31.ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
தியாகராஜனும் சரிதாவும் பாடும் பாடல். மிக அழகான காட்சியமைப்பு. எப்போதும் போலவே நான் தமிழ்ப் பாடல்களின் வரிகளுக்கும் காட்சியமைக்கும் அடிமை.
32. தேன் பூவே பூவே வா
அம்பிகாவும் லதாவின் சகோதரர் ராஜும்பாடும் பாடல். சந்தத்தோடு அழகாக அம்பிகா அபிநயம் செய்வது பிடிக்கும்.
ஐஸ்வர்யா பாடும் பாடல். இவரின் நடனத்துக்கு நான் அடிமை. மிக அழகான முகபாவங்களோடு பாடுவார். ஆட்டமும் காட்சியமைப்பும் இனிமை. மம்முட்டி இவருக்கு ஜோடி.
34. காலையும் நீயே மாலையும் நீயே
ஜெமினியும் வைஜெயந்தி மாலாவும் பாடும் பாடல்.. அந்தியும் விடியலும் கலந்த ஒரு நதிக்கரையில் அற்புதமாக நடனமாடுவார் வைஜெயந்தி. நளினமான மெல்லிய அழகுள்ளவர் அவர்.
35. முதன்முதலாக முதன் முதலாக
முதன்முதலாக என்ற பாடல் காஜோலின் தங்கையும் வினயும் பாடுவது. இளமை துள்ளும் பாடல்.
36. என் வாழ்விலே.. -- ஜானி
ஜானியில் ஸ்ரீதேவி பாடும் பாடலுக்கு ரஜனி ரசிகராக இருப்பார். மெல்லிய இசையோடும் சந்தத்தோடும் கூடிய பாடல்.
37. போ நீ போ.. தனியாக தவிக்கின்றேன்.
இதன் வேகமான வரிகளுக்காகப் பிடிக்கும். முழுக்க முழுக்க இளையவர்களின் பிரியம் இந்தப் பாடல். அவர்கள் கேட்கும்போது மனசுக்குள் உருளும்.. தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ போ என்று விரட்டுவது போல இருக்கும். J
38. ஆடுவோர் ஆடினால் ஆடத் தோன்றும்.
ஜெயாம்மாவின் ரசிகை நான் அவர் பாடிய ஆடிய பாடல்களில் மிகப் பிடித்த பாடல். மிகக் கம்பீரம் வாய்ந்த பெண்மணி அவர். யாருமே எதிர்நிற்க முடியாது. அழகிலும் கனிவிலும் புன்னகையிலும் ஆளுமையிலும் என்னைக் கவர்ந்தவர். நடிக்கும் காலத்தில் பச்சைப் பிள்ளையைப் போல புத்தம் புதுசாகப் பிறந்தது போன்ற சிரிப்போடு இருப்பார்.
39. what a waiting what a waiting. நினைத்தாலே இனிக்கும்
காதல் பாடல்களில் இது காத்திருத்தல் பாடல். மலேசியாவில் ஜெயப்ரதாவுக்காக கமல் காத்திருக்கும் பாடல். பாப் தலையோடு ஜெயப்ரதா மிக இளமையாக இருப்பார். தலை வழக்கம்போல எப்பவும் ஸ்மார்ட்..
40. சொந்தமில்லை பந்தமில்லை
ஏதேனும் வருத்தம் இருந்தால் முணுமுணுக்கும் பாடல். அன்னக்கிளியில் சுஜாதா பாடியது. என்னவோ அவரைப் பார்த்தால் அம்மாவோ சித்தியோ போல ஒரு உருவ அமைப்பு இருக்கும். அதனாலேயே பிடித்துப் போன பாடல்.
டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)
1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.
2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.
3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.
4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்.
5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்
6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும்.
7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.
8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.
9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.
10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.
11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.
12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.
13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.
14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.
15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.
16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.
17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும்.
18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும்.
19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.
20. தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.
21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.
22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.
23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )
24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.
25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.

ரசனைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குஜெயப்ரதாவின் சகோதரர் ராஜும்////////
பதிலளிநீக்குதாங்கள் குறிப்பிடும் நடிகர் லதாவின் சகோதரர்
உள்ளம் கொள்ளை போகுதே.....உங்கள் தேர்வுகள் !
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சகோ
பதிலளிநீக்குநன்றி பெயரில்லா திருத்தி விட்டேன்
நன்றி உமேஷ். !
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!