சனி, 7 ஆகஸ்ட், 2010

பாலை...

ப்ரியங்கள் தொலைந்த காடொன்றில்
கிளைத்துக் கிடந்தது மொட்டைமரம்.,
வசந்தத்தின் எச்சமாய்...

வேம்பும் குயிலுமாய்
வேதனையில் கழிந்த இடம்
கழுகுகளும் வல்லூறுகளும் அமர...


சருகுகளும் சுள்ளிகளும்
காகங்களின் கூடாகவோ
குருவிகளின் வீடாகவோ....

உறைந்தது காலம்..
கூகைகளும்., கோட்டான்களும்
ஆந்தைகளும் கீறிப் பிளந்தது தவிர..

வௌவால் அண்டிய மண்டபங்களாய்
நாறிக் கிடந்தது எல்லாம்
சுத்தம் செய்தும் போகாமல்..

கரும்புச்சக்கை குத்தும் காடு
மிதித்துக் காய்ப்பேறி ..
வெடித்துக் கிடக்கும் காலடித்தடம்..

தீமிதி போலும் எறிகற்கள் போலும்
சேமித்த கோபமெல்லாம்
பாசமழுங்கிய கூழாங்கல்லாய்..

நிலவும் சூரியனும்
மணற்புயலும் சுழல
புல்லற்றுக் கிடந்தது பாலை..

வேரோடும் தூரோடும்
பேர்க்க ஏலாமல்
கிணற்றுள் முளைவிட்டு ஆல்..

ரத்தம் தலைகேறி சித்தம் கலங்கி
நின்றதெல்லாம் மாறியது ஒரு பொழுதில்
சீவனற்ற சிவனாய்...

36 கருத்துகள் :

ஜெய்லானி சொன்னது…

// ப்ரியங்கள் தொலைந்த காடொன்றில்
கிளைத்துக் கிடந்தது மொட்டைமரம்.,
வசந்தத்தின் எச்சமாய்..//

அட என்னாச்சு தேனக்கா.!!

ஜெய்லானி சொன்னது…

// ப்ரியங்கள் தொலைந்த காடொன்றில்
கிளைத்துக் கிடந்தது மொட்டைமரம்.,
வசந்தத்தின் எச்சமாய்..//

அட என்னாச்சு தேனக்கா.!!

LK சொன்னது…

valakampol nalla irukku. but sila idangal puriyalai :(

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கவிதை மிக நன்றாக கிளை பரப்பியிருக்கிறது..

கலாநேசன் சொன்னது…

//நிலவும் சூரியனும்
மணற்புயலும் சுழல
புல்லற்றுக் கிடந்தது பாலை..//

வாவ்...

சசிகுமார் சொன்னது…

பதிவோ என்னவோ சோகத்தில் இருக்கிற மாதிரி இருக்கு அக்கா, தாங்கள் நலம் தானே.

asiya omar சொன்னது…

ஆழமான கருத்துள்ள கவிதை.

அ.வெற்றிவேல் சொன்னது…

வழக்கம் போல் அதே வீச்சுடன்...
இன்னுமொரு கவிதை
வாழ்த்துக்கள்
வெற்றி

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நன்றாக இருக்கிறது தேனம்மை..

\\தீமிதி போலும் எறிகற்கள் போலும்
சேமித்த கோபமெல்லாம்
பாசமழுங்கிய கூழாங்கல்லாய்..//
ம்

asiya omar சொன்னது…

உங்களை அன்புடன் விருது பெற அழைக்கிறேன்.
http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html

அக்பர் சொன்னது…

சோகம் கிளைபரப்பி நிற்கிறது.

சத்ரியன் சொன்னது…

//வேரோடும் தூரோடும்
பேர்க்க ஏலாமல்
கிணற்றுள் முளைவிட்டு ஆல்..//

தேனக்கா,

உங்களின் அதே வரிகளை,

//வேரோடும் தூரோடும்
பேர்க்க ஏலாமல்
மன கிணற்றுள்
முளைவிட்டு ALL..//

இப்படியும் படிச்சிக்கலாம்.

ஆனாலும் சித்தம் கலங்கிப்போற அளவுக்கு கோபமாக்கா?

வழிப்போக்கன் சொன்னது…

Nice ... ;-)

Jana சொன்னது…

//ரத்தம் தலைகேறி சித்தம் கலங்கி
நின்றதெல்லாம் மாறியது ஒரு பொழுதில்
சீவனற்ற சிவனாய்..//

Ending Touch..Very Nice

பெயரில்லா சொன்னது…

"சருகுகளும் சுள்ளிகளும்
காகங்களின் கூடாகவோ
குருவிகளின் வீடாகவோ....

உறைந்தது காலம்..
கூகைகளும்., கோட்டான்களும்
ஆந்தைகளும் கீறிப் பிளந்தது தவிர.."


ENAKKU PIDITHATHU IVVARIKAL.
KAVITHAI ARUMAI.
VAZTHUKKAL

KARUNA
CHENNAI

இளம் தூயவன் சொன்னது…

அருமையான கவிதை வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia சொன்னது…

very nice akkaa...

தமிழ் உதயம் சொன்னது…

நாறிக் கிடந்தது எல்லாம்
சுத்தம் செய்தும் போகாமல்..

மனித மனது போலவே. சிறப்பாக வந்த கவிதை.

மதுரை சரவணன் சொன்னது…

//தீமிதி போலும் எறிகற்கள் போலும்
சேமித்த கோபமெல்லாம்
பாசமழுங்கிய கூழாங்கல்லாய்..//


அருமை. வாழ்த்துக்கள்

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice thanks for sharing

சே.குமார் சொன்னது…

வழக்கம் போல் அதே வீச்சுடன் ஆழமான கவிதை.

sakthi சொன்னது…

இக்கவிதையை மனதிற்கு ஒப்பாகவும் கூறலாம் சரிதானே தேனம்மை !!!!

அருமையான வரியமைப்பு

வாழ்த்துக்களுடன்

சக்தி!!!

சீமான்கனி சொன்னது…

//தீமிதி போலும் எறிகற்கள் போலும்
சேமித்த கோபமெல்லாம்
பாசமழுங்கிய கூழாங்கல்லாய்..

நிலவும் சூரியனும்
மணற்புயலும் சுழல
புல்லற்றுக் கிடந்தது பாலை..//

அழகு ரசனை தேனக்கா எனக்கு ரெம்ப பிடிச்ச கவிதை நன்றி..தேனக்கா

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

//கரும்புச்சக்கை குத்தும் காடு
மிதித்துக் காய்ப்பேறி ..
வெடித்துக் கிடக்கும் காலடித்தடம்..
/////

வார்த்தைகளின் அலங்காரம் வியக்க வைக்கிறது அருமையான கவிதை

ஹேமா சொன்னது…

கவிதை வரிகளில் உங்கள் வலி.சுகம்தானே நீங்கள் !

கடல் சொன்னது…

தமிழின் முதல் மகளிர் திரட்டி.
மகளிர் கடல்
அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.

நன்றி.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

’பிரியங்கள் தொலைந்த காடொன்றில்’ ஒரு நன்கு வளர்ந்த ஆலமரம் விழுதுகளைப் பரப்பி...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

இந்த கவிதை படித்ததும் என் மனதில் ஒரு வெறுமை தெறிக்க.. அதில் என் இனிய நண்பன்.. நாங்க இருந்த ஸ்டோரில் இருக்கும் குட்டி,குட்டி வாண்டுகளுக்கெல்லாம் கதை சொல்லி அந்த வாண்டு படைகளுக்கு நான் தான் ஆசான்(அப்ப அந்த ஏழு நாட்கள் வந்த புதிது) இவன் வந்தான் என்னைப் பார்க்க..என்ன மாய்மாலமோ அத்தனை வாண்டுகளாலும் மரியாதையாய் ஆசான் என்று அழைக்கப் பட்ட என்னை ‘டேய் ஸ்ரீதர் மாமா’என்று கூப்பிட்டு அத்தனை சிட்டுகளும் ஓடிப் போன நாளை மறக்க முடியாது! இன்று அவன் இல்லை. காலன் அவனை அநியாயமாய் நாற்பத்தெட்டு வயதிலேயே பறித்துக் கொள்ள..உங்கள் வார்த்தை ஸ்த்யம்!ஆம் ’உறைந்தது காலம்..
கூகைகளும்., கோட்டான்களும்
ஆந்தைகளும் கீறிப் பிளந்தது தவிர..’

sury சொன்னது…

//நிலவும் சூரியனும்
மணற்புயலும் சுழல
புல்லற்றுக் கிடந்தது பாலை..//


அப்பாலையில்
நீருடை மேகங்கள் சூழ்ந்து
நீண்ட நாட்கள் மழை பெய்ய‌
வருணனுக்கு என்று வருமோ
வேளை ?

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

ஸாதிகா சொன்னது…

//கரும்புச்சக்கை குத்தும் காடு
மிதித்துக் காய்ப்பேறி ..
வெடித்துக் கிடக்கும் காலடித்தடம்..
// வார்த்தைகளை அருமையாக கோர்த்து அழகிய கவி படைத்துள்ளீர்கள் வழக்கம் போல் தேனம்மை.அருமையான வரிகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

பாலையின் வெப்பம் தகிக்கிறது.. பிரிவின் வலிகளில்..

தேனக்கா உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக் கொள்ளுங்கள்.

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

Muniappan Pakkangal சொன்னது…

Nice Thenammai.I remeber my native place around my village M.Kalluppatti turning into a desert now.

ரிஷபன் சொன்னது…

பாலையை பசுமையாக்க உங்கள் கவிதை முயற்சிக்கட்டும்..

செந்தில்குமார் சொன்னது…

ப்ரியங்கள் தொலைந்த காடொன்றில்
கிளைத்துக் கிடந்தது மொட்டைமரம்.,
வசந்தத்தின் எச்சமாய்...


இந்த வரிகள் தனிமையின் வெளிப்பாடு

வேம்பும் குயிலுமாய்
வேதனையில் கழிந்த இடம்
கழுகுகளும் வல்லூறுகளும் அமர...

அருமையான் வரிகள் அக்கா...

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ஜெய்., கார்த்திக்., செந்தில் .,கலா நேசன்., சசி.,ஆசியா., வெற்றி., முத்து லெட்சுமி., அக்பர்., சத்ரியன்., வழிப்போக்கன்., ஜனா.,பெயரில்லா., இளம்தூயவன்., மேனகா.,ரமேஷ், சரவணன்.,ராம்ஜி., குமார்., சக்தி., கனி., சங்கர்., ஹேமா., கடல்.,ராமமூர்த்தி., சூரி.,ஸாதிகா., ஸ்டார்ஜன்.,முனியப்பன் சார்.,ரிஷபன்., செந்தில்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...