எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 ஜூன், 2014

என் முதல் புத்தக வெளியீடு பற்றி.. பரிவு இலக்கிய இதழில்

எழுத்து எனக்கு ஒரு முகம் கொடுத்தது. அதை என் புத்தக வெளியீடு அங்கீகரித்தது. அதனால் பத்ரிக்கைகள் , தொலைக்காட்சிகள், வானொலிகள் ,  சில சந்தர்ப்பங்களில் என்னிடமும் (  முக நூல் சர்ச்சைகள் பற்றியும், சாதனைப் பெண்கள் பற்றியும், சர்வதேச சினிமா பற்றியும் )  கருத்துக் கணிப்புக் கேட்டன.

ஒரு குடும்பத்தலைவியாய் இருந்து மத்திம வயதில் திரும்ப எழுத வந்து எனக்கான ஒரு இடத்தை வலைத்தளத்தில் பெற்றதே என்னுடைய கடின மற்றும் தொடர்ந்த உழைப்பின் பலனாகும். லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த நான் பேட்டி கண்ட போராடி ஜெயித்த பெண்களின் கதைகளைத் தொகுத்து  சாதனை அரசிகள் புத்தகமாக வெளியிட்டேன். என் அப்பா அம்மா பெயரில் பதிப்பித்தேன். மிக எளிதாக ஆரம்பித்த அந்த முயற்சி பலத்த அயற்சிகளுக்குப் பின் கடைசியில் மிக எளிதாக நிறைவேறியது.

என் புத்தகத்தில் இடம் பெற்ற அனைவரையும் ஒருங்கிணைத்துப் புத்தகத்தை அவர்கள் கையாலேயே வெளியிட எண்ணினேன். ஒருவரைச் சேர்த்தால் இன்னொருவரைக் கோர்க்க முடியவில்லை. நவம்பரில் முடிவான  புத்தகம் ஜனவரியில்தான் வெளிவந்தது. வெளியிட எண்ணிய நாளில் எல்லாம் ஏதோ ஒரு இடையூறு இருந்தது.



என்னுடைய கட்டுரைகளை வெளியிட்ட கிரிஜா ராகவன் மேடம் கலந்து கொள்ள இயலவில்லை. மேலும் ஃபாத்திமா பாபு அவர்களின் டேட்டைக் கேட்டுவிட்டு நானே மறந்தேன். அதைப் பெருந்தன்மையோடு அவரும் மன்னித்தார். புத்தகத்தில் இடம் பெற்ற பல பெண்கள் வெளியூரில் இருந்தார்கள். அன்று சென்னையில் இருந்த சொற்ப பேரை வைத்து வெளியீடு பாரதி மணி அவர்கள் தலைமையில் நடந்தது.  புத்தகத் திருவிழா என்பதால் பெருங்கூட்டம் வந்தது.

கல்யாணம் செய்து பார், வீட்டைக் கட்டிப் பார் என்பார்கள். அதேபோல புத்தகம் போட்டுப் பார் எனவும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் முதல் புத்தக வெளியீடு அன்று முதல் குழந்தை பெற்றது போல பரவசம். என்னுடைய இரண்டாவது புத்தகத்தை ஈரோடைச் சேர்ந்த திரு தாமோதர் சந்துரு அண்ணன் தன்னுடைய மகன் திருமணத்தில் ( குழந்தைக் கவிதைகள் ) வெளியிட்டார்கள். எந்தச் செலவும் இல்லாமல் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது அந்த வெளியீடு.

லீனா மணிமேகலை, பழநி பாரதி, பரமேசுவரி திருநாவுக்கரசு, விஜயலெட்சுமி, ஈழவாணி , பாரதி மணி, டெல்லி கணேஷ் மற்றும் அநேக பத்ரிக்கையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் பாராட்டுக்களை முகநூலில் என் கவிதைகள் பெற்றன என்பதே பெருமையாய் இருக்கிறது.

அடுத்து அடுத்தும் புத்தகங்கள் போடவும், பெண்களுக்குப் பயனானதைப் பகிரவும் இந்த ஊக்கங்கள் துணை கோலுகின்றன.  “எண்ணியது முடிதல் வேண்டும். நல்லதே எண்ண வேண்டும் “ என்பதே குறிக்கோளாய் செயல்படுகிறேன். பாரதி மணி ” இது போராடி ஜெயித்த பெண்களின் கதை. ஆனால் இதே போல் போராடி ஜெயித்த தேனம்மை தனக்கான இலக்கியத்தை  இன்னும் எழுதவில்லை . அதையும் தேனம்மை  எழுதி என்  கையாலேயே வெளியிட வேண்டும் ”என்று கூறினார். ”முயற்சி திருவினை ஆக்கும். “ பார்க்கலாம்.

டிஸ்கி :- தோழி ஈழவாணி ஜெயாதீபன் பரிவு இலக்கிய இதழுக்காக  என் முதல் புத்தக வெளியீடு பற்றிய அனுபவத்தை எழுதி அனுப்புமாறு கூறினார். மேலும் இரு கவிதைகளும் கேட்டிருந்தார்.

அவர் கேட்டதற்கிணங்க அனுப்பினேன். ஒரு வருடம் ஆகிவிட்டது . இன்னும் அந்தப் பரிவு இலக்கிய நூலின்  பத்தாம் இதழ் என் கைக்குக் கிடைக்கவேயில்லை. ஈழவாணியிடம் பலமுறை தொடர்பு கொண்டும் அந்தப் பத்ரிக்கை அலுவலகத்தில் கேட்டும், மேலும் டிஸ்கவரி புத்தக நிலைய வேடியப்பன் மூலம் விற்பனைக்கு வந்திருந்த பரிவு இதழ்களில் தேடச் சொல்லியும். அவர் மூலமாக அலுவலகத்தில் முயற்சித்தும் கிடைக்கவில்லை. எனவே அதில் வெளிவந்த புகைப்படம் இல்லாமலேயே இந்தக் கட்டுரையை வெளியிட வேண்டியதாயிற்று.

”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.

By post aganazhigai@gmail.com


என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...