141. மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு.
பாரதியும் எம்ஜியாரும் பாடும் பாடல் காட்சி. எம்ஜியார் படங்களில் பாடல் காட்சிகள் அதுவும் டூயட்டுகள் பிரம்மாண்டமான செட்டுகளோடு படமாக்கப்பட்டிருக்கும். படம் அன்னமிட்ட கை.
142. திரும்பி வா. அழகே திரும்பி வா
நாடோடி படத்தில் எம்ஜியாரும் சரோஜா தேவியும் பாடும் பாடல். திரும்பி வா ஒளியே திரும்பி வா விரும்பி வா என்னை விரும்பி வா என்ற வரிகள் அழகு. இளையவர்களைப் போல குறும்பு ஆட்டம் போடுவதில் வல்லவர் எம்ஜியார்.
143. மன்மத மாசம்.
லாரன்ஸின் ஃபாஸ்ட் டான்ஸ். விந்தியாவும் நன்கு நடனமாடி இருப்பார். பார்த்தாலே பரவசம் படம். மாதவன் தன் மனைவி சிம்ரனுக்கு இன்னொரு திருமணத்துக்கு மாப்பிளையைப் பார்க்க வந்து திருப்தியில்லாமல் உட்கார்ந்து இருப்பார்.
144. ஓடம் கடல் ஓடும்.
சிவகுமார் லெக்ஷ்மி பாடும் கடற்கரைப் பாடல். ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்.. நேப்பியர் பாலம் அருகே ஒரு காட்சி வரும். இசை மிக அருமையாக இருக்கும்.
145. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.
எஸ் பி பியும் ஜானகியும் பாடும் பாடல் படத்தில் யார் எனத் தெரியவில்லை. மிக அருமையான லிரிக்ஸ். இசையும் அற்புதம்.
146. யமுனா நதி இங்கே.
சிவாஜி & ரமாப் பிரபா என நினைக்கிறேன். எஸ்பிபி & ஜானகியின் குரலில் அருமையான பாடல்.
147. அருகில் வந்தாள்.
பார் மகளே பார் என நினைக்கிறேன். ஜெமினி பாடும் பாடல். பிரிவையும் தனிமையைப் பிழியும் பாடல்.
148. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
நான் பிறக்குமுன்னே நீ பிறந்ததேன் உந்தன் கையில் என்னை ஏந்தத்தான். என்ற வரிகள் அழகு. அமர்க்களம் படத்தில் அஜீத்தும் ஷாலினியும். முதன் முதல் அவர்கள் நடித்து ரியல் லைஃப் ஜோடியும் ஆக்கிய படம்.
149.மலரே மலரே உல்லாசம்.
ரஜினியும் மாதவியும் நடித்த காட்சி. படம் உன் கண்ணில் நீர் வழிந்தால். அப்போது மாதவி எங்கள் ஃபேவரைட் நடிகை. கண்கள் அவ்ளோ அழகா இருக்கும். உன்னைத்தான் சந்தித்தாள் உள்ளம் ஓர் வெள்ளைத்தாள் இதயம் எழுதும் கவிதை நீ.. என முணுமுணுக்க வைத்த பாடல்.
150. யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
ஷோபனா பாடும் பாடல். தளபதி படம். ரஜனியை நினைத்துப் பாடுவார். ஆயர் பாடியில் கண்ணனில்லையோ ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ.. பாவம் ராதா..

143-வது மட்டும் இதுவரை கேட்டதில்லை. மற்றவை சூப்பர். பகிர்வுக்கு நன்றி தேனம்மை.
பதிலளிநீக்கு143, 147 தவிர எல்லாப் பாடல்களுமே எனக்கும் பிடித்தமானவை தான். அதிலும் வாத்யார் படப்பாடல்கள் ஸ்பெஷல். பாடல் 145ஐக் கேட்டு ரசிப்பதே சிறந்தது. அதில் நடித்திருந்தவர்கள் க்யூட்டான சிறுவயது ஜெயசுதாவும், அங்கிள் போலக் காட்சியளிக்கும் நம்ம சிவாஜி ஸாரும். மனதை திடப்படுத்திக் கொண்டு இந்த லிங்கைப் பாருங்கக்கா... ஹி... ஹி... ஹி...
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?v=w-l5vYDIh8U
எங்கெங்கோ செல்லும் பாடல் காட்சியில் சிவாஜி ஜெயசுதா. யமுனா நதி இங்கே காட்சியில் சிவாஜியோடு வருவது ரமாப்ரபா இல்லை. உஷா நந்தினி என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி கீதா மதிவண்ணன்.இப்ப கேட்டுட்டீங்களா. :)
பதிலளிநீக்குபால கணேஷ் அத சில நாட்கள் முன்புதான் ஸ்ரீராம் பகிர்ந்திருந்தார். பார்த்தேன். ஆனா இந்த போஸ்ட் ஷெட்யூல்டு போஸ்டா போட்டு பல காலம் ஆச்சு . எனவே திருத்த மறந்துட்டேன். :)
நன்றி ஸ்ரீராம். நீங்கள் முகநூலில் போட்டிருந்த லிங்கில் பார்த்தேன். இந்தப் பாடல்கள் அனைத்துமே நான் முகநூலில் தேன் பாடல்கள் என்ற தலைப்பில் நோட்ஸாகப் பகிர்ந்தது. அதையே இங்கு வலைத்தளத்தில் பத்துப் பத்துப் பாடல்களாகப் பகிர்ந்து வருகிறேன். அதில் இருக்கும் இரு விஷயங்களைக் கோர்த்து ஒரு தலைப்பு வைத்து. :)
வெறும் ப்லாகை மட்டும் ஓபன் செய்து கமெண்ட் போடுவதால் இடுகையில் தவறைத் திருத்தவில்லை. :)