புதன், 11 ஆகஸ்ட், 2010

திரிசக்தியின் திரைச்சீலை.. எனது பார்வையில்..திரைச்சீலை காட்டும் பரிமாணங்களை சாதாரண ரசிகனாய் தனது பார்வையில் அசாதாரண நுணுக்கத்தோடு விவரிப்பதே ஜீவாவின் பாணி..
மிகச் சரளமான நடையில் ரசனை இதழில் நண்பர் மரபின் மைந்தன் முத்தையா ஊக்குவிக்க எழுதப்பட்ட இந்நூல் திரிசக்தி பதிப்பகத்தின் வெளியீடு.. விலை ரூ 90/-

திரைச்சீலை விலகியபின் தெய்வதரிசனம் தரும் இன்பத்தை ரசிகன் பெறுவதே இதன் வலிமை...அடிப்படையில் ஓவியரான ஜீவா உலகப் படங்கள் இந்தியப் படங்கள் ., ப்ராந்தியப் படங்கள் என பல்வேறுபட்ட ரசனைகளையும் குழைத்து வரைந்து இருக்கிறார் இதில்..ஒவ்வொன்றுக்கும் ஒரு சாம்பிள் போல..


A STORY CAN BE MANY THINGS. TO A PRODUCER IT'S A PROPERTY THAT HAS A BOX-OFFICE VALUE. TO A WRITER ITS A SCREEN PLAY. TO A FILM STAR IT'S A VEHICLE. TO A DIRECTOR IT'S AN ARTISTIC MEDIUM.TO A GENRE CRITIC IT'S A CLASSIFIABLE NARRATIVE FORM. TO A SOCIALOGIST IT'S AN INDEX OF PUBLIC SENTIMENT. TO A MOVIEGOER IT CAN BE ALL THESE, AND MORE. ..by LOUIS GIANNETTI.

மாறுபாடான திரைப்படங்கள் இயக்கும் முயற்சியில் ஈடுபட்ட ., ஈடுபடும் சிலர் மற்றும் அவர்களின் அற்புதப் படைப்பினைப் பற்றிய தொகுப்பு இந்நூல்.
37 அத்யாயங்களும் திரையுலக பிரபலங்களின் வார்த்தைகளுடன் தொடங்குகிறது .

”ஸ்பாகட்டி வெஸ்டர்ன்” படங்களைப் பற்றிக் குறிப்பிடும் இதில் பூகோளக் குளறுபடிகளுடன் இருப்பதின் நையாண்டியுடன் ஆரம்பிக்கிறது .படங்களின் பெயர்களைத் தமிழ்ப்படுத்தும் அடுத்த அபத்தத்தையும்., (தி குட் தி பாட் அண்ட் தி அக்ளி.. மண்டையோட்டில் டாலர் தேடும் மகாமுனியாய்..!!!) விட்டுவைக்கவில்லை.

திரைப்படங்களின் உருவாக்கம் ., வளர்ச்சி., வீழ்ச்சி., நிலைத்து நிற்கப் போராடுதல் இவற்றின் பகிர்வு .. நெடிய உழைப்பு ஜீவாவினுடையது.. தந்தையுடன் செல்ல ஆரம்பித்து இன்றுவரை பார்த்த திரைப்படங்களென்று தொகுத்து விவரிப்பது அழகு ... இது போன்ற ரசிகர்களால்தான் சின்னத்திரை இருந்தாலும் வெள்ளித்திரை ஜெயிக்கிறது..

தெருக்கூத்திலிருந்து எடுக்கப் பட்ட படங்கள் (வீரபாண்டிய கட்ட பொம்மன்)., புராணப் படங்கள்., மௌனப் படங்கள்., பேசும் படங்கள்.,சரித்திரப் படங்கள் ., புரட்சிப் படங்கள், குழுக்களாக படத்தை உருவாக்குதல்.,மற்றும்

பிண்ணனிக் களன்களோடு சம்பந்தப்பட்ட படங்கள் (பாலம்.- ப்ரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய், மருத்துவமனை- நெஞ்சில் ஓர் ஆலயம்., பயணம்- மோட்டர் சைகிள் டைரீஸ்.,) வெவ்வேறு கதாபாத்திரங்களின் மூலம் கதை சொல்லும் உத்தி(விருமாண்டி)., மற்றும்

மெதட் ஆக்டிங் (சிவாஜி)., பாரலல் சினிமா(அபர்ணா சென்., ஷ்யாம் பெனகல்).,சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி., மர்மத்திரைப்படங்கள்( ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்)., பாடல்கள் அற்ற சினிமா (அந்த நாள்).,மற்றும்

சிறிய பட்ஜெட் படங்கள்., குறும்படங்கள்(மாதவராஜின் இது வேறு இதிகாசம்) ., ஆவணப் படங்கள் ( ராமையாவின் குடிசை) ., யதார்த்தப் படங்கள் ( சீனிவாசனின் சிதம்பரம்., காதல்., வெய்யில்., தவமாய் தவமிருந்து.,ஆட்டோகிராஃப்).கனவுப்படங்கள் (ட்ரீம்ஸ்).,இரண்டாம் உலகப் போர் தொடர்பான படங்கள்(LA VITAE'S BELLE..LIF IS BEAUTIFUL) மற்றும்

மழைப் பாடல்கள்., கவிஞர்களின் பங்கு .,பெண் இயக்குனர்களின் பங்களிப்பு ., நடிகர்கள் டைரக்டராவதும் ., டைரக்டர்கள் ஹீரோவாய்., வில்லனாய் காமெடியனாய் நடிப்பதும்., மற்றும்

நான் லீனியர் கதை சொல்லும் உத்தியுடன் கூடிய படங்கள்(குவெண்டின் ட்ராண்டினோவின் பல்ப் ஃபிக்‌ஷன்)., நியோ ரியலிசப் படங்கள் ( பை சைக்கிள் தீவ்ஸ்).,ஈரானியப் படங்கள்(சில்ரன் ஆஃப் ஹெவன்) ., இலங்கையில் எடுக்கப்பட்ட படம்( மண்) .,சினிமா பாரடீசோ., சிடிசன் கேன்., மற்றும்

தாதாக்கள் படம் ( நாயகன்)., விளையாட்டு அல்லது பந்தயத்தை மையமாக வைத்து படங்கள் ( லகான்., எஸ்கேப் டு விக்டரி., ஜோ ஜீதா ஹை வோஹி சிக்கந்தர்) ., சண்டைப் படங்கள்.(எண்டர் தி ட்ராகன்), நகைச்சுவைப்படங்கள் (சார்லி சாப்ளினின் ஸ்லாப்ஸ்டிக் வகை காமெடி)., மற்றும்

ஹோலோகாஸ்ட்---இனப் படுகொலைப்படங்கள் (ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்)., சிறைச்சாலைப் படங்கள் ( மகாநதி., மதிலுகள்., ஷஷாங்க் ரிடெம்ஷன்) ., விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை.,( ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன்) ( ஜெயமோஹனின் ஏழாம் உலகம் நாவலில் வரும் பிச்சைக்காரர்களின் வாழ்வு சித்தரிக்கும் நான் கடவுள் ). , மற்றும்

சிவாஜி., ஸ்ரீதர்., மஜித்மஜீதி., ஆர்சன் வெல்ஸ்., அந்தோணி க்வின்., ஜி எம் கு்மார்., சேரன்., கின்லி .. என வியக்க வைக்கும் பகிர்வுகள் ஏராளம்..

இவற்றில் பலவற்றை சொற்ப படங்களே பார்த்திருக்கும் நானும் பார்த்திருக்கிறேன் என்பதே மிக வியப்பான ஒன்று .. அந்த அளவு தேர்ந்த ரசனையுடன் பரிமாறப்பட்டுள்ளது இந்தப் புத்தகம்.. 75 ஆண்டுகளுக்கும் மேலான சரித்திரம் உடைய சினி்மா உலகத்தை.. அகத்தியரின் கமண்டலம் போல் அடக்கி வைத்து இருப்பது ஜீவாவின் சாமர்த்தியம்..

ஒவ்வொரு சினிமா ரசிகனும் படித்து மகிழ வேண்டிய ஆவணம் இந்நூல்.
ஒவ்வொருவருக்கும் தனதான சினிமா சம்பந்தப் பட்ட எண்ணங்களை எழுப்புவது இந்நூலின் வெற்றி..

REMEMBER RED , HOPE IS A GOOD THING, MAY BE THE BEST OF THINGS. AND NO GOOD THING EVER DIES .-- BY ANDY DUFRESNE..

17 கருத்துகள் :

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

உங்க பதிவு மட்டும் படிக்க முடியாத அளவுக்கு சின்னதாக தெரிகிறது.. டெம்ளேட் சரி பண்ணுங்கள்...

அ.வெற்றிவேல் சொன்னது…

என் நண்பர் சந்தனார் வலைத்தலம் மூலமாக ஜீவாவின் வலைத்தளம் சென்று தமிழ் படிக்காத தமிழ் எழுத்தாளர் என்ற இடுகை பார்த்தேன்..அபூர்வ ஆளுமை ஜீவா என்பதை அந்த இடுகையிலே உணர்ந்தேன்.... அவருக்கு உரிய அனுபவங்களை கட்டுரையாக வெளியிட்டதாக அறிந்தேன்..அதற்கான தங்களின் அறிமுகம் படிக்க கிடைத்ததும் மிக்க மகிழ்ச்சி..இப்புத்தகத்தை படிக்க வேண்டும்.இந்த விடுமுறையில் ஜீவாவைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டுள்ளது தங்கள் அறிமுகம்///ஒவ்வொருவருக்கும் தனதான சினிமா சம்பந்தப் பட்ட எண்ணங்களை எழுப்புவது இந்நூலின் வெற்றி//// இதுவே மாபெரும் வெற்றி தானே.. என் ஆதர்ச நாயகர் சிவாஜி ஸ்ரீதர்,சேரன் பற்றியும் எழுதியுள்ளார் என்பதால் உடனடியாக படிக்க ஆவலாக் உள்ளேன்.. ஆவலைத் தூண்டும் விதமாக அறிமுகம் செய்துள்ள உங்களுக்கு நன்றி தேனம்மை

சசிகுமார் சொன்னது…

சூப்பர் அக்கா

butterfly Surya சொன்னது…

இந்த புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன்.

பகிர்விற்கு நன்றி தேனம்மை.

ஜீவா சாருக்கு வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி

நேசமித்ரன் சொன்னது…

தேனம்மை நல்ல பகிர்வும் பார்வையும்

பிடித்திருக்கிறது ...


இடுகையை இன்னும் கொஞ்சம் பகுத்து ரீடபிளா போடுங்க ப்ளீஸ்

என்னவோ கொச கொசவென இருப்பது போன்ற ஃபீல் :)

அம்பிகா சொன்னது…

நல்ல பகிர்வு. நன்றி தேனம்மை.

செ.சரவணக்குமார் சொன்னது…

வாசிக்கும் ஆவலைத் தூண்டும் பதிவு. ஜீவா சாருக்கு வாழ்த்துகள்.

கண்டிப்பா வாங்கிப் படிப்பேன்.

பகிர்வுக்கு ரொம்ப நன்றிக்கா.

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல பகிர்வு தேனம்மை. அழகாய் விவரித்திருக்கிறீர்கள்.

சங்கவி சொன்னது…

Very Super....

சே.குமார் சொன்னது…

இந்த புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன்.

பகிர்விற்கு நன்றி.

Muniappan Pakkangal சொன்னது…

Nice info Thenammai.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி செந்தில்., வெற்றி.,சசி., சூர்யா., டி வி ஆர்., நேசன் ( மாத்திட்டேன் நேசன்)., அம்பிகா.,சரவணன்., ராமலெக்ஷ்மி., சங்கவி., குமார்., முனியப்பன் சார்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

செந்தில்குமார் சொன்னது…

நல்ல பதிவு அக்கா அருமையான பகிர்வு

சந்திரமௌளீஸ்வரன் சொன்னது…

http://mowlee.blogspot.com/2011/07/blog-post_17.html

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி செந்தில்

நன்றி சந்திரமௌளீஸ்வரன்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...