எனது நூல்கள்.

வெள்ளி, 28 மார்ச், 2014

சிவகுமார் அசோகனின் குறுக்கு மறுக்கு.

சிவகுமார் அசோகனின் குறுக்கு மறுக்கு.

20 கட்டுரைகளும் 10 கதைகளும் அடங்கிய தொகுப்பு.

தன்னம்பிக்கை, அனுபவம், ஹாஸ்யம், பங்குச்சந்தை, தத்துவம் இதை எல்லாம் தேவையான அளவு  போட்டு குலுக்கி எடுத்து வைத்தால் அதுதான் குறுக்கு மறுக்கு..

 கிங்கா மிங்கா கட்டுரைகள், தத்துப் பித்துக் கதைகள் என்று தலைப்பிட்டு இருக்கிறார். ரொம்ப சரிதான்.


குட் டச், பேட் டச், டாக்டர்களின் அசால்டான வார்த்தைப் பிரயோகம் , கையெழுத்து, சிக்கனம்,கெட்ட வார்த்தை பேசுபவர், ஆம்பிள்ளைக்கு அழகு பற்றி நச்சென்று சொல்லி இருக்கார்.

எழுத்தாள வந்த சரித்திரம் ஹைக்கூ போல க்ளெரிஹ்யூ ( CLERIHEW)  வை அறிமுகப்படுத்தியது. தலைமைப் பண்பின் உத்திகள் எப்படி நம்மை அவர்கள் உபயோகித்துக் கொள்கிறார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டியது.

புலியும் பூனையும், எருமையின் பொறுமையும் ரொம்ப யோசிக்க வைத்தவை. பங்குச் சந்தையில் ஆமையாகவும் ஊமையாகவும் எப்போது இருக்கவேண்டும் என்பதைப் படித்துச் சிரித்துக் கொண்டிருந்தேன்.

கதைகளில் எனக்கு எதிர் வீடு ரொம்பப்பிடித்தது. தொலைக்காட்சியை ஒரு முறை நன்கு நிமிர்ந்து பார்த்துப் புன்னகைக்க வைத்தது.

அன்புள்ள மானுடத்திற்கு மனதை என்னவோ செய்த கதை.. ஹ்ம்ம் நாம் என்ன திருந்திவிடவா போகிறோம்.. தின்னும் ஆசை தீர்வதேயில்லையே என நினைத்துக் கொண்டேன்.

நண்பேன் டா மீண்டும் புன்னகைக்க வைத்தது.

நல்ல பொழுதுபோக்குக் கட்டுரைகளும், சிந்தனையூட்டும் கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

அகநாழிகையின் வெளியீடு.

விலை ரூ 70.


3 கருத்துகள் :

சே. குமார் சொன்னது…

எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...