நான் ஸ்கிரிப்ட் எழுதிய முதல் விளம்பரம்.. ஸ்விஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் வெளிநாட்டு தமிழ் தொலைக்காட்சிகளி்லும் வருவதாக ஸ்க்ரிப்ட் இயக்குனர் நண்பர் அருண்குமார் தெரிவித்தார்..:)
சிகரத்துக்கு ஒரு ஸ்கிர்ப்ட் எழுதி அனுப்புங்கன்னு சொன்னார்.
நான் சில தீம்களை முதலில் எழுதி அனுப்பினேன். அவைதான் இவை. இவற்றில் சிலதான் செலக்ட் ஆச்சு. அது அடுத்த இடுகையில்.
அம்மாவும் அப்பாவும் தங்கள் மகளின் திருமணத்தை ப்ளான் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போ அப்பா சொல்றார்”. நீ கஷ்டப்படவே வேண்டாம். நம்ம வேலை எல்லாத்தையும் சிகரம் பார்த்துக்கும். நோ வொர்ரி., நோ ஹர்ரி.. ஏன்னா சிகரம் இப்போ நம்ம கையில.”
கம்யூட்டரில் ஆன்லைன் டிக்கட் புக்கிங். ”சீக்கிரம் லாகின் செய்ங்க.
”என மனைவி கூற கணவர் ”வெயிட் வெயிட் நோ டென்ஷன். நம்ம ஃபேமிலி
மெம்பர்ஸ் எல்லாருக்கும் யூஎஸ் டு சென்னைக்கு சிகரம் மூலமா டிக்கட் புக்
செய்யலாம். எல்லாம் ஈஸி சிகரம் ஆன்லைன் டிக்கட் புக்கிங்கால. சிகரம் இப்போ நம்ம கையில.” ( ஆன்லைன் டிக்கெட் புக்கிங். ஃபார் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் கார்டு)
ஒரு ஜ்வெல்லரி ஷாப். நகைகள் எடுக்கும் போது பணம் அதிகமா தேவைப்படுது.
கோபுரமான டிசைன் டாலரோடு ஒரு பெரிய செயினைக் கையில் எடுத்து பெண் தயக்கமா
அப்பாவை பார்க்கிறா. அப்போ அப்பா பெண்ணிடம்., ”ஆன் லைனில் சிகரம் மணி
ட்ரான்ஸ்ஃபர் இருக்கு . தேவைப்பட்டதை எடுத்துக்கம்மா. செலவுக்குக்
கவலையில்லை ஏன்னா சிகரம் இப்போ நம்ம கையில. ( சிகரம் ஆன்லைன் செக்கிங் அக்கவுண்ட்)
திருமணமான் ஜோடி ஹனி்மூன் ட்ரிப்பில். உயர்ந்த பனிச்சிகரங்களுக்கு
நடுவில் .. ஏன் ஹனி சர்ப்ரைசா ஸ்விஸ் கூட்டி வந்தீங்க. என் தேவதையை
உலகத்துலேயே உயரமான இ்டத்துல வைச்சுப் பார்க்கணும்னு கனவு. அது நனவாச்சு. ஏன்னா சிகரம் இப்போ நம்ம கையில ( சிகரம் ஆன்லைன் டிக்கட் புக்கிங் .,சிகரம் ஹாலிடே ட்ரிப் அரேஞ்ச்மெண்ட் )
கணவருக்கு சர்ப்ரைசாக உடை வாங்குகிறாள் ஒரு இளம்பெண். அதை வீட்டில்
அணிகிறார் அவர். ”அட... பெர்ஃபெக்ட் ஃபிட்டா இருக்கே . எப்பிடி வாங்கினே
..” “ கூடவே இருக்கும்போது எது ஃபிட்டாகும்னு எனக்குத் தெரியாதா.. ” என
நெற்றியில் முத்தமிட்டு. என் சிகரம் என் கையில் என கணவரையும் க்ரெடிட் கார்டையும் காண்பிக்கிறாள்.
கார் ஓட்டுகிறார் ஒரு ஆண் . ” புதுக்கார் நல்லா இருக்கு.. ஆனா
இன்சூரன்ஸ் ” என்கிறார் அவர் நண்பர். ” எல்லாம் ஹேய் இப்போ எல்லாம்
சீஃப்தான். அட்வைஸ் கொடுத்தது சிகரம் ஆச்சே.. சிகரம் இப்போ என் கையில..என்கிறார். ( ஃப்ரீ கார் இன்சூரன்ஸ் கோட்)
கடற்கரையில் மூவர். ”அம்மா வீடு கட்ட வா., அப்பா வீடு கட்ட வா.
”மூவரும் கட்டுகிறார்கள். அலையடிக்காத இடத்தில் மூவரும் சிகரம் அமைத்து
கூவுகிறார்கள் நாங்க ஜாலியா ஹாலிடே ட்ரிப்பை என் ஜாய் செய்றோம். ஏன்னா சிகரம் இப்போ எங்க கையில. ( ஹோட்டல் புக்கிங்., ரெஸார்ட் புக்கிங்.கார்டு டிஸ்ப்ளே)
மகள் படிக்கப் போகிறாள். டாக்டரேட் வாங்குகிறாள் சிகரம் ஆன்லைன் எஜுகேஷன் மூலமா எல்லாமே ஈஸிதான். ஏன்னா சிகரம் இப்போ நம்ம கையில என் அப்பா., அம்மா ., மகள் மூவரும் தம்ஸ் அப் சொல்கிறார்கள். ( ஆன்லைன் எஜுகேஷன் கார்ட்)
டிஸ்கி :- வாழ்க்கை ஒரு சக்கரம் அப்பிடிம்பாங்கள்ல. அது போல ஒரு பெண்ணின் திருமணம், அது சம்பந்தமான நிகழ்வுகள், ஹனிமூன், குழந்தைப் பேறு, கொண்டாட்டம், கல்வி சம்பந்தமா இதை அமைத்தேன். திரும்ப அந்தப் பெண்ணின் மகள் திருமண வயதில் அப்பிடின்னு வரமாதிரி.
வாழ்த்துகள் தேனம்மை, மேலும் பல சிகரங்களைத் தொட:)!
பதிலளிநீக்குஅருமையான தீம்...வாழ்த்துக்கள் தேனம்மை.
பதிலளிநீக்குநன்றி ராமலெக்ஷ்மி
பதிலளிநீக்குநன்றி கீதமஞ்சரி