செவ்வாய், 2 மே, 2017

முனைவர் சிங்கை எம் எஸ் லெக்ஷ்மியின் பார்வையில் செட்டிநாட்டுப் பெண் படைப்பாளிகள்.

முனைவர் திருமதி எம் எஸ் லெக்ஷ்மி சிங்கையைச் சார்ந்த இலக்கியவாதி. அவர் நிறைய கருத்தரங்களில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

9.4.2017 அன்று நடைபெற்ற கம்பர் விழாவின் மூன்றாம் நாளன்று உலகத் தமிழ் நான்காம் கருத்தரங்கில் அவர் இரு ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தார்.


அதில் ஒன்று முருகு என்னும் படைப்பாளி. இன்னொன்று செட்டிநாட்டுப் பெண் எழுத்தாளர்கள் பற்றியது. அதில் சிங்கை எழுத்தாளர்கள்  மீனா முத்து, சௌந்திர நாயகி,  அமெரிக்க எழுத்தாளர் சீதா லெக்ஷ்மி ஆகியோரோடு இன்பாவையும் என்னையும் குறிப்பிட்டு அதிகம் எழுதி இருந்தார்.

அக்கட்டுரையை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

அன்பும் நன்றியும் லெக்ஷ்மி மேம்.
எனது ஐந்து நூல்களையும் ஆய்வு செய்து அருமையாகக் கட்டுரை வடித்திருந்தார் முனைவர் அவர்கள்.

பெண்கள் எழுத்துலகில் இன்னும் அதிகம் பங்களிப்புச் செய்யவேண்டும் எனவும் சாதிக்க வேண்டும் எனவும் அவர் கூறியது உத்வேகம் தருவதாக இருந்தது.


எதிர்பாரா இன்ப அதிர்ச்சி கொடுத்த அவர்களுக்கு நன்றி.

எனது நூல்களையும் என்னையும்  தமிழ் கூறும் நல்லுலகில்  ஆவணப்படுத்தியமைக்கு இன்னும் அதிக நன்றியும் மகிழ்ச்சியும் அன்பும் லெக்ஷ்மி மேம் . வாழ்க வளமுடன். 

5 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விஷயம்... தொடரட்டும்.

Jayanthi Jaya சொன்னது…

வாழ்த்துக்கள் தேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

THanks Venkat Sago

Thanks da Jaya :)

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துகள்!!சகோ/ தேனு

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...