்புக் கிரீமும்
வெண் பல்லும் மயக்கம் தருகிறது
விடிந்ததும் விலகி வெருண்டு செல்பவனுக்கு

உடல் பெண்ணாய்
உணர்வை ஆணாய்
படைத்தவனுக்கும் இருக்கிறது சரிவு
வணக்கத்திற்குரிய கோலங்களில் நின்று
பிறப்பவைகளை அலங்கோலப் படுத்துவதில்
தீர்கிறது அவனது கலியுகம்.

கோபத்தை எல்லாம் சேமித்து
சூரியனாய் எரிவதில் தீர்வதில்லை
சடையனின் வெண் சாம்பலும்
மோஹினி அமிர்தமும்

வாழ்ந்தே கிடப்பது
எல்லா வினைகளையும்
அனுபவித்தே தீர்ப்பது
இதுவே ஆயுதம் தான்
இந்த ஜென்மம் முழுமைக்கும்

நன்றி நண்பர்களே.


நான் படித்த புத்தகம்.

அன்ன பட்சி – எழுதியவர்: திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன்.

(நமது முகநூல் நண்பர் திருமதி Thenammai Lakshmanan).

வெளியீடு: அகநாழிகை பதிப்பக வெளியீடு: 36
www.aganazhigaibookstore.com
email: aganazhigai@gmail.com

விலை ரூ.80 = பக்கங்கள் 96.

அருமையான கவிதைப் புத்தகம்.
என்னை ஈர்த்த கவிதைகளை தொடர்ந்து பகிர்கிறேன்.

நன்றி & வாழ்த்துகள் திருமதி Thenammai Lakshmanan

என்னை ஈர்த்த கவிதை: (பக்கம் 31)

கார்ட்டூன் கதைகள்.

சில பல கோடுகளால்
கரடு முரடு வார்த்தைகளால்
குழந்தைகள் மனதில் உருவாகி விடுகிறது
பொம்மைச் சித்திரக்கதைகள்

அவ்வப்போது அவை பொம்மைகள் போல
கதைப்பதும் குதிப்பதும்
களியாட்டம் தருகிறது.

பிரம்மனைப் போல உணர்கிறேன்
ஒவ்வொரு சித்திரக்
கதாபாத்திரத்தையும் படைத்து
உலவ விட்டிருப்பவனை

உருவாக்கத்தில் உலவுவதைவிட அவை
குழந்தைகளின் இரவுக்கதைகளாக
உருப் பெறும் போது முழுமையுறுகின்றன

கதை சொல்லியாக இருந்த நான்
கதை கேட்பவளாக மாறி
குழந்தையின் கைபிடித்து
உலவுகிறேன் உறக்கத்தில்.

நன்றி நண்பர்களே. நன்றி ஐயா பகிர்வுக்கும் புகைப்படங்களுக்கும் விமர்சனத்துக்கும்.  வாழ்க வளமுடன். 

என்னுடைய நூல்களை வாங்க.
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com

”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.

என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை.

3 கருத்துகள்:

  1. அருமையாக இருக்கிறது...படங்களும் பகிர்வும்...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அருமையாக இருக்கிறது...படங்களும் பகிர்வும்...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...