எனது நூல்கள்.

வெள்ளி, 13 ஜூன், 2014

தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

151. மாயா மச்சேந்திரா.
மைக்கேல் ஜாக்சன் பாடல் பாணியில் ( REMEMBER THE TIME AND THRILLER ) எடுக்கப்பட்ட பாடல் காட்சி. மனீஷாவும் கமலும் அற்புதமாக நடனமாடுவார்கள்.

152. நிலவைக் கொண்டுவா.
வாலி படத்தில் அஜீத்தும் சிம்ரனும் ஆடிப் பாடும் காட்சி. தாளமிடவும் பாடவும் வைக்கும் பாடல். அஜீத் இளவரசனாகவும் சிம்ரன் இளவரசியாகவும் நம் கண்ணுக்குத் தெரிவது நிஜ அற்புதம்.

153. எனக்கொரு சினேகிதி சினேகிதி.
ப்ரியமானவளே படத்தில் விஜயும் சிம்ரனும் நடித்த காட்சி.சிம்ரன் எப்போதும் ஸ்லிம்ரந்தான். அனுராதா பட்வாலின் குரல் இனிமை. விஜயின் சிறு கண்கள் பேசுவதும் அழகு.154. நீ இல்லை என்றால் வாழ்க்கையில்
தீனாவில் தல அஜீத் பாடும் பாடல். லைலா ஜோடி. லைலாவின் பாலே நடனமும் இருவரும் ஒரு சீனில் பின்னோக்கிப் போவதும் அழகாக இருக்கும்.

155. காற்று வெளியிடைக் கண்ணம்மா.
 கப்பலோட்டிய தமிழனில் இடம் பெற்ற பாரதியார் பாடல். ஜெமினியும் சாவித்ரியும் பாடுவார்கள். கறுப்பு வெள்ளை என்றாலும் காட்சியழகு. பாடல் வரிகளும். 

156. மௌனமே பார்வையால்.
ஆணிடம் பெண் சரணாகதி அடைவதான காட்சி ஆரம்பத்தோடு தொடங்கும் இந்தப் பாடல். முத்துராமனும் விஜயகுமாரியும் நடித்த படம். பாடல் முழுதும் ஒரே மயக்கமும் கிறக்கமுமாக இருக்கும் காட்சியமைப்பு :) முத்துச் சுடரே என் பக்கம் இருந்தால் வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும். முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில் பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும். என்ற வரிகள் பிடிக்கும்.

157. முதல் கனவே.
மிக அருமையான டான்சர் ப்ரஷாந்த். இவரது நடனத்துக்காகவே சில படம் பார்த்ததுண்டு. சிம்ரனுடன் காதல் கடிதமும் (ஜோடியும்), மும்தாஜுடன் மச்சினியே என்ற பாடலும் சலாம் குலாமும் பிடிக்கும்.  இந்தப் பாடல் விஷுவல் ட்ரீட்.

158. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்..
போலீஸ்காரன் மகள் படத்தில் எனக்குப் பிடித்த பாலாஜியும் , புஷ்பலதாவும் பாடி ஆடும் காட்சி. துரத்திக் துரத்திக் காதலிப்பது என்பார்களே அதுதான் இது. :) பி பி ஸ்ரீனிவாஸ் குரல் வேறு ரொம்பப் பிடிக்கும். கேட்க வேண்டுமா..சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு .. என்பதற்குப் பின் முதல் ஸ்டான்சாவைத் திரும்ப புஷ்பலதாவுடன் நடந்துகொண்டே பாடுவார். செம அழகா இருக்கும். திரும்பப்  பாருங்க.

159. மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
கந்தன் கருணையில் கே ஆர் விஜயாம்மாவும் சிவகுமாரும் பாடும் பாடல். மிக அழகும் பொலிவுமாக இருக்கும்.பாடல் வரிகள் தெளிவாக இருக்கும். செட்டிங்ஸ் கலர்ஃபுல்லாக இருக்கும். ஏபி நாகராஜன் படம்.  மகர யாழ் முன் இருக்க பின்னணியில் யானைச் சிற்பங்கள் இருக்க விஜயா அழகான நாணத்துடன்.. தோழீ.. தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்.. என்று  பாடுவார்.

160. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
பஞ்சவர்ணக்கிளியில் எல் விஜயலக்ஷ்மி ஆட கே ஆர் விஜயாம்மா பாடும் பாடல். மிக வேகமாக அசைவுகளோடு அற்புதமாக நடனமாடுவார் விஜயலெக்ஷ்மி. இவருடன் ஆடலுடன் பாடலைக் கேட்டுப் பாடலில் நடனமாடிய எம்ஜியார் இவருடைய வேகத்துக்கு நடனமாட முடியாது என்று சொல்வாராம். அந்தப் பாடலில் மிகுந்த  போட்டி போட்டு  இவருக்கு இணையாக ஆடியிருப்பார்.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.


7 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல செலெக்ஷன். தீனாவில் இன்னொரு பாடல், 'சொல்லாமல் தொட்டுச் செல்லும்'.. எட்ட முடியாத உயரத்திலும், உடனே கீழ் ஸ்தாயியிலும் ஹரிஹரன் பாடும் பாடல் நன்றாக இருக்கும்!

மௌனமே பார்வையால் பாடலின் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகள் எனக்கும் பிடிக்கும்.

//விஜயா அழகான நாணத்துடன்.// :))))))))

//பஞ்சவர்ணக்கிளியில் எல் விஜயலக்ஷ்மி ஆட கே ஆர் விஜயாம்மா பாடும் பாடல்//

கே ஆர் விஜயா மயக்கத்திலிருந்து தயவு செய்து வெளிவரவும்! அது பி. சுசீலாம்மா பாடிய பாடல்! :)))))))))))))))))

Jeevalingam Kasirajalingam சொன்னது…


சிறந்த பகிர்வு!

visit: http://ypvn.0hna.com/

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மாயா மச்சேந்திரா.... நிலவைக் கொண்டுவா... நீ இல்லை என்றால்... - ஆட்டத்துடன் ரசிக்கலாம்...

முதல் கனவே... எனக்கொரு சினேகிதி சினேகிதி... - இனிமை...

காற்று வெளியிடைக் கண்ணம்மா. மௌனமே பார்வையால். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்... - என்றும் ரசிக்கலாம்...

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்... - சிறப்பான பாடல்...

Thenammai Lakshmanan சொன்னது…

எனக்கும் அந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும் ஸ்ரீராம். அதில் அஜீத் மரக்கிளையைப் பிடித்துத் தொங்கிச் சரிந்தபடி பாடும் இடம் பிடிக்கும். :) முடியாது கே ஆர் விஜயா மயக்கத்திலிருந்து வெளிவரவே முடியாது. அது மட்டும் கேக்காதீங்க.. ஹாஹாஹா. :) ப்லாகில் திருத்தல.. உங்கள் கமெண்டில் பார்த்துக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜீவலிங்கம் சார்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...