எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 மே, 2015

குழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு.27.டயர் விளையாட்டு:-
பழைய சைக்கிள் டயரை எடுத்து அதை ஒரு குச்சியால தட்டினபடி ஓட்டுறது. கூடவே ஓடுறது.. நினைச்சுப்பார்த்தா ஆச்சர்யமா இருக்கு. அப்போ உள்ள பிள்ளைகள் ஓடி ஆடி விளையாட எளிமையான பொருட்களைக் கைக்கொண்டிருந்திருக்காங்க. !

28.கோலிக்குண்டு  

கோலிக்குண்டு அடிக்கிறது / ஒரு வட்டத்துல போட்டு அதையும் குறிபார்த்து அடிக்கிறது.இத பளிங்குன்னும் சொல்வாங்க. இதுலயும் விதம் விதமா ஆட்டம் இருக்கு. இதே போல் ஆட்டாம் புழுக்கையையும் சுத்தி ஒரு வட்டம் போட்டு ஒரு ஓட்டாஞ்சில்லால அடிச்சு விளையாடுவாங்க.


கும்பலா எல்லாரோட கோலிக்குண்டுகளையும் சுவரோரமா ஒரு வட்டம் போட்டு குமிச்சு வைச்சிருப்பாங்க. தூரத்துல நின்று குறிபார்த்து அடிச்சி அதை சிதறடிக்கணும். அதே சமயத்துல ஒன்றாவது வட்டத்தை விட்டு வெளியே வந்தால்தான் அடுத்து ஆடலாம். அப்புறம் ஒருத்தர் கோலிக்குண்டை இன்னொருத்தர் கோலிக்குண்டால அடிக்கிறது. இதுக்கு இடது கை ஆட்காட்டி விரல்ல கோலிக்குண்டைப் பிடிச்சிட்டு நாக்கைத் துருத்திட்டு வலதுகையால பிடிச்சி குறிபார்த்து அடிப்பாங்க. சில சமயம் எதிராளி கோலிக்குண்டு சில்லா ஒடைச்சிரும். அப்போ இருக்கு பாருங்க ஒரு அழுவாச்சி..:)

29.பம்பரம் விடுறது
பம்பரமும் அப்போ உள்ள புள்ளங்க விளையாடின வீர விளையாட்டுகள்ல ஒண்ணு. சில பம்பரம் கீழ்பக்கம்மட்டும் ஷார்ப்பா மேலே மொன்னையாதான் இருக்கும் . சிலதுக்கு மட்டும் உச்சிலயும் ஆணி அடிச்சிருக்கும். அந்தப் பம்பரத்தைப் பார்த்தாலே பயமா இருக்கும். ஒரு சாட்டைக் கயிறை வைச்சு கீழேயிருந்து மேலே வரைக்கும் சுத்தி மோதிர விரலாலயும் சுண்டு விரலாலயும் கயித்து முடிச்சப் பிடிச்சிக்கிட்டு சர்ருன்னு தரையில விடுவாங்க சிலர் அதக் கையில ஏந்தி இன்னொருத்தர் கையிலயும் விடுவாங்க குறுகுறுன்னு இருக்கும். சில கில்லாடிங்க கயித்திலேயே பம்பரத்தைச் சுத்திவிட்டு சுத்த விடுவாங்க. இத எல்லாம் பிரமிச்சுப்போயிப் பார்க்குறது. J !

30.ஸ்கிப்பிங்:-
இதுதான் நாங்க விளையாடுற விளையாட்டு. ஸ்கிப்பிங்க் ரோப் கட்டையைக் கையில பிடிச்சிட்டு முன்னாடி 100 தரம், பின்னாடி 100 தரம் அப்புறம் சைடாகுலயும் ரெண்டுபக்கமும் சுத்தி சுத்தியும் ஆடுறது. ஆடும்போது தடுக்கிருச்சுன்னா அவுட். அடுத்தவங்ககிட்ட கொடுத்துடவேண்டியதுதான். பொதுவா ஆளுக்கொண்ணு வைச்சிருப்போம். இந்த ஸ்கிப்பிங் ரோப்போட கைப்பிடிக்கட்டை நல்ல மிட்டாய் ரோஸ் கலர்ல பெயிண்ட் அடிச்சி இருக்கும். தொட்டா கைக்கு ஏத்தமாதிரி வழுவழுன்னு செதுக்கி இருக்கும். J

31.ம்யூசிகல் சேர்
இது பலர் சேர்ந்து விளையாடும் விளையாட்டு. பொதுவா வீட்டுல விசேஷம் சமயம் நிறைய சேர் போட்டு இருப்பாங்க. அப்ப விளையாடுறது. அப்ப யாரையாவது பாட்டு பாட சொல்றது. ஆனா இதுக்கு பேக்ரவுண்ட்ல ம்யூசிக் ஒலிக்க ஓடுறதுதான் போட்டிகள்ல நடக்கும். ஓடுற ஆட்களை விடக் குறைவா சேர் போடுவாங்க. கடைசீல ஒரு சேர் இருக்கும். இரண்டு பேர் ஓடி ஒருத்தர் இடத்தைப் பிடிப்பாங்க. அவங்கதான் வின்னர். 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் -- பகுதி - 1.தாப்பூ தாமரைப் பூ.

2. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட்டப் ப்ராந்து.


3. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 3. கல்லா மண்ணா.

 

 

4.  குழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம்ஸ் - INDOOR GAMES )

 

5. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 5. ஐ ஸ்பை, I SPY.

 

6. குழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு. 

 

விளையாட்டும் வார்த்தைகளும். 

 

 7. குழந்தைகள் விளையாட்டு பகுதி 7 . ஈஸி சுடோகும் காகுரேவும்.

 

8.  குழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.

 

 

9. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா இரட்டையா & ஒருபத்தி திருபத்தி. 

 

10. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்புச் சாமானும் நுங்கு வண்டியும்.

 
 

7 கருத்துகள்:

 1. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 2. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  ஆம் டிடி சகோ :)

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 4. அந்த விளையாட்டுக்களை நினைத்தாலே நாமும் சிறுவர்/சிறுமியர் ஆகிவிடுகிறோம், மனதளவிலாவது. பகிர்வுக்கு மகிழ்ச்சிகள்.

  பதிலளிநீக்கு
 5. ஆஹா! டயர் ஓட்டிய நினைவு.....அப்படியே மனதில் விரிந்தது......

  பதிலளிநீக்கு
 6. ஆம் கோபால் சார். கருத்துக்கு நன்றி :)

  டயர் விளையாட்டு விளையாடி இருக்கீங்களா துளசி சகோ. :) அருமை நல்ல ஓட்டப்பயிற்சி அது :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...