சனி, 22 மே, 2010

விபத்தும்.,விழித்தும்., தனித்தும்,,,,,,

விழித்திருக்கிறேன்.. தவித்திருக்கிறேன்.
தனித்திருக்கிறேன்.. பசித்திருக்கிறேன்..
அன்பிற்குரியவர்களின் நேரத்துக்காய்..
ரிச்சி ரிச்சைப் போல என்னைப்
பல்லக்கில் சுமக்கிறது பணம்...
ஒற்றையனாய்..
மிக மூத்த அக்கா கடல் கடந்து..
சடை பிடித்து விளையாட ஒரு தங்கை..
காக்காய்க்கடி கடித்துண்ண ஒரு தம்பி..
பள்ளிப் பாதுகாவலனாய் ஒரு அண்ணன்...
எதுவுமில்லை..

இருப்பது எல்லாம் எனக்கே..
எதுவும் பிடிக்காமல் திகட்டி..
நிலாச்சோறும்., நிலாக்கதைகளும் அற்று..
கட்டிடங்களுக்குள்..
மனைவி அன்புத்திருமகள்..,
மகள் அழகுத்திருமகள்...
யாரும் எதையும் முழுமையாக
விட்டுவர இயலாமல்....
தாயும் தந்தையும் இல்லா பாலை..
வாகனமே என் அவசரத்தால்
என்னை வாகனமாக்கி..
நேரம் என்னை நையப் புடைக்கிறது..
மருந்தெழுதும் நானே மருந்துண்டு..
படுக்கைகளைப் பார்வையிட்ட
நானே படுக்கைவாசியாய் ...
மாதக் கணக்கான தழும்புகளில்
வீட்டில் நானே தழும்பாகி..
என் கண்ணில் உப்புத்திரவம்
துடைக்க வா அம்மா..
எனக்காக உன்
நேரத்தையும் மடியையும் எடுத்து..

டிஸ்கி:- இன்று காலை விமான விபத்து செய்தி
வருத்தம் தர.,, நான்கு மாதங்களுக்கு முன் ஒரு
நண்பருக்காக எழுதியதை அளிக்கிறேன்..
பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்..
முன்னெச்சரிக்கையுடனும்...முன்னேற்பாட்டுடனும்..

டிஸ்கி:- இந்த வாரமும் அடுத்த வாரமும்
வலைச்சரத்தில் எழுதுகிறேன் மக்கா...
படித்துப் பாருங்கள் ..நீங்க எல்லாருமே
இருக்கீங்க..:))

48 கருத்துகள் :

LK சொன்னது…

:(

பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

மனத்தை பிசைகிறது

ஈரோடு கதிர் சொன்னது…

((:

Chitra சொன்னது…

May their souls rest in peace.

ஜெய்லானி சொன்னது…

:-(((((((((

அக்பர் சொன்னது…

அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. மனம் ரொம்ப வேதனை பட்டது.

நாய்க்குட்டி மனசு சொன்னது…

இருப்பது எல்லாம் எனக்கே//
இந்த வரிகளில் தான் எத்தனை சோகம்.
அழகா எழுதுறீங்க தேனம்மை

soundar சொன்னது…

என்னக்கு பிடித்தவரி

விழித்திருக்கிறேன்.. தவித்திருக்கிறேன்.
தனித்திருக்கிறேன்.. பசித்திருக்கிறேன்..
அன்பிற்குரியவர்களின் நேரத்துக்காய்.

பிரேமா மகள் சொன்னது…

என்ன தவறு செய்தார்கள் அவர்கள்?

கமலேஷ் சொன்னது…

அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. மனம் ரொம்ப வேதனை பட்டது.

செ.சரவணக்குமார் சொன்னது…

அதிர்ச்சியாகவும், மிக வேதனையாகவும் இருக்கிறது அக்கா.

Vishnu... சொன்னது…

மனம் வேதனை அடைகிறது ..
உள்ளத்தின் வேதனை கவிதையாய் ..
எனது அஞ்சலிகளும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல்களும் ..

விஷ்ணு ..

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

விமான விபத்தை கேட்டதும் மனம் ரொம்பவே வருத்தமாக உள்ளது. இறந்தவர்கள் குடும்பங்களின் துயரத்தை நினைக்கும்போது எண்ணிடலங்கா துயரம் வாட்டுது. ஆறுதல் சொல்ல வழியேதும் தெரியாமல் மிகவும் வருத்ததுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

ஸ்ரீராம். சொன்னது…

பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்..
முன்னெச்சரிக்கையுடனும்...முன்னேற்பாட்டுடனும்.//

அது நம் கையில் இல்லையே...என்ன செய்வது...

thenammailakshmanan சொன்னது…

ஆம் LK

ஆம் ஃபாத்திமா வருத்தம் தரும் நிகழ்வு

thenammailakshmanan சொன்னது…

கதிர் ., சித்ரா., என்ன செய்வது..?

thenammailakshmanan சொன்னது…

ஆம் ஜெய்லானி., அக்பர்..

thenammailakshmanan சொன்னது…

கேட்பாரற்றுக் கிடைக்கும் எதுவும் திகட்டும் தானே ராஜ்

thenammailakshmanan சொன்னது…

உண்மை சௌந்தர்.. நமக்குப் பிடித்தவர்களுடன் நாம் இருக்க விரும்புவோம் அல்லவா..அவர்களுக்கு நம்முடன் இருக்க நேரமில்லாவிட்டால்

thenammailakshmanan சொன்னது…

அவர்கள் தவறு செய்யவில்லை ப்ரேமா மகள்.. முன்னெச்சரிக்கையாய் இயந்திரங்கள் சரி பார்க்கப் பட்டு இருக்க வேண்டும்.. பைலட்டின் கவனக் குறைவு இல்லாமல் இருக்க வேண்டும்..பருவ மாற்றங்களும் ஒரு காரணம்..என்ன செய்ய முடியும்.. உள்ளே மாட்டிக் கொண்டவர்களால்.. நான் சென்ற பயணங்கள் எல்லாம் ஞாபகம்வந்து கண்களில் நீர் வழிகிறது

thenammailakshmanan சொன்னது…

ஆம் கமலேஷ்

ஆம் சரவணா

thenammailakshmanan சொன்னது…

பங்கெடுத்தமைக்கு நன்றீ விஷ்ணு

thenammailakshmanan சொன்னது…

ஆமாம் ஸ்டார்ஜன்.. பயணங்கள் முடிந்து இறங்க வேண்டியவர்கள் பயணத்திலேயே பயணப் பட்டு விட்டார்கள்..மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் ஸ்டார்ஜன்

thenammailakshmanan சொன்னது…

ஆம் ஸ்ரீராம்.. நம்மை அழைத்துச் செல்பவர்கள்., மற்றும் பருவமாற்றமும்.. இயந்திரக் கோளாறுகளும் விலை மதிப்பில்லா வாழ்வை தீர்மானிக்கின்றன..

thenammailakshmanan சொன்னது…

ஆம் ஸ்ரீராம்.. நம்மை அழைத்துச் செல்பவர்கள்., மற்றும் பருவமாற்றமும்.. இயந்திரக் கோளாறுகளும் விலை மதிப்பில்லா வாழ்வை தீர்மானிக்கின்றன..

தமிழ் உதயம் சொன்னது…

இம்மாதத்தில் இரண்டாவது கோர விபத்து. மனித தவறா. இயற்கை சதியா. அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி.

NIZAMUDEEN சொன்னது…

பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்..
முன்னெச்சரிக்கையுடனும்...முன்னேற்பாட்டுடனும்..

தங்களின் அன்பான, அறிவுரைக்கு நன்றி, அக்கா!

seemangani சொன்னது…

அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வு...... ரொம்ப வேதனை பட்டது மனம்.

ஜெய்லானி சொன்னது…

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

thenammailakshmanan சொன்னது…

நிஜமான அஞ்சலி ரமேஷ்

thenammailakshmanan சொன்னது…

நிஜமான அஞ்சலி ரமேஷ்

thenammailakshmanan சொன்னது…

பாதுகாப்பு விதிமுறைகளையும் கடை பிடிப்போம்.. இரு சக்கர வாகனங்களில் பயணிப்போரும்.. நன்றி நிஜாம்

thenammailakshmanan சொன்னது…

உண்மை கனி..மீண்டு வர இயலவில்லை

thenammailakshmanan சொன்னது…

உண்மை கனி..மீண்டு வர இயலவில்லை

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஜெய்லானி

thenammailakshmanan சொன்னது…

வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

விஜய் சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்

விஜய்

செந்தில்குமார் சொன்னது…

உண்மைதான்
பாதுகாப்பு அவசியம் அக்கா.....

கனக்கிரது இருதயம்
இந்த விபத்து செய்தியை கேட்டதும்

அவர்களின்
ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்

சத்ரியன் சொன்னது…

இது போன்ற நிகழ்வினை தான் “விதியின் விளையாட்டு” என்பதோ?

ஜெஸ்வந்தி சொன்னது…

மிக வேதனையாக இருக்கிறது.

அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி.

asiya omar சொன்னது…

நினைத்து பார்க்கவே கொடுமையான சம்பவம் , கவிதையை படிக்கும் பொழுது இந்த நிகழ்வோடு ஒத்து போகிறது.ஆழ்ந்த அனுதபங்கள்.

U F O சொன்னது…

இந்த துயரமான சூழ்நிலையில் இதுவரை யாருமே பேசாத ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி அவசியம் சொல்ல வேண்டி உள்ள கட்டாயத்தில் உள்ளேன்.

ஏர் இந்தியா பற்றி அனைவருக்குமே தெரியும். இதுவரை அது அரியான நேரத்தில் கிளம்பியதும், வந்தடைந்ததும் மிக மிக அரிது. சரியான நேரத்தில் கிளம்பினாலும் சரியான நேரத்தில் சேர்வது மிக அரிது. பலமுறை "ஒரு நாள் தாமதமெல்லாம்" அதற்கு சர்வசாதாரணம். திடீரென்று ரூட் மாத்தி விடுவது, திடீர் ரத்து இதுவும் அடிக்கடி நடப்பதுதான். ஆறு மாதங்களுக்கு முன்னால் தமாமில் முப்பத்து எட்டு பேர் போர்டிங் பாஸ் வாங்கியவர்களுக்கு சென்னை விமாத்தில் விமானத்தில் சீட் இல்லை!!! காரணம் : வந்தது சின்ன விமானம். அவர்களை.. ஹும்.. மறுநாள் ஏற்றி விட்டார்கள்!!

பல முறை பல நாட்கள் விமானிகள் வேலை நிறுத்தம்... விமானத்தில் சில சமயம் எ/சி வேலை செய்யாமல் போய்விடும்... சரியான உபசரிப்பு கிடையாது... வயதான ஏர் ஹோஸ்டஸ் என்று எவ்வளவோ பேருக்கு ஏர் இந்தியாவின் மீது வெறுப்பு இருகிறது. இவை எல்லா வற்றையும் சகித்துக்கொள்ளலாம்.... சொல்லப்போனால் இவைஎல்லாமும் ஒன்றுமே இல்லை...

ஆனால்...

ஆனால்...

ஒன்றே ஒன்றை மட்டும் மன்னிக்கவே முடியாது... அதை சகித்துக்கொள்ளவே முடியாது... கை மீறி போய் விட்டது... யாராலுமே தடுக்க முடியாதா? அது விமானிகள் நினைத்தால் மட்டுமே முடியும்...

அது என்ன?

அது...

விமானிகள் குடித்து விட்டு போதையில் விமானத்தை ஓட்டுவது... (???!!!)
கொடுமை...
இதை யாரிடம் போய் சொல்லி அழுவது..?

இப்போது சொல்லுங்கள்:

"""அவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானிகள், 'இது சிறிய டேபிள் டாப் ரன்வே என்று தெரிந்தும்- பிரேக் கண்ரோல் கிடைக்காது என்று நன்கு அறிந்தும்' பாதி ரன்வேயில் இறக்குவார்களா?"""

நம்பவில்லையா?

இந்த சுட்டியில் சென்று படியுங்கள்: http://thatstamil.oneindia.in/news/2009/10/20/india-drunk-pilot-delays-ai-fight-to-new-york.html
முக்கியமாய் செய்தியின் கடைசி வரி... தயவு செய்து சிரிக்காதீர்கள்... என் நெஞ்சு வெடித்து விடும்...

Muniappan Pakkangal சொன்னது…

Nice recall Thenammai.The feedbacks also are Informative.

padma சொன்னது…

ரொம்பவே உணர்ந்து எழுதி இருக்கீங்க தேனம்மை

thenammailakshmanan சொன்னது…

ஆமாம் விஜய்., செந்தில்

thenammailakshmanan சொன்னது…

என் செய்ய சத்ரியன் .,ஜெஸி

thenammailakshmanan சொன்னது…

ஆம் உமர்..

வருந்தத்தக்க செய்தி U F O

thenammailakshmanan சொன்னது…

நன்றி முனியப்பன் சார்., பத்மா

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...