எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 ஜூன், 2014

சாதனை அரசிகள் பற்றி திரு நல்ல தம்பி அவர்கள்.மதிப்பிற்குரிய தேனம்மை அவர்களுக்கு,
வணக்கம்..

நாம் தினம் வீதிகளில் பார்க்கும் முகங்கள்தான், அந்த முகங்களுக்குள்
எத்தனை வலிகள் , பயங்கள்., குறைகள்.அத்தனை தடங்கல்களையும் தாண்டி - ரம்யாதேவி என்ற ஃபீனிக்ஸ், மோகன சோமசுந்தரம் புற்றுநோய்ப்போராளி (A cancer warrior) , தலித் சமூதாய பெண்களுக்காக, அநாதரவாய் குரல் எழுப்பிய மணிமேகலை ரோட்டில் கிடப்பவருக்கு வாழ்வளிக்க தங்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியை ஒதுக்கிய சாருமதி, தமிழரசி, வெங்கடேசன், ஒன்பது பட்டம் நினைக்கவே பெருமிதம் கொள்ளச்செய்யும் ஆஸ்வின் ஸ்டாலின்,
தன் குறைகளை பொருட்படுத்தாமல் பிறரின் நிறைவுக்கு உழைத்த லூர்துராணி, இருளர் இன விளக்கான வசந்தி, விளையாட்டு வீராங்கனை திரிஷ்காமினி , தன் தேகத்தையே தானம் செய்த அனுராதா, திறமைகளை அணையவிடாமல் ஒளிரவிட்ட லெஷ்மி என் ராவ், இதயத்தில் ஓட்டைகளை தன் மனமாற்றத்தால் அடைத்துவிட்ட உமா ஹெப்சிபா, ஆண் ஆதிக்கமே ஓங்கியிருக்கும் ஒரு இயக்கத்ததில் ஆட்டோ சங்கத் தலைவியான சாந்தி, தனித்துவாழும் பெண் அவதூறுகளை துச்சமாக நினைத்து வாழ்வில் முன்னேறிய ஸ்ரீலேகா, திறமை எங்கேயும் மதிக்கப்படும் என்று நீரூபித்த நந்தினி, புகழ்பெற இளமைதான் சரியான தருணம் என்கிற பத்மாவதி, அனுபவம் கைகொடுக்கும் என்று முன்னேறிய மகேஸ்வரி, வயதை தடையாய் நினைக்காமல் ஜொலிக்கும் முத்து சபாரத்தினம், .இன்னும் நமக்கு தெரியாமல் எத்தனையோ......

இனி ரோட்டில் பார்க்கும் எந்த பெண்ணையும் என்னால் சாதாரணமாக நினைக்க முடியாது. இந்த புத்தகத்தைப் படிக்கும் எல்லாப் பெண்களும் சாதனை படைக்க முயல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இத்தனை சாதனை அரசிகளைத் தேடி அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நீங்களும் ஒரு சாதனைப் பெண்தான்
வாழ்த்துக்கள்-                                    17.02.2014
அன்புடன்                                        பெங்களூர்
நல்லதம்பி
  
பெருமதிப்பிற்குரிய என் முகநூல் நண்பர் திரு காளிமுத்து நல்லதம்பி அவர்களின் விமர்சனம் இது. இவர் கன்னடக் கவிஞர் திரு லங்கேஷின் கவிதைகளை ( நீலு காவ்ய ) தமிழில் மொழிபெயர்த்தவர். சிறந்த புகைப்படக்காரர். சிறந்த கவிஞரும் கூட. என் தமிழ்க் கவிதைகள் மூன்றைக் கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

” சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் “ என்று பாரதியார் சொன்னது போல நம் மொழிக் கவிதைகளைப் பிறமொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு நன்றி நல்லதம்பி சார்.  


”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.

By post aganazhigai@gmail.com

என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...