எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 27 ஜூன், 2014

சிகரம் ஃபைனல் ஸ்கிரிப்ட்.

இதுதான் ஃபைனல் ஸ்க்ரிப்ட் :-

சிகரம். ஸ்க்ரிப்ட்.:-
******************************

சீன் :- 1
************

காரெக்டர்ஸ் :-
**********************

1. பெண்ணின் அப்பா

2. அவரின் நண்பர்.

3. பெண்ணின் அம்மா.

லொகேஷன்-
*******************

ஒரு வீட்டின் ஹால்.  அங்கு  சோஃபாவில்  அமர்ந்து திருமண ஆல்பத்தைப் பார்த்துக்  கொண்டிருக்கிறார்கள் பெண்ணின் அப்பாவும் அவரது நண்பரும்.  அதில் மாப்பிள்ளை பெண்ணுக்குத் தாலி கட்டும் போது அனைவரும் சந்தோஷமாக அட்சதை தூவும் நிகழ்ச்சி. .


காமிரா அதிலிருந்து மீண்டு பெண்ணின் அப்பாவின் நண்பர் முகத்துக்கு க்ளோசப்பாக வருகிறது.

அவர் திரும்பி பெண்ணின் அப்பாவிடம் சிரித்தபடி கேட்கிறார்..
நண்பர்.:- டேய் நீயும் விருந்தாளி மாதிரி வெளிநாட்டுலேருந்து  பொண்ணு கல்யாணத்துக்கு வந்து  இவ்வளவு சீக்கிரமா எல்லாத்தையும் எப்பிடிடா முடிச்சே..?


பெண்ணின் அப்பா:-  சிகரம் திருமண சேவை  மூலமா பொண்ணுக்குப் பொருத்தமான மாப்பிள்ளை பார்த்தேன்.!

 சிகரம் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸில்  எல்லாருக்கும்  டிக்கட்  போட்டுட்டேன். !!

பெண்ணின் அம்மா :- ( காஃபிக் கோப்பைகளை சுமந்தபடி நடந்து வந்து கொண்டே ) என் மகளுக்குப் பிடிச்ச நகை., புடவை   அத்தனையையும் சிகரம் ஆன்லைன் ஷாப்பிங்க் மூலமா வாங்கினோம் .!!

 பெண்ணின் அப்பா  :- முக்கியமா. சிகரத்தோட சேவையின் சிறப்பு என்னன்னா  உலகத்துல நாம எங்கே இருந்தாலும் எந்த நேரத்துக்கும் நமக்குப் பணத்தேவை ஏற்பட்ட அடுத்த நிமிஷம் சிகரம் மணி ரெமிட்டன்ஸ் மூலமா நாம பணப் பரிமாற்றம் செய்துக்கலாம். 
இருவரும் காஃபி அருந்தியபடி இருக்கிறார்கள்.அம்மா அங்கே நிற்கிறார்.
பெண்ணின் அப்பா :- சிகரத்தோட கையில எங்களைக் கொடுத்தோம். சிகரத்தோட சேவையினால ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.

கான்செப்ட் கண்க்ளூஷன்.:-
***************************************
இருவரும் எழுந்து நின்று கைகளை தம்ப்ஸ் அப் செய்தபடி..
”நாமெல்லாம் சிகரத்தை நாடுவோம். சந்தோஷமா இருப்போம்.”
சிகரம் நிறுவன இயக்குநர் :-  “இது உங்கள் சிகரம். நீங்களும் சிகரத்தை நாடுங்கள்.”

இணையில்லா இணையதளம்.  www.sikaram.com .

3 கருத்துகள்:

  1. புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். விளம்பரம் எடுப்பது என்பது ஒரு சினிமா எடுப்பது போன்றதுதான்.
    ஆர்வமும் ஊக்கமுமே நம்மை முன்னிலைப் படுத்தும். வாழ்த்துகள்!.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...