எனது நூல்கள்.

செவ்வாய், 25 மார்ச், 2014

அவள் ஆண்டாள்.

இன்று ஆண்டாளைப் பற்றி
அறிந்து கொள்ள முடிந்தது என்னில்
குசேலனாய்க் கட்டி வந்த
சிந்தனை அவல்கள்
துணியோடு துணியாய்ப் போனது.
பார்வைத் தேங்காய்த் துண்டு சிதற
கோயில் படிக்கட்டோரம் கால்முடக்கி
உறவு யாசகம் அபகரிக்க
கோவணப் பிச்சைக்காரனாய் நான்.
தினம் ஏக்கப் பூத்தொடுத்து
மனசில் ஏந்தி எப்படி சமர்ப்பிப்பதெனத்
தெரியாது பாதம் தேடும்
குருடனாய் நான்.
பாயும் கைகளெல்லாம்
மனச்சில் பொறுக்கிப் போக
கர்ப்பக்கிரகத்தில் கண்மூடித் தூங்கும்
உன்பாதம் கண்டு ஓடிவந்து
இறுக்கப்பிடித்த களிம்பாய் நான்.
இன்று ஆண்டாளைப் பற்றி
அறிந்து கொள்ள முடிந்தது என்னில்..

3 கருத்துகள் :

சே. குமார் சொன்னது…

கவிதை அருமை அக்கா...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...