சனி, 28 ஜூன், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், இசை, அரசியல், ஆன்மீகம் பற்றி எல் கே.


வலையுலகம் வந்த புதிதில் கார்த்திக்கின் பாகீரதி, கவிச்சோலை படித்ததுப் பின்னூட்டமிட்டதுண்டு. அவரும் என் இடுகைகளில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக ஃபைன், சூப்பர் என்று மினி கமெண்ட்ஸ் போடுவார். :)

2010 லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்காகக் கேட்டபோது ஒரு கவிதை அனுப்பி வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரமானது. அதன் பின் இவள் புதியவளில் திருமண ஸ்பெஷலுக்காகக் கேட்டபோது புகைப்படத்துடன் அனுப்பி வைத்தார்.ஜி ப்ளஸ்ஸில் அரசியல், ஆன்மீகம் , இசை பற்றிப் பகிர்வார். எதைப் பகிர்ந்தாலும் விவர நுணுக்கமும் சில சமயம் அவர் பார்த்த அது சம்பந்தப்பட்ட இணைப்புகளையும் பகிர்வார். எனவே அவரிடம் அது பற்றி   சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி கேட்டேன். இப்போதும் கூட கேட்டவுடன் உடனே பதில் வந்துவிட்டது.

///அரசியல் ஆன்மீகம் இசை இது மூன்றையும் அடிக்கடி பகிர்கிறீர்கள். எந்த விஷயத்தையும் ஆணிவேரிலிருந்து தெரிந்து கொண்டு தெரிவிக்க ஆசைப்படும் உங்களுக்கு இந்த மூன்றில் எதில் பிடிப்பு அதிகம். அதுபத்தி சொல்லுங்க. .///


இசைல ஆணி வேர் இல்லை ஒரு சின்ன இலைக் கூட எனக்குத் தெரியாது. கர்நாடக இசையில் எம் எஸ் குரல் பிடிக்கும், மனதை வருடும் சாந்தப்படுத்தும் குரல் அதனால் அதைக் கேட்பேன். சினிமா இசையில் , பாலுவின் குரல்.மனுஷனை கிறங்கடிக்கும் குரல் அது. மன நிம்மதிக்கு மட்டுமே இசை. அதுல வேற ஒன்னும் எனக்கு தெரியாதுங்கோ

அரசியல்

சின்ன வயசுல இருந்தே அரசியல் பேசி வளர்ந்தேன். (கூடவே பொறந்தது படையப்பா வசனம் மாதிரி படிக்கணும் ). அது எங்க போகும்... அப்பா கூட பேசியது காலேஜ் டைம்ல அக்கா கணவர் அவருடைய நண்பர்கள் கூட பேசிக் கத்துகிட்டது. அனைவரும் அரசியல் பற்றி கொஞ்சமாவது அறிந்திருக்க வேண்டும். மிக அவசியமான ஒன்று. எந்த ஒருக் கட்சியிலும் சேர வேண்டாம். பொதுவான சில விஷயங்கள் தெரிந்திருத்தல் அவசியம். அது ஒரு குடிமகனின் கடமையும் கூட

ஆன்மிகம்

இதுல நான் கத்துக்குட்டி. பொதுவா சில விஷயங்கள் எனக்கு தெரிஞ்சதை நான் பகிர்வேன். மற்றவை சில நண்பர்கள் பகிர்வதை நான் ஷேர் செய்யறேன். ஆன்மிகம் ஒரு பெரியக் கடல். நான் அந்தக் கரையோரமா நின்னுக்கிட்டிருக்கேன் அவ்ளோதான். இன்னும் சொல்லப் போனா நான் பகிர்வது பொதுவான சில விஷயம்னுதான் சொல்லணும். அதை ஆன்மீகம்னு சொல்றது தப்பு.

ஆக மொத்தத்தில் ஆங்கிலத்தில் சொல்வது போல "ஜேக் ஆப் ஆல் ட்ரேட்ஸ்,மாஸ்டர் ஆப் நன் " அதுக்கு என்னை உதாரணமா சொல்லலாம்.

டிஸ்கி:- படிச்சதை அதில் சிறந்ததைப் பகிர்வதும் ஒரு கலைதான். ஏற்கனவே நல்ல எழுத்தாளராகவும், வலைப்பதிவராகவும் நல்ல வாசிப்பாளராகவும் இருப்பதால உங்க பகிர்வுகள் அருமையா இருக்கு. இதுக்கு ஏன் "ஜேக் ஆப் ஆல் ட்ரேட்ஸ்,மாஸ்டர் ஆப் நன் " ந்னு சொல்றீங்க. ஷேரிங்கும் ஒரு கலையே .. நீங்க ஷேர் பண்றதுனால நாங்க விசிட் பண்ணாத பேஜசையும் தெரிஞ்சுக்க முடியுது. அதுக்கு நன்றி எல்கே. :) ( இவர்தான் அதீதத்தின் வாமனனோன்னு சந்தேகம் கூட எனக்கு உண்டு.. :) :) :) அதுல கிரிக்கெட் பத்தி எழுதுறாருன்னு கூட சந்தேகப்படுறேன். :) :) :)

11 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான பேட்டி.

திரு. எல்.கே. அவர்களை நீண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் இங்கு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

அவரின் ஒவ்வொரு பதில்களிலும் யதார்த்தமும், உண்மையும், நேர்மையும், தன்னடக்கமும் இருந்ததை எண்ணி மகிழ்ந்தேன்.

திரு. எல். கே. அவர்கள் மிகவும் நல்லதொரு மனிதர். ;)

பேட்டிக்கும் பதிவுக்கும் பகிர்வுக்கும் தங்கள் இருவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.

அன்புடன் கோபு

அப்பாதுரை சொன்னது…

ஜேக் நல்லாத் தான் சொல்லியிருக்காரு.

ஸ்ரீராம். சொன்னது…

எல் கே கிரிக்கெட் பற்றி (அதீதத்தில்தானோ?) எழுதிக் கொண்டிருந்தார் என்று தெரியும். அது சம்பந்தமாக அவர் வலைப்பக்கம் பாகீரதியிலும் கூட லிங்க் தந்திருப்பார். படித்த நினைவு இருக்கிறது. எல் கே தன துணைவியார் உதவியுடன் சமையல் பக்கமும் வைத்திருந்தார். (வைத்திருக்கிறார்)

நல்ல நண்பர். நல்ல மனிதர்.

kg gouthaman சொன்னது…

ரொம்ப சுருக்கமா சொல்லிட்டார், எல் கே.

சே. குமார் சொன்னது…

அண்ணன் எல்.கே அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர்....
தற்போது வலையில் அவ்வளவாக எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்...
இன்றைய சாட்டர்டே ஜாலி கார்னரை அவர் அலங்கரித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் அக்கா.

வல்லிசிம்ஹன் சொன்னது…

முதலில் நல்ல மனிதர். நல்ல எழுத்துக்கும் உடமையாளர்..அழகான குடும்பத்தலைவர்.திவ்யா குட்டியின் அப்பா. அவரை இங்கே பார்த்ததில் மிக ம்கிழ்ச்சி தேன்.

Jeevalingam Kasirajalingam சொன்னது…

சிறந்த நேர்காணல்

எல் கே சொன்னது…

வைகோ சார் , நன்றி...இப்பவும் எழுதறேன்... http://bhageerathi.in . மாதம் இரண்டு பதிவுகள் வந்தால் அதிகம்....

எல் கே சொன்னது…

அப்பாதுரை :)

@குமார் , நன்றி நண்பரே..என்னுடைய தளம் http://bhageerathi.in அதில் எழுதுகிறேன்...

@வல்லிமா நன்றி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோபால் சார்

நன்றி அப்பாத்துரை சார்

நன்றி ஸ்ரீராம்

நன்றி கௌதமன் சார்

நன்றி குமார் சகோ

நன்றி வல்லிம்மா

நன்றி ஜீவலிங்கம் சார்

நன்றி எல் கே

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...