சிரித்துக் கொண்டே
தூங்கியமகனின்
புன்னகையில்
மின்னி மின்னி
ஒளிகின்றன
நட்சத்திரங்கள்..
**************************************
பாத்திர ஒலிதான்
பிடித்தமாயிருக்கிறது
பாடும் பொம்மைகளை விட
*********************************************
பள்ளி சென்ற பின்னும்
முந்தானையில்
வீசிக் கொண்டே இருக்கிறது
பற்றி விளையாடி வந்த
பிள்ளையின் வாசம்..
********************************************
கன்னமெல்லாம்
பிசுபிசுத்துக் கிடந்தது
சர்க்கரைப் பாகாய்
குழந்தையின்முத்தம்..
*******************************************
படிக்க நேரமில்லாத
புத்தகம் போல
சிதறிக் கிடந்தன
குழந்தையின்
பதில் கிடைக்காத கேள்விகள்
***********************************************
கற்றுக் கொண்டிருக்கிறேன்
கணினியை ..
கை பிடித்து அனா எழுத
கற்றுக் கொடுத்த மகனிடம்..
**********************************************
வாழ்க்கை நீச்சலை
தரையில் அடித்து
கற்றுக் கொள்கிறது
குழந்தை..
*******************************
பழக்கூழை ஊட்ட
போராடியபடி தாய்..
மணம் நிறைந்த
பழக் கொத்தாய் ..
மறுப்போடு குழந்தை..
***************************************
பூஜைக்கு வைத்த
நைவேத்தியங்கள்
சீண்டுவாரில்லாமல் காய்ந்து..
வளர்ந்து விட்ட குழந்தை
எதையும் உண்பதில்லை..
ஃபிட்னெஸ் வேண்டுதலில்..
***************************************
இனிப்பாய் ஒரு
உப்பு மூட்டை சுமந்தது
அம்மா யானை
****************************************
மாவுருண்டை., வெள்ளரிப்பழம்
கொழுக்கட்டை., பப்ளிமாஸ்..
உணவுப் பொருளெல்லாம்
உன் வடிவில்..
***************************************
டிஸ்கி..1 :- 6.4.2011 குமுதத்தில் என் குழந்தைக் கவிதைகள்.. அம்மா யானை என்ற தலைப்பில் முதல் முதலாய்.. நன்றி குமுதம்..:))
டிஸ்கி..2..:- புகைப்படத்தில் இருக்கும் செல்லக் குட்டி--வலைப்பதிவர் -- நண்பர்..தாமோதர் சந்துரு அவர்களின் பேத்தி ஆராதனா.. நன்றி சந்த்ரு..:))
வாழ்த்துகள் வாழ்த்துகள் தேனூ....
பதிலளிநீக்குஎப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மென்மேலும் வளர
பதிலளிநீக்கு//பாத்திர ஒலிதான்
பதிலளிநீக்குபிடித்தமாயிருக்கிறது
பாடும் பொம்மைகளை விட//
//பள்ளி சென்ற பின்னும்
முந்தானையில்
வீசிக் கொண்டே இருக்கிறது
பற்றி விளையாடி வந்த
பிள்ளையின் வாசம்//
//இனிப்பாய் ஒரு
உப்பு மூட்டை சுமந்தது
அம்மா யானை//
சூப்பர்!..வாழ்த்துகள் தேனு மக்கா!
ரொம்ப ரொம்ப அழகான குட்டிக் கவிதைகள்.வாழ்த்துகள் அக்கா !
பதிலளிநீக்குரொம்ப நாளுக்கப்புறம் உங்க பக்கம் திறந்தது, இந்த அழகான கவிதையை படிக்கத்தானோ!!!
பதிலளிநீக்குஜூப்பர்.
சிரித்துக் கொண்டே
பதிலளிநீக்குதூங்கியமகனின்
புன்னகையில்
மின்னி மின்னி
ஒளிகின்றன
நட்சத்திரங்கள்..//
வணக்கம் சகோதரம், இவற்றினைப் படிக்கும் போது, இவை குழந்தைக் கவிதைகளாகத் தெரியவில்லை. கை தேர்ந்த ஒரு கவிஞனின் கவி ஆளுமையினை வெளிப்படுத்தும் கருத்தாளம் மிக்க கவிதைகளாகத் தான் தெரிகின்றன;-)) சும்மா ஒரு ஜோக்கிற்கு சொன்னேன்.
மகனின் புன்னகைக்கு மின்னி மின்னி ஒளிரும் நட்சத்திரங்களை உவமித்திருக்கிறீர்கள். அருமையான சொல்லாடல்.
பாத்திர ஒலிதான்
பதிலளிநீக்குபிடித்தமாயிருக்கிறது
பாடும் பொம்மைகளை விட//
குழந்தைகள் குறும்புத்தனம் புரியும் போது பாத்திரங்களை உறுட்டி விளையாடுவதில் உங்களிற்கு ரசனையினைச் சொல்லியிருக்கிறீர்கள். செயற்கையான பொம்மை ஒலிகளை விட எப்போதும் மனம் இயற்கையான ஒலிகளையே நாடும் என்பதனை அழகுறப் புனைந்திருக்கிறீர்கள்.
பள்ளி சென்ற பின்னும்
பதிலளிநீக்குமுந்தானையில்
வீசிக் கொண்டே இருக்கிறது
பற்றி விளையாடி வந்த
பிள்ளையின் வாசம்..//
கன்றின் பசியைத் தாயறியும் என்பதனை மெய்பிக்கிறது இவ் வரிகள்.
கன்னமெல்லாம்
பதிலளிநீக்குபிசுபிசுத்துக் கிடந்தது
சர்க்கரைப் பாகாய்
குழந்தையின்முத்தம்..//
குழந்தையின் பஞ்சு போன்ற மென்மையான கன்னங்களால் கிடைக்கும் முத்தத்தினை அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்.
படிக்க நேரமில்லாத
பதிலளிநீக்குபுத்தகம் போல
சிதறிக் கிடந்தன
குழந்தையின்
பதில் கிடைக்காத கேள்விகள்//
மழலைகள் மனதில் உருவாகும் ஒரு சில கேள்விகளுக்குப் பதில் சொல்வது கடினம் என்பதனை இவ் வரிகள் உணர்த்துகின்றன.
கற்றுக் கொண்டிருக்கிறேன்
பதிலளிநீக்குகணனியை ..
கை பிடித்து அனா எழுத
கற்றுக் கொடுத்த மகனிடம்..//
இது இக் கால அம்மாக்களின் யதார்த்த வாழ்வினைப் பிரதிபலிக்கிறது.
பூஜைக்கு வைத்த
பதிலளிநீக்குநைவேத்தியங்கள்
சீண்டுவாரில்லாமல் காய்ந்து..
வளர்ந்து விட்ட குழந்தை
எதையும் உண்பதில்லை..
ஃபிட்னெஸ் வேண்டுதலில்..//
ஆளும் வளர அறிவும் வளரும் என்பதெல்லாம் மருவி, ஆளும் வளர உடற்பயிற்சிகளும், அழகுபடுத்தும் எண்ணங்களும் அதிகரிகும் என்பதனைச் சுட்டியிருக்கிறீர்கள்.
குழந்தையின் குழந்தை மன நிலைகளையுன், அவன் பெரியவன் ஆன பின்னர் எவ்வாறு பேசுவான் என்பதனையும் மழலை மொழி போல் மென்மையான வார்த்தைகளால் கவிதைகளாகப் படைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.
பதிலளிநீக்குஜமாய்ங்க , அக்கா.....! சூப்பர்!
பதிலளிநீக்குஒவ்வொரு கவிதைக்குள் இருந்த மழலையையும் தனித்தனியாகக் கொஞ்சியாயிற்று. அத்தனையும் கொள்ளை அழகு:)! பாத்திர ஒலி மிகப் பிடித்தது. வாழ்த்துக்கள் தேனம்மை!!!
பதிலளிநீக்கு>>கற்றுக் கொண்டிருக்கிறேன்
பதிலளிநீக்குகணனியை ..
கற்றுக் கொண்டிருக்கிறேன்
கணினியை ..
>>
பதிலளிநீக்குபடிக்க நேரமில்லாத
புத்தகம் போல
சிதறிக் கிடந்தன
குழந்தையின்
பதில் கிடைக்காத கேள்விகள்
பத்து முத்து அதில் பெஸ்ட் இது
>>இனிப்பாய் ஒரு
பதிலளிநீக்குஉப்பு மூட்டை சுமந்தது
அம்மா யானை
இதுவும் டாப் தான்
வாழ்த்துக்கள் மேடம்.. இது போல பத்திரிக்கைகளில் வரும் படைப்புகளை பதிவாக போடும்போது அதற்கென ஒரு இண்ட்ரோ கொடுங்க...
பதிலளிநீக்குஎப்போ அனுப்பியது.. எத்த்னை அனுப்பினேன்.. எத்தனை செலக்ட் ஆச்சு?எதெல்லாம் வரும்னு எதிர்பார்த்தேன்.. இப்படி ஒரு பேரா.. (paragh). அது எதுக்குன்னா ஏற்கனவே உங்க பிரசுரமான படைப்பை படிச்சவங்களுக்கு இது ஒரு எக்ஸ்ட்ரா இண்ட்ரஸ்ட்டா இருக்க...
பூங்கொத்து இரண்டு!ஒன்று
பதிலளிநீக்குகவிதைக்கும் இன்னொன்று குழந்தைக்கும்!!
அக்கா வாழ்த்துக்கள் சும்மா சொல்ல கூடாது அதனை கவிதைகளும் அருமை.
பதிலளிநீக்குஅழகுக் கவிதைகள்!
பதிலளிநீக்குசிறு குழந்தையை விட்டுவிட்டு பணிக்கு வந்த போதும் குழந்தையின் வாசம் அம்மாவின் ஆடையில்! ஞாபகங்கள் வருகிறதே...!
கற்றுக் கொண்டிருக்கிறேன்
பதிலளிநீக்குகணினியை ..
கை பிடித்து அனா எழுத
கற்றுக் கொடுத்த மகனிடம்..//
என்னையே நான் கண்ணாடியில் காண்பது மாதிரி கவிதை.பாராடுக்கள்.
சர்க்கரை முத்தமும் பிள்ளையின் வாசமுமாய் நல்லா இருக்கு :))
பதிலளிநீக்குசெம சூப்பர் அக்கா! :)
பதிலளிநீக்குசுத்திதான் போடணும், கவிதைகளுக்கும் ஆராதனாவுக்கும்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
பள்ளி சென்ற பின்னும்
பதிலளிநீக்குமுந்தானையில்
வீசிக் கொண்டே இருக்கிறது
பற்றி விளையாடி வந்த
பிள்ளையின் வாசம்..]]
unable to express my present feelings
நக்கல் இல்லாத நசரேயனைப் போல என் வாழ்த்துகள் தேனம்மை.
பதிலளிநீக்குபள்ளி சென்ற பின்னும்
பதிலளிநீக்குமுந்தானையில்
வீசிக் கொண்டே இருக்கிறது
பற்றி விளையாடி வந்த
பிள்ளையின் வாசம்..
super super Thenu.
வாழ்த்துகள் மேடம்..:-))
பதிலளிநீக்குபள்ளி சென்ற பின்னும்..குழந்தையின் வாசம் போகவில்லை என்ற வார்த்தைகள் மிக மிக அருமை.. எந்நேரமும் குழந்தையின் நினைவாகவே இருக்கும் தாயை பற்றி அழகாக எடுத்து கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனம்மை மேடம்..
குமுதம் தொடர்ந்து அனைத்து பத்திரிக்கைகளிலும் உங்களின் பதிவு அரங்கேறட்டும்...
வாழ்த்துகள் அக்கா
பதிலளிநீக்குஅம்மாவுக்கும் குழந்தைக்கும் உள்ள
பதிலளிநீக்குநெருக்கமான அன்பின் ஆழத்தை
மிக அழகாக சித்தரித்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்!.......
குட்டி கவிதைகள் அருமை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி மனோ.,
பதிலளிநீக்குநன்றி ரமேஷ்.,
நன்றி நசர்..(!)
நன்றி பாரா..
நன்றி ஹேமா
நன்றி ஷாந்தி.,
நன்றி நிரூபன்
நன்றி சித்து
நன்றி ராமலெக்ஷ்மி.,
நன்றி செந்தில்
நன்றி அருணா
நன்றி சசி.,
நன்றி மாதவி
நன்றி ராஜி
நன்றி முத்துலெட்சுமி
நன்றி பாலாஜி
நன்றி பாலாசி
நன்றி ஜமால்
நன்றி ஜோதிஜி
நன்றீ விஜி
நன்றி கார்த்தி்கைப்பாண்டியன்
நன்றி கோபி
நன்றி அக்பர்
நன்றீ அம்பாளடியாள்.
நன்றி ஜலீலா..:)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!