எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 மார்ச், 2014

தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்41.ஒரு மாலை இளவெய்யில் நேரம். 
சூர்யாவின் கஜனி  படப் பாடல்.அழகும் குறும்பும் துள்ளும் அசினும், இளமையான சூர்யாவும் காட்சியழகு.42. நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் 
கனகா சிவாஜி காம்பினேஷனில் மிகவும் ரசிக்கும் பாடல். ரொம்ப அந்யோன்யமும் அன்பும் வாஞ்சையும்  கொஞ்சலும் வழியும் பாடல்.43. காடு திறந்து கிடக்கிறது.-- வசூல் ராஜா 
தலை கூட யார் நடிச்சாலும் கெமிஸ்ட்ரி கன்னா பின்னான்னு வொர்க் அவுட் ஆகும் என்பது என் தலைவரின் அசைக்க முடியாத கருத்து. அதே போல சிநேகாவுடன் பாடும் இந்தப் பாடல் செம அழகு. இளமையும்  அழகும் அன்பும் கொட்டிக் கிடக்கும் தமிழ் நடிகை சிநேகா. அவர் இன்னும் உயரங்களுக்குச் சென்றிருக்க வேண்டும்..
44. இரு விழி உனது. -- மின்னலே. 
மாதவன் பாடும் பாடல் இது கிடாரில் வாசிக்க அருமையாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு முறை முகநூல் நண்பர் ஜே எஸ் ராஜ்குமார் இதை கிடாரில் வாசித்தபடி பாடியதை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். பிரிவையும் அன்பையும் ஒரு சேர உணர்த்தும் பாடல்.45. உள்ளம் என்றொரு கோயிலிலே -- அன்பே வா 
சரோஜாதேவியும் எம்ஜியாரும் பாடும் அன்பே வா படப் பாடல். மிக மிகப் பிடித்த பாடல். வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுற்றிச் சுற்றி ஏக்கத்தை வெளிப்படுத்த அன்புக்காக இறைஞ்சியபடியே சரோஜா தேவி பின்னால் எம்ஜியார் பாடியபடி போவார்.46. கங்கைக் கரைத்தோட்டம். 
பிரிவின் துயரை வெளிப்படுத்தும் பாடல். சௌகார் ஜானகி பாடியது படத்தில் கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே என அவர் பாடும்போது நமக்கும் கண் கனக்கும். கண்ணன் நடுவினில் வரமாட்டானா என்று ஏங்க வைக்கும் பாடல்.47. மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
அதே பிரிவின் தனிமையை உணர்த்தும் இன்னொருபாடல் இது. தனிமையும் துயரமும் பெருகி வீழ்த்தும் பாடல் இது. சௌகார் ஜானகி பாடும் பாடலிது. கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் மறைந்தது ஏன் தோழி என இதிலும் வினவுவார் அவர்.. பதில் இல்லாத கேள்விகள்.48. உன் பேரைச் சொன்னாலே 
உன் பேரைச் சொன்னாலே என் நாவில் தித்திக்குதே. டும் டும் டும் என்ற படத்தில் ஜோதிகாவும் மாதவனும் பாடும் பாடல். ரொம்ப ரசனையான படம்.
49. சித்திரம் பேசுதடி 
சபாஷ் மீனாவில் சிவாஜி பாடும் பாடல். நடிகை மாலினியின் ஓவியத்தை வரைந்து விட்டுப் பாடுவார். அதை மாலினியும் மறைந்திருந்து ரசித்துக்கேட்பார். 
”என் மனம் நீயறிவாய் 
உந்தன் எண்ணமும் நானறிவேன்
இன்னமும் ஊமையைப் போல் மௌனம்
ஏனடி தேன்மொழியே.. “ என்ற வரிகள் அற்புதம். 


50. நெஞ்சில் குடியிருக்கும் 
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா.  என்ற இந்தப் பாடலை இரும்புத்திரை என்ற படத்தில் நல்ல வசீகர பாவனைகளோடு வைஜெயந்திமாலா சிவாஜியைப் பார்த்துப் பாடுவார். ரசனையான பாடல். 

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.


4 கருத்துகள்:

 1. மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெஞ்சில் குடியிருக்கும் என அனைத்தும் இனிமையான மயக்கும் பாடல்கள்...

  கெமிஸ்ட்ரி கன்னா பின்னா என்பது 100%

  பதிலளிநீக்கு
 2. நல்ல பாட்டுக்கள் இந்த கலெக்ஷன் அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. நன்றி தனபாலன் சகோ

  நன்றி கும்மாச்சி.

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...