சனி, 16 மே, 2015

விளையாட்டும் வார்த்தைகளும்.

 
சின்னப் பிள்ளையில் எவ்வளவோ விளையாட்டு விளையாடி இருப்போம். இது போல சில வார்த்தை விளையாட்டுகளை இப்போது உள்ள தலைமுறை அறியாது.
 வீட்டில் சிறு குழந்தைகளுடன்கூட கை வைத்து விரலில் தொட்டுச் சொல்லி விளையாடும் விளையாட்டும் இருக்கிறது. இது பந்து விளையாடும் போது சொல்லி அடிப்பது.
 இதை தாமோதர் அண்ணன் ஆரம்பித்து வைக்க அதை நான் என் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அதிலிருந்து ஒவ்வொருத்தர் எழுதிய பகிர்வையும் இங்கே கொடுத்துள்ளேன். படிச்சு பழைய நினைவுகளில் ஆழ்ந்து  ரசிங்க. :)  
Damodar Chandru
July 22கீரை கீரை
என்ன கீரை? - அறைக்கீரை
என்ன அறை? - பொன் அறை.
என்ன பொன்? - காக்காய்ப்பொன்
என்ன காக்காய்? - அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? - பிரம்மாண்டம்.
என்ன பிரம்மா? - சதுர்முகப்பிரம்மா.
என்ன சதுர்? - மாஞ்சதுர்.
என்ன மா? - நெல்லுமா.
என்ன நெல்? - சம்பாநெல்.
என்ன சம்பா? - முத்துச்சம்பா.
என்ன முத்து? - கொட்டைமுத்து.
என்ன கொட்டை? - முந்திரிக்கொட்ட .
அதிஷா அதிஷா
என்ன முந்திரி - கார முந்திரி
என்ன காரம் - இனிப்பு காரம்
என்ன இனிப்பு - லட்டு இனிப்பு

என்ன லட்டு - சீனி லட்டு
என்ன சீனி - கடை சீனி
என்ன கடை - வடை கடை
என்ன வடை - கீரை வடை
என்ன கீரை - அரக்கீரை.


Thenammai Lakshmanan :-
பிஸ்கட் பிஸ்கட் என்ன பிஸ்கட் - ஜம் பிஸ்கட்
என்ன ஜம் - ராஜம்
என்ன ரா - கோ ரா
என்ன கோ - டீ கோ
என்ன டீ - ரொட்டி
என்ன ரொட்டி - பன் ரொட்டி
என்ன பன் - ரிப்பன்
என்ன ரிப்பன் - பச்சை ரிப்பன்
என்ன பச்சை - மா பச்சை
என்ன மா - திரிமா
என்ன திரி - விளக்குத்திரி
என்ன விளக்கு - குத்து விளக்கு
என்ன குத்து - கும்மாங்குத்து...

இப்பிடின்னு சொல்லி சின்னப் பசங்க ஃபாஸ்டா பந்தால ஒருத்தர் மேல ஒருத்தர் அடிப்பாங்க. இது ஒரு தலைமுறையின் சம்மர் விளையாட்டு.

எச ஸ்டேடஸ் டு Damodar Chandru anna's Status.


Geetha Mathivanan பொங்கலோ பொங்கல்
என்ன பொங்கல் – சக்கரப் பொங்கல்
என்ன சக்கரை – நாட்டு சக்கரை
என்ன நாடு – வட நாடு
என்ன வட – ஆமை வட
என்ன ஆமை – குளத்தாமை
என்ன குளம் – திரி குளம்
என்ன திரி – விளக்கு திரி
என்ன விளக்கு – குத்து விளக்கு
என்ன குத்து – கும்மாங்குத்துன்னு நாங்க அடிப்போம்


Geetha Mathivanan நீங்க சொல்ற பாட்டை வட்டமாய் உட்கார்ந்து தரையில் கைகளைப் பரப்பிவைத்து விளையாடுவோம் தேனம்மை.
பிஸ்கட் பிஸ்கட்
என்ன பிஸ்கட் – ஜம் பிஸ்கட்
என்ன ஜம் – ராஜம்
என்ன ரா – கோரா
என்ன கோ – டீகோ
என்ன டீ – ரொட்டீ
என்ன ரொட்டி – பன் ரொட்டி
என்ன பன் – ரிப்பன்
என்ன ரிப்பன் – பட்டு ரிப்பன்
என்ன பட்டு – நார்ப்பட்டு
என்ன நார் – தேங்கா நார்
என்ன தேங்கா – புளியந்தேங்கா
என்ன புளி – மாம்புளி
என்ன மா – அம்மா
அம்மான்னு யார் கையில் முடியுதோ அவங்க அந்தக் கையை எடுத்துடணும். மறுபடியும் ஆரம்பிச்சு ஒரு ரவுண்டு வரும்.


Sakuntala Kesavan அடாடா! இப்படி பாட்டெல்லாம் போட்டு என்னை 10 வயசாக்கிட்டிங்களே தேன்! ''கோபாலா எங்கே போறே? கடைக்கு போறேன்'' னு ஒண்ணு பாடுவாங்களே!

பெ. கருணாகரன் பே பே - என்ன பே
பந்து பே - என்ன பந்து?
ரப்பர் பந்து - என்ன ரப்பர்
ஆமை ரப்பர் - என்ன ஆமை
குளத்தாமை - என்ன குளம்
திரி குளம் - என்ன திரி
விளக்கு திரி - என்ன விளக்கு
குத்து விளக்கு - என்ன குத்து
கும்மாங்குத்து


Ramasubramanian Iyer Thappu.. Enna ribbon? Pacha ribbon. Enna pacha? Maa pacha. Enna maa? Amma. Enna amma? Teacher amma. Enna teacher? Kanakku teacher. Enna kanakku? Veettu kanakku. Enna veedu? Maadi veedu. Enna maadi? Motta maadi. Enna motta? Pazhani motta. Enna pazhani? Vada pazhani. Enna vada? Aama vada. Enna aama? Kolathaama. Enna kolam? Thee kolam. Enna thee? Velakku thee. Enna velakku? Kuthu velakku

Sundarii Selvaraj ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்திச்சி..ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்திச்சி,மூணு குடம் தண்ணி ஊத்தி.... இப்படியே போகுமே தேனு.. பச்சைக் குதிரை தாண்ட ஒரு பாட்டு,என் எல்லாத்துக்குமே பாட்டாவே பாடுவோமே..

இதெல்லாம் போக ராம்ஜி வெங்கட்ராமன் தன்னோட முகநூல் பக்கத்துல இப்பிடி ஒரு பாட்டைப் பதிஞ்சிருந்தார்.
சின்ன கணேசா பெரிய கணேசா. அப்பளம் தின்னியா. கொப்பளம் வந்துச்சா. மீன் தின்னியா. மீசை முளைச்சுச்சா. உன் பேச்சு கா. என் மஞ்சத்தண்ணியை தா. உனக்கும் எனக்கும் பேச்சில்ல. உங்க அப்பா கைல வாட்ச் இல்ல. /பாலாவும் மயூரியும் இதைச் சொல்லிச் சொல்லி என்னையும் முணுமுணுக்க வைச்சிட்டாங்க./,

இந்தப் பாட்டு கேள்விப்பட்டது இல்லை. இப்பிடியான பாட்டு இருந்தா தொடருங்க மக்காஸ். எனக்கும் இணைப்பு கொடுங்க ப்ளீஸ். 

-- நீங்க சொல்றது கரெக்டுதான் ராமசுப்பு சார். நான் கொஞ்சம் மறந்துட்டேன் போல. :)

--- ஆமா இது போல குலை குலையா முந்திரிக்கா, கிளியாந்தட்டு, அஞ்சுகல் விளையாட்டு, கை வைச்சு விளையாடும் விளையாட்டு இதெல்லாம் வீட்டுல முற்றத்துல உக்கார்ந்து விளையாடுறது. இன்னும் பல்லாங்குழி, சோகி, தாயம் , பரமபதம், லூடோ, சைனீஸ் செக்கர்ஸ், ட்ரேட்/பிஸினஸ்,  காரம்போர்டு , செஸ் இதெல்லாமும் விளையாடி இருக்கோம்.இன்னும் பசங்க ரோட்ல, க்ரிக்கெட், கபடி, ஒளிஞ்சு பிடிச்சு, டயர் ஓட்டுறது, கோலி, கில்லி டண்டா எல்லாம் விளையாடுவாங்க.  இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் எந்த விளையாட்டாவது விளையாடுறாங்களா. 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் -- பகுதி - 1.தாப்பூ தாமரைப் பூ.

2. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட்டப் ப்ராந்து.


3. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 3. கல்லா மண்ணா.

 

 

4.  குழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம்ஸ் - INDOOR GAMES )

 

5. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 5. ஐ ஸ்பை, I SPY.

 

6. குழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு. 

 

விளையாட்டும் வார்த்தைகளும். 

 

 7. குழந்தைகள் விளையாட்டு பகுதி 7 . ஈஸி சுடோகும் காகுரேவும்.

 

8.  குழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.

 

 

9. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா இரட்டையா & ஒருபத்தி திருபத்தி. 

 

10. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்புச் சாமானும் நுங்கு வண்டியும்.


      

14 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைக்கு வீட்டில் ஆரம்பித்து விட வேண்டியது தான்...

ஸ்ரீராம். சொன்னது…

கோபாலா
ஏன் ஸார்?
எங்க போறே?
கடைக்குப் போறேன்
என்ன வாங்க?
விறகு வாங்க?
ஓடிப்போனா?
ஒளிஞ்சுக்குவேன்!
யாரைப் போல?
இந்தப் பொண்ணைப் போலே!

ஒரு சினிமாப் பாடலாகவும் வந்தது!

ஸ்ரீராம். சொன்னது…

கபடி விளையாட்டில் சொல்லும் ரைமிங்கான வார்த்தைகளும் ரசிக்க வைக்கும். இதை வைத்து பழைய எம் ஜி ஆர் படத்தில் சரோஜா தேவி நடிக்க ஒரு பாடலே இருக்கிறது!

Thenammai Lakshmanan சொன்னது…

அன்பே வா படத்தில் ஒரு பாடலில் இப்படி வரும் அதுவா.

/// ஹேய் நாடோடி.. நாடோடி ..போக வேண்டும் ஓடோடி..ஓடோடி..

ஹேய் வாயாடி.. வாயாடி.. ///

அப்புறம் ஞாபகம் இல்லை :)

ஸ்ரீராம். சொன்னது…

https://www.youtube.com/watch?v=L4g99Uq9jxM

ஸ்ரீராம். சொன்னது…

கபடிக் கபடி கபடிக் கபடிக் கபடிக் கபடி...
காசுக்கு ரெண்டடி..சோளப் பொரியடி
சொக்கட்டான்...சொக்கட்டான்...சொக்கட்டான்...


Thenammai Lakshmanan சொன்னது…

அஹா அட்டகாசமான பாட்டு ரசித்துப் பார்த்தேன். விளையாட்டும் பெண்களும் பாடல்களும்னு ஒரு பகிர்வு போடலாம் போலிருக்கே.

ஆல்வேஸ் திங்க் லைக் எ ப்லாகர் :) ஹாஹா :)

ஸ்ரீராம். சொன்னது…

தோற்ற டீமுக்கு பாய்ண்ட் ஏறும்போது,

தோற்ற கட்சி ஜெயிக்குது ஜெயிச்ச கட்சி தோற்குது ..
----------------------------------------------
நாய் குலைக்க, நரி குலைக்க... நாய் குலைக்க நரி குலைக்க நாய் குலைக்க...

தன் டீமைக் காப்பாற்றக் களமிறங்கும்போது,

தோற்ற கட்சி ஜெயிக்கவே
தோலில் சப்பரம் கட்டுவேன்

---- -- - - - - - - - - - - - - - - - - - -
-- - - - - - - - - - - - - - - - - - - -
நாய் குலைக்க நரி குலைக்க....

நடுவில் கோடிட்ட இடங்களில் நான்கைந்து வரிகள் வரும். மறந்து விட்டது! எவ்வளவு வருஷமாச்சு?

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

குழந்தைப்பருவ பழைய நினைவுகளைக் கிளறி விட்டுள்ளீர்கள். அவை மிகவும் இனிமையான நாட்கள், நம்மைப் போன்ற தலைமுறையினருக்கு மட்டும். :)

http://gopu1949.blogspot.in/2012/03/2.html என் இந்தப்பதிவின் கடைசியில் ஓர் சிறிய பாடல் கொடுத்துள்ளேன். நான் ஒன்றாம் கிளாஸ் படித்தபோது எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டது. இன்னும் என்னால் மறக்கவே முடியவில்லை. :)

அதில் தாங்கள் கொடுத்துள்ள கமெண்ட்ஸ்:
-=-=-=-=-=-
தேனம்மை லெக்ஷ்மணன் March 10, 2012 at 9:35 PM
செம இண்டரஸ்டிங்கா போயிகிட்டு இருக்கு.. ஒரு புக்காவே போடலாமே சார்..:)
-=-=-=-=-=-

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

ஸ்ரீராம் கடைசிப் பாட்டு நான் கேள்விப்பட்டதில்லை. உங்க சக நண்பர்களிடம் ( வயசுத் தோழர்களிடம் ) கேட்டு முழுசா போடுங்க வித்யாசமா இருக்கு :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா நன்றி கோபால் சார் பார்க்கிறேன். புக்கா போட்டீங்களா என்ன ..:)

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சூப்பர் சூப்பர்! இதில் ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்தது விளையாடி உள்ளோம்...

வார்த்தை விளையாட்டு மிக அழகும் மிகவும் ரசித்தோம்..எல்லாவற்றையும்......

Thenammai Lakshmanan சொன்னது…

அதுவும் நல்ல ரிதமிக்கான பாட்டுத்தான் துளசி சகோ. அடுத்தடுத்த இடுகைகளி வருது :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...