நிலா என்றதும் சித்திரா பௌர்ணமியும் நிலாசோறும் கதைகளும் மலரும் நினைவுகளாக வருவதுண்டு. இருளும் நிலவும் அதன் பால் ஒளியும் இன்னும் கவிஞர்களுக்கு மயக்கம்தரும் பாடற்பொருட்கள்தாம். சித்ரா பௌர்ணமிக்காக பகலில் பூஜை செய்வார்கள். இங்கே இரவில் நிலவுக்குப் பூஜை செய்திருக்கிறார்கள்.
நமது பண்பாடு, கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக நிலாச்சோறு கொண் டாடும் நிகழ்வுகள், இன்று கிராமங்களிலும் மறந்து போன நிலையில், ஈரோட்டில் தாமோதர் அண்ணன் அவர்கள் வீட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அவர்கள் பேத்தி ஆராதனா ( என் ”ங்கா”வின் நாயகி ) என்ற நிலவு படைத்த நிலாச்சோறு நிகழ்வைப் பற்றி முகநூலில் படித்தேன். காரைக்குடிப் பக்கம் சித்திரா பௌர்ணமி விழா உண்டு. இந்த நிகழ்வில் தைமாதப் பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. வித்யாசமாக இருந்ததால் இதை என் வலைத்தளத்தில் பகிர்கிறேன்.
தாமோதர் சந்துரு அண்ணன் முகநூலில் பகிர்ந்ததை இங்கே பகிர்கிறேன். இது போன வருடம் நிகழ்ந்தது.
///மூன்று நாட்களாக நடைபெற்ற நிலாச் சோறு படைத்தல் நிகழ்ச்சி சனி இரவு நிறைவடைந்தது.. நிலாவுக்கு ஒரு தேர் செய்து படையல் இட்டு ஆராதனா செய்த பூஜையுடன் ஆரம்பித்தது.. பெண்கள் அனைவரும் கும்மியடித்து மிகிழ்ந்தனர்.. அனைவரும் இரவு உணவை பகிர்ந்து உண்டனர்.. பிறகு குழந்தைகளுடன் தேரை எடுத்துக் கொண்டு 'உக்கே' 'உக்கே' கத்திக் கொண்டு அருகில் இருந்த விநாயகர் கோவிலில் தேரை வைத்துவிட்டு வந்தோம்.. ///
இது இந்த வருடம் நிகழ்ந்தது. ///
எங்கள் வீதியில் இருக்கும் குட்டீஸ்களுக்காக ஆரதனாவுடன் கடந்தமூன்று நாட்களாக நிலாச் சோறு படைத்தோம்..அவரவர் வீட்டில் இருந்து சமைத்த உணவுகளை நிலாவுக்குப் படைத்து விட்டு குழந்தைகள் அனைவரும் பகிர்ந்து உண்டார்கள்..பெண்கள் அனைவரும் பாட்டுப் பாடி கும்மி அடித்து மகிழ்தார்கள்..இறுதியில் தேரை குழந்தைகள் சுமந்து வர உக்கே உக்கே என்று கத்திக் கொண்டு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு அவரவர் வீட்டுக்கு அவரக் காய்ச் சோத்துக்கு போனோம்..குழந்தைகளுடன் பெரியவர்களும் குழந்தையானோம்.///
தமிழகத்தின் பல ஊர்களிலும் வருடந்தோறும் தை மாதம் பவுர்ணமிக்கு முன்பு 9 நாட்கள் இந்த பூஜை நடத்துகின்றனர். தலா ஒரு வீடு வீதம் 9 வீடுகளில் அனைவரும் சேர்ந்து இதை செய்கின்றனர். தங்கள் வாரிசுகள் நோயின்றி செல்வசெழிப்புடன் வாழவும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இந்த பூஜை செய்கின்றனர்.
இரவு நிலா பூஜைக்காக வீட்டு முற்றத்தில் பிள்ளையார் சிலை வைத்து வாழை மர தோரணங்கள் கட்டி, நிலா சோறு படைத்து பூஜை செய்கின்றனர். பெண்கள், சிறுமிகள் கும்மி அடித்து வலம்வருவார்கள். குழந்தைகளும், பெண்களும் மாலை நேரத்தில் அங்குள்ள ஒரு வீட்டில் ஒன்று கூடி திருத்தேர் வடிவத்தில் வண்ண வண்ண கோலமிட்டு, திருத்தேர் வடிவம் அமைத்து பல வகையான சித்ரான்னம், வாழைப் பழம் தேங்காய், பூ,ஊதுபத்தி சூடம் வைத்து நெய்விளக்கேற்றிப் படைத்து கும்மிப்பாட்டு பாடி கும்மியடித்து நிலவையும் தேரில் இருக்கும் பிள்ளையாரையும் தீப தூபம் காட்டிக் கும்பிடுவார்கள். அதே இடத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அவரவர் கொண்டு வந்த உணவைப் படைத்ததும் பகிர்ந்து சாப்பிட்டனர். இது பெண்கள் மட்டும் கொண்டாடும் நிகழ்வாகும்.
நிலாச்சோறு கொண்டாடுவது பற்றி தமிழ் இலக்கிய ஆய்வாளர் சோமசுந்தரபாரதி கூறுகையில்., சித்திரை மாதம் மானாமதுரை வைகை ஆற்றில் இருகரைகளிலும் வெள்ளை மணல் நிறைந்து கடற்கரையை போன்று இருந்ததால் மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் சித்ரா பவுர்ணமி நிலாச்சோறு நிகழ்ச்சி வைகை ஆற்றில் துவங்கியது. நிலவொளியில் வீசும் தென்றலோடு ருசியான உணவுகளும் ஒருவித பரவசத்தை ஏற்படுத்துவதால் மனம் ஆனந்தமடைகிறது. இந்நாளில் நண்பர்களும், உறவினர்களும் கடந்த கால நினைவுகளை கூறி ஆற்றில் உண்டு களிப்புடன் இருப்பது பலநூறு ஆண்டுகளாக தொடர்வது ஆச்சரியமளிக்ககூடிய வகையில் உள்ளது என்றார்.
இன்று வைகாசிப் பௌர்ணமி. இந்த உக்கே உக்கே வித்யாசமாக இருக்கு. மேலும் சின்னப்பிள்ளையில் எதுக்கென்று தெரியாமல் பிள்ளைகளோடு பிள்ளைகளாகச் சொன்னதுண்டு “ அவரவர் வீட்டிலே அவரைக்காயும் சோறும் நம்ம நம்ம வீட்டிலே நார்த்தங்காயும் சோறும்” என்று . அது தாமோதர் அண்ணன் சொல்லியிருப்பது போல நிலாச்சோறுக்குக் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆகா... இதை விட சந்தோசம் எது...? வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு!
பதிலளிநீக்குvisit: http://ypvn.0hna.com/
நன்றி தனபாலன் சகோ
பதிலளிநீக்குநன்றி ஜீவலிங்கம் சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!