எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 9 மே, 2010

என் அம்மா

ஒவ்வொரு முறையும்
அகண்ட பிரபஞ்சத்தை
அவள் கண்களில் பார்க்கிறேன்...

விடுதியிலோ.,
மணமுடித்தோ,
வெளிநாட்டில் வேலையிலோ..

எங்கிருந்தாலும்
வருகிறாள் முடிந்துகொண்டு
குசேலனின் அவலாய் அன்பை...


வாசனை வீசும் சொற்களுக்குச்
சொந்தக்காரியல்ல...
அநேகமாகக் காரம்தான்...
வைய வைய வைரக்கல்...

சிறுவயதில் கோழியைப்போல்
அவ்வப்போது முடிபற்றி மிதிப்பாள்..
இப்போது வார்த்தைகளால்...

சிலசமயம் புரிந்து கொள்ளாமல்...
சில சமயம் கொடுந்தவறுக்காய்...

அவள் புன்னைகைத்தால்
காலடியில் முயலகனாய்...
என்றென்றும் மயங்கி...

அவளுக்குப் பிடிக்குமென
பலதும் செய்து அவளை
அவதியுற வைத்திருக்கிறேன்...
சமையலாகட்டும்...
செயல்களாகட்டும்...

உதிரத்தில் உருவாக்கி.,
உருவாய் செதுக்கியவளே.,
உன்னோடு கிடந்தே
உழன்று கிடப்பேன் என்று
அவ்வப்போது ஒதுக்கி வைத்து
ஒளிந்து கொள்கிறாயா...?

என் தேவையறிந்து
பசியறிந்து.,
ருசியறிந்து.,
வயசறிந்து.,
நிறைவேற்றியவளே...

செல்லமாக வேண்டாம்...
கோபமாக வேணும் உன் குரலை
சிந்திச்செல் அவ்வப்போது...

டிஸ்கி:- இந்த இடுகை அன்னையர் தினத்துக்காக
இளமை விகடனில் மே 8 அன்று வெளி வந்தது...

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem080510.asp

63 கருத்துகள்:

  1. சின்ன வயசில ரொம்ப திட்டு வாங்கியிருப்பீங்க போல

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. அம்மா என்றால் அன்பு.

    அன்னையர் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அன்னையர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை.

    விகடனிலேயே வாசித்தேன்.

    அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அன்னையர் தின வாழ்த்துக்கள்.. கவிதையின் வரிகள் அருமை....

    பதிலளிநீக்கு
  7. அன்னையர் தின வாழ்த்துக்கள். அருமையான கவிதை,விகடனில் வந்ததற்க்கு வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  8. விகடனிலேயே வாசித்தேன்.
    அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அம்மா பற்றிய உங்க கவிதை சூப்பர் அக்கா..
    //வாசனை வீசும் சொற்களுக்குச்
    சொந்தக்காரியல்ல...
    அநேகமாகக் காரம்தான்...
    வைய வைய வைரக்கல்...//

    ரொம்ப அழகு இந்த வரிகள்.. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..!! :)

    பதிலளிநீக்கு
  10. எங்கிருந்தாலும்
    வருகிறாள் முடிந்துகொண்டு
    குசேலனின் அவலாய் அன்பை...]]


    அருமை வரிகள்.


    அன்னையர்(க்கு) தின(மும்) வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. அருமையான கவிதை.
    அம்மா என்றால் அன்பு மட்டும்தானா, அதட்டலும் கூடத்தான்...

    'வைய வைய வைரக்கல்' ரொம்பவும் அழகு.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. //வைய வைய வைரக்கல்//

    இவள்தான் அம்மா.ஊறவின் உச்சம்.
    வாழ்த்துக்கள் உங்களுக்கும் கூட.

    பதிலளிநீக்கு
  13. \\எங்கிருந்தாலும்
    வருகிறாள் முடிந்துகொண்டு
    குசேலனின் அவலாய் அன்பை...]]\\


    அருமை வரிகள்.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. குசேலனின் அன்பாய் அவலை..என்ன ஒரு அருமையான வார்த்தைப்ரயோகம்!!

    பதிலளிநீக்கு
  15. மீன்தொட்டியின் சுவர்களில் படிந்திருக்கும் எச்சில் மாதிரி நீர் வற்றும் வரை தெரிவதில்லை நமக்கும்
    வளர வளர விளங்குகிறது தாய்மையும் பிறகான தவிப்பும்

    கவிதை நல்லா இருக்கு
    அந்த முயலகன் ல் நின்றிருந்தேன் கொஞ்ச நேரம்

    பதிலளிநீக்கு
  16. ஆஹா அம்மா , வை பற்றி அருமையான கவிதையே படைத்து விட்டீர்கள்.

    விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. தேனம்மை உங்கள் கவிதை அன்பென்றால் நேசரின் பின்னூட்டம் அழகு :)

    சில சமயம் எது கவிதை எது பின்னூட்டம் என எண்ண வைக்கிறது

    பதிலளிநீக்கு
  18. D.R.Ashok கூறியது...

    //தேனம்மை உங்கள் கவிதை அன்பென்றால் நேசரின் பின்னூட்டம் அழகு//

    இதேதான் தேனு மக்கா..வாழ்த்துகள்,அம்மாவிற்கும் உங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  19. நல்லாயிருக்கு தேனக்கா. விகடன்ல வந்ததுக்கு வாழ்த்துகள்.

    அந்த 'வைய வைய வைரக்கல்'லை மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. //என் தேவையறிந்து
    பசியறிந்து.,
    ருசியறிந்து.,
    வயசறிந்து.,
    நிறைவேற்றியவளே...

    செல்லமாக வேண்டாம்...
    கோபமாக வேணும் உன் குரலை
    சிந்திச்செல் அவ்வப்போது...//

    ஆஹா...அருமை தேனக்கா மிகவும் ரசித்தேன்...மூன்று முறை படித்து விட்டேன் விகடனுக்கு வாழ்த்துகள் அக்கா..

    பதிலளிநீக்கு
  21. அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. \\உதிரத்தில் உருவாக்கி.,
    உருவாய் செதுக்கியவளே.,
    உன்னோடு கிடந்தே
    உழன்று கிடப்பேன் \\

    அருமையிலும் அருமை வார்தைகள்
    :))

    பதிலளிநீக்கு
  23. நன்றி காஞ்சனா

    நன்றி தோழி

    பதிலளிநீக்கு
  24. நன்றி ராமலெக்ஷ்மி


    நன்றி அஹமது இர்ஷாத்

    பதிலளிநீக்கு
  25. நன்றி அருணா

    நன்றி ஆனந்தி

    பதிலளிநீக்கு
  26. நன்றி ஜமால்

    நன்றி சுந்தரா

    பதிலளிநீக்கு
  27. நன்றி ஹேமா

    நன்றி பாசமலர்

    பதிலளிநீக்கு
  28. நன்றி அம்பிகா

    நன்றி ஆரண்யநிவாஸ் ராம மூர்த்தி

    பதிலளிநீக்கு
  29. நன்றி நேசன்... எனக்கு முயலகனின் சிரிப்பு பிடிக்கும் ... தாய் முகம் நோக்கும் சேய்போல்..

    நன்றி தலைவன்

    பதிலளிநீக்கு
  30. உண்மை அஷோக்..:))

    நன்றி தென்றல்

    பதிலளிநீக்கு
  31. நன்றி கனி

    நன்றி ஜெய்லானி

    பதிலளிநீக்கு
  32. //அவள் புன்னைகைத்தால்
    காலடியில் முயலகனாய்...
    என்றென்றும் மயங்கி...//

    புதுமையான வரிகள் அக்கா...
    அழகான கவிதை

    பதிலளிநீக்கு
  33. நல்லாயிருக்கு அக்கா

    அன்னையர் தின வாழ்த்துக்கள்.....

    முயலகனாய்...

    வார்த்தை
    தேடலை
    சிந்திக்கிறேன்
    இங்கே .......

    பதிலளிநீக்கு
  34. HAPPY MOTHER'S DAY, akka!

    அருமையான வரிகளுடன், அழகாய் கவிதை தந்து இருக்கிறீர்கள், அக்கா. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  35. மிகவும் அருமையாக இருக்கின்றது...வாழ்த்துகள்...அனைவருக்கும் இனிய அன்னையர் தினவாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  36. அன்புள்ள அன்னையருக்கு வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  37. அன்னையர் தினத்திற்கு அழகு சேர்க்கும் அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  38. எத்தனைமுறை எழுதி தீர்த்தாலும்கூட அடங்காத அதே அன்பு = அம்மா

    நல்ல கவிதை....

    பதிலளிநீக்கு
  39. கவிதையை ரசித்தேன் அக்கா.

    அன்னையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  40. வரிவரியாய் மனதிலிருந்து வரும் சொற்கள்...உண்மையான இயல்பான அன்பு தெறிக்கும் அழகான....என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  41. அட்டகாசம் அக்கா!! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  42. ’என் அம்மா’ சொல்லும்போதே என்ன ஒரு சுவாதீனம்.. அதே அழகு கவிதை முழுவதும் நிரவிக் கிடக்கிறது..

    பதிலளிநீக்கு
  43. //எங்கிருந்தாலும்
    வருகிறாள் முடிந்துகொண்டு
    குசேலனின் அவலாய் அன்பை...//
    very beautiful lines...
    pengalidam... athuvum thirumanamaana pengalidam mattum annayar en athiga anbu seluththugiraargal??

    பதிலளிநீக்கு
  44. கவிதை மிக அருமை.வாழ்த்துக்கள்.அக்கா...

    பதிலளிநீக்கு
  45. நன்றீ பிரபு

    நன்றி செந்தில்

    பதிலளிநீக்கு
  46. நன்றி சித்ரா..

    நன்றி கீதா

    பதிலளிநீக்கு
  47. நன்றி புலிகேசி

    நன்றி தேவன் மாயம்

    பதிலளிநீக்கு
  48. நன்றி அக்பர்

    நன்றி கண்ணகி

    பதிலளிநீக்கு
  49. நன்றி சை கொ ப

    நன்றி கலகலப் பிரியா

    பதிலளிநீக்கு
  50. நன்றீ கருணாகரசு

    நன்றி ரிஷபன்

    பதிலளிநீக்கு
  51. நன்றி மயிலு

    நன்றி மலிக்கா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...