எனது நூல்கள்.

வியாழன், 20 மார்ச், 2014

பத்மஜா நாராயணனின் தெரிவை.

பத்மஜா நாராயணின் அரிவைக்குப் பிறகு வந்திருக்கும் தெரிவை இது.

என்ன பார்க்கின்றீர்கள். ஆம் “ மலைப்பாதையில் நடந்த வெளிச்சம். “ அரிவை. என்றால் இது தெரிவைதானே..

எனக்கு அதில் இருந்த மிக மென்மையான நுண்ணுணர்வுள்ள கவிதைகள் ரொம்பப் பிடித்தன.

இதிலும் முத்தக் கவிதைகள் இருக்கின்றன. ஆனால் கொஞ்சம் மெச்சூர்டாக. முத்த மலையும் முத்தம் சரணம் கச்சாமியும் முத்தப் புன்னகையும் ஆளைத் தடுக்கி விழ வைக்கின்றன.


வன்புணர்ந்த வீடுகள் வடிக்கும் கண்ணீரும் அடகுக் கடையும் வலி சுமந்த கவிதைகள்.

நாய்க்கனவும் சாத்தானும் ஜிங்கிள் ஆல்த வேயும் வலைப்பூவிலேயே படித்தவை.சுவாரசியம்.

சாத்தானாகவும் புத்தனாகவும் மாறும் இருகூடு பாய்ந்திருக்கின்றன கவிதைகள் அவ்வப்போது.

மொழி பெயர்ப்புக் கவிதைகள் சிலவும் தொகுப்பில் உண்டு.

முதலில் நடுவில் முடிவில் என்ற கவிதை என்னைக் கவர்ந்தது. ஒரு பெண்ணின் பிறப்பிலிருந்து இறப்பு வரையான கட்டுத்தளைகளைக் கவிதையாக்கிப் புனையப்பட்டது அது.  ஆன் செக்ஸ்டனின் கவிதைக்கு அழகான மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார் பத்மா.

அதே போல கமலாதாசின் ஆடி கவிதை மொழிபெயர்ப்பும் சரளமாக இயல்பாக அருமையாக இருந்தது.

ஜான் க்ளீவ்லேண்டின் அர்த்தநாரி பற்றிய கவிதையும் ஒரு அற்புதம்.

மொழிபெயர்ப்பு இன்னும் அற்புதமாக வருகிறது பத்மாவுக்கு. அடுத்து மொழிபெயர்ப்பில் ஒரு தொகுப்பு போடலாம்.

இந்நூல் டிஸ்கவரியின் வெளியீடு.

விலை ரூ. 50.


3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பத்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...