திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தம்பி மக்கள்

கரும்புச்சாறோ., கன்னல் பாகோ
இரும்பு கூட உருகும் சிரிப்பு..
தேவதைகள் கூப்பிடும்
தேனத்தை அமிர்தமாய்..

வாசம் பொதிந்த
வளையல் துண்டுகளும்.,
கழுத்து மணிமாலைகளும்
வந்து சென்ற பின்னும்
வீடு கூட்ட ஏலாமல்...

சீட்டுக் கட்டில் சிதறிய ஜோக்கரும்
வாய் வைத்துக் குடித்த
குளிர்பானக் கோப்பைகளும்..
சுவற்றோரம் அப்பிக் கிடக்கும்
கோகோ கோனின்
குளிர் பனிக்குழைவுகளும்..


குழைந்தெடுத்து தோய்த்ததுபோல்
குழைய வைக்கும் கொஞ்சல்களும்
சிறு குறும்பும்.,செருப்பு மாறிப் போட்டுக்
கொண்ட செல்லக் கோபங்களும்..

மடியில் அமர்ந்து ரீங்கரித்த
ரிங்கா ரிங்கா ரோஸஸ்களும்
சோறைக் கண்டால் ஓட்டமாய் ஓடுவதும்
நூடுல்ஸ் பூரியை விரும்பி உண்பதும்...

நினைவலையின் அடுக்குகளில்
பின்னி அடங்காத பின்னல் சடையழகிகள்..
பெரிய கண்ணழகிகள் .. என்னை கண்
விழித்தே விழுங்கியவர்கள்..

விடுமுறைக்கு விடுமுறை
வளர்ந்து வியப்பாகியவர்கள்..
பச்சை மயில்கள்..
பாசக்காரக் கிளிகள்..

என் பிரபஞ்சத்துள் உட்புகுந்த
இரட்டை சூரியன்கள்..
பெண் இல்லாக் கலி தீர்த்த
பேரரசித் திருமகள்கள்..

உச்சி மோரும் போதெல்லாம்
உவப்பான அலை தவழும் உள்ளுள்..
வாழ்க வளர்க..எத்தனை பேறு உண்டோ
அத்தனையும் பெற்று..என் அருமை மக்கா.

டிஸ்கி:- என் வலையுலக சகோதரன் கோபிநாத் மு்த்துசாமிக்கு போனவாரம் பெண்குழந்தை பிறந்து இருக்கிறது.. ரோஷிணியும்., ராகவியும் புதுக் குட்டிப் பெண் ஜனனியும் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்..

26 கருத்துகள் :

meenamuthu சொன்னது…

அத்தனை பிரியமா இந்த பாசமுள்ள அயித்தைக்கு! குடுத்துவச்ச மருமக்கள்!

Mrs.Menagasathia சொன்னது…

கொடுத்து வைத்த மருமகள்...பாசமுள்ள அத்தை...சகோதரர்க்கும்,குட்டி செல்லத்துக்கும் வாழ்த்துக்கள்!!

அ.வெற்றிவேல் சொன்னது…

இப்படி ஒரு பாசக்கார அத்தை எத்தனை பேருக்கு வாய்க்கும்? அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அ.வெற்றிவேல் சொன்னது…

இப்படி ஒரு பாசக்கார அத்தை எத்தனை பேருக்கு வாய்க்கும்? அனைவருக்கும் வாழ்த்துக்கள்

சசிகுமார் சொன்னது…

//,செருப்பு மாறிப் போட்டுக்
கொண்ட செல்லக் கோபங்களும்..//

சூப்பர் அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கண்ணகி சொன்னது…

புதுக்கவிதை பரிசு அத்தைக்கு...

தமிழ் உதயம் சொன்னது…

இப்படி ஒரு பாசக்கார அத்தை எத்தனை பேருக்கு வாய்க்கும்///

அத்தனை பிரியமா இந்த பாசமுள்ள அயித்தைக்கு! ///

வலைப்பூக்களுக்குள் உறவு பூக்கள் மலர்வது சந்தோஷம்.

வானம்பாடிகள் சொன்னது…

en vaazhthugalum:)

ஜெய்லானி சொன்னது…

@@@அ.வெற்றிவேல் சொன்னது…

இப்படி ஒரு பாசக்கார அத்தை எத்தனை பேருக்கு வாய்க்கும்? அனைவருக்கும் வாழ்த்துக்கள் //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

சே.குமார் சொன்னது…

கொடுத்து வைத்த மருமகள்...பாசமுள்ள அத்தை...சகோதரர்க்கும்,குட்டி செல்லத்துக்கும் வாழ்த்துக்கள்!!

வலைப்பூக்களுக்குள் உறவு பூக்கள் மலர்வது சந்தோஷம்.

asiya omar சொன்னது…

கொடுத்து வச்ச மக்கா .வாழ்த்துக்கள்.
மிகவும் அருமை.

ரிஷபன் சொன்னது…

என் பிரபஞ்சத்துள் உட்புகுந்த
இரட்டை சூரியன்கள்..
பிரகாசமான நல்வாழ்த்துகள்..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

எனது வாழ்த்துகளும்

இளம் தூயவன் சொன்னது…

மிகவும் அருமை.

sakthi சொன்னது…

இப்படிக்கூட கவிதை எழுத இயலுமா

ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றீர்கள் தேனு

வாழ்த்துக்கள் உங்கள் செல்ல

மருமகள்களுக்கு + அழகாய் கவிதை

பாடும் அத்தைக்கும்

Ananthi சொன்னது…

குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்...

அக்கா.. இந்த வரிகள் மிகவும் ரசித்தேன்..

//என் பிரபஞ்சத்துள் உட்புகுந்த
இரட்டை சூரியன்கள்..
பெண் இல்லாக் கலி தீர்த்த
பேரரசித் திருமகள்கள்.. //

ரொம்பவும் அழகு அக்கா...:-)))))

Karthick Chidambaram சொன்னது…

இப்படி ஒரு பாசக்கார அத்தை எத்தனை பேருக்கு வாய்க்கும்? அனைவருக்கும் வாழ்த்துக்கள் //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

சீமான்கனி சொன்னது…

//உச்சி மோரும் போதெல்லாம்
உவப்பான அலை தவழும் உள்ளுள்..
வாழ்க வளர்க..எத்தனை பேறு உண்டோ
அத்தனையும் பெற்று..என் அருமை மக்கா.//


வாழ்க வளர்க...

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

என் தம்பி மகனை நினைத்துக்கொண்டேன்.வாழ்த்துக்கள் அத்தைக்கும், மருமக்களுக்கும்.

பூங்குழலி சொன்னது…

விடுமுறைக்கு விடுமுறை
வளர்ந்து வியப்பாகியவர்கள்..
பச்சை மயில்கள்..
பாசக்காரக் கிளிகள்

கொடுத்து வைத்த அத்தை ,கொடுத்து வைத்த மருமக்கள்

செந்தில்குமார் சொன்னது…

எத்தனை பேர்க்கு வாய்க்கும் இப்படி ஒரு பாசமுள்ள அத்தை....

நல்ல பகிர்வு அக்கா...

விஜய் சொன்னது…

அட்டகாசம் அக்கா

வாழ்த்துக்கள்

விஜய்

Muniappan Pakkangal சொன்னது…

Pinniadangaatha pinnal sadai azhahiagal-thambi pillaikalukku arumaiyaana kavithai Thenammai.

ராமலக்ஷ்மி சொன்னது…

//நினைவலையின் அடுக்குகளில்
பின்னி அடங்காத பின்னல் சடையழகிகள்..
பெரிய கண்ணழகிகள் .. என்னை கண்
விழித்தே விழுங்கியவர்கள்..//

அழகு அழகு.

உங்கள் நண்பர் குடும்பத்தினருக்கு என் வாழ்த்துக்கள்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி மீனா முத்து., மேனகா., வெற்றி., சசி.,கண்ணகி., ரமேஷ்., பாலாசார்., ஜெய்., குமார்., ஆசியா., ரிஷபன்., அக்பர்.,இளம்தூயவன்., சக்தி., ஆனந்தி., கார்த்திக்., கனி., சாந்தி., பூங்குழலி., செந்தில்., விஜய்., முனியப்பன் சார்.,ராமலெக்ஷ்மி.,

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...