இவள் புதியவள் மற்றும் சூரியக் கதிர் மாதமிருமுறை வெளிவரும் பத்ரிக்கைகள்.. இதில் இவள் புதியவள் பெண்களுக்கான இதழ்.. மிக அழகும் நேர்த்தியுமாய் வரும் இந்த இதழ்களின் எடிட்டர் அன்பு சகோதரன் (விகடன் புகழ்) மை. பாரதிராஜா.. அவர் ஒரு பெண் வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்டார்.
டிஸ்கவரி புக் பேலசின் உரிமையாளர் அன்பு சகோதரன் வேடியப்பன் இடம் வழங்க பன்னிரெண்டு வலைப்பதிவர்களை அழைத்தேன்.. அதில் ஜெரோம் ஷர்மிளா பற்றி எல்லாம் எழுதி இருக்கும் அன்புத்தங்கை கீதா இளங்கோவன் ., அந்தமானைப் பாருங்கள் அழகு என பாடப் போய்விட., ருக்கு அம்மா ஆந்திராவில் ஒரு உறவினர் வீட்டில் இருக்க., உமா சக்தி கவிதைப் பட்டறையில் மும்முரமாய் செயல்படவேண்டி இருக்க., பறவைகளையும் பூக்களையும் தோட்டத்தில் வளர்க்கும் தங்கை மெர்லின் மரிய வித்யா உடல் நலமில்லாமல் இருக்க மிச்ச எட்டு பேரும் சந்திக்க முடிவானது.
டிஸ்கவரி புக் பேலசின் உரிமையாளர் அன்பு சகோதரன் வேடியப்பன் இடம் வழங்க பன்னிரெண்டு வலைப்பதிவர்களை அழைத்தேன்.. அதில் ஜெரோம் ஷர்மிளா பற்றி எல்லாம் எழுதி இருக்கும் அன்புத்தங்கை கீதா இளங்கோவன் ., அந்தமானைப் பாருங்கள் அழகு என பாடப் போய்விட., ருக்கு அம்மா ஆந்திராவில் ஒரு உறவினர் வீட்டில் இருக்க., உமா சக்தி கவிதைப் பட்டறையில் மும்முரமாய் செயல்படவேண்டி இருக்க., பறவைகளையும் பூக்களையும் தோட்டத்தில் வளர்க்கும் தங்கை மெர்லின் மரிய வித்யா உடல் நலமில்லாமல் இருக்க மிச்ச எட்டு பேரும் சந்திக்க முடிவானது.
கவிமணி தொகுக்க., முத்துக்குமார் படம் எடுத்தார் அனைவரையும். கலந்து கொண்ட வலைப்பதிவர்கள் ”அமிர்தவர்ஷிணி அம்மா” என்கிற வலைப்பதிவர் சாரதா., ”என் வானம்” என்ற வலைப்பதிவர் அமுதா., ”வசுமதியின் கருத்தோட்டம்” என்ற வலைப்பதிவர் வசுமதி வாசன்., ”தணல்” என்ற வலைப்பதிவர் ஈழவாணி., “நுனிப்புல்” என்ற வலைப்பதிவர் ராமச்சந்திரன் உஷா., ”காற்று வெளி “ என்ற வலைப்பதிவர் மதுமிதா..”எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்ற வலைப்பதிவர் ஸாதிகா., ”சும்மா” என்ற வலைப்பதிவர் நான்..(!) அனைவரும் கலந்து கொண்டோம்..
ஸாதிகா பெண்கள் பெருமை பற்றி., நம் கலாசாரம் பற்றி கூற., அமுதா வேலைக்கு செல்பவரின் கஷ்டங்கள் ., திருமணம் ஆனபின் போக விடாமல் தடுத்தல் பற்றி பகிர., நான் வலைப்பதிவு ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்துவதும் பின் பெண்கள் பிரச்சனைகளாக இன்னும் நிறம்., சாதி (பத்ரிக்கை பேட்டி எடுக்கச் செல்லுமிடங்களில் இதை சொல்வார்கள். ஆனால் மாகஸீனில் வந்துவிட வேண்டாம் என கேட்டுக் கொள்வார்கள் .) என்பவை முன்னேறத் தடுப்பாக இருப்பது பற்றியும் பகிர்ந்தோம். சாரதா தான் பார்ப்பவற்றை., தன்னைப் பாதித்தவற்றை வலைப்பதிவில் பகிர்வதாக கூறினார்.
வசுமதி புதிதாக குழந்தைகள் பற்றிய சைக்காலஜி., சினிமா விமர்சனம் பற்றி ஃபேஸ்புக்கிலும் ப்லாகிலும் எழுதுகிறார். ஆரம்பகால வலைப்பதிவர்கள் உஷாவும்., மதுமிதாவும். இதில் உஷா முதன் முதலில் புக் வெளியிட்ட பெண் வலைப்பதிவர். மதுமிதா 10 புத்தங்கங்கள் வெளியிட்டு இருப்பவர். ஈழவாணி ஐந்து புத்தங்கங்கள் வெளியிட்டு இருப்பவர். ஜர்னலிசம் படித்தவர். இவர் இப்போது பூவரசி என்ற இணைய இதழுக்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்..
3 மணி நேரம் போனதே தெரியவில்லை. நடுவில் பாரதி ராஜாவும் வந்து கலந்து கொண்டார் என் என்பு வேண்டுகோளுக்கிணங்க.. என் கூடவே வந்து பேட்டி முழுவதும் டிஸ்கவரி புக் பேலஸில் அமர்ந்து இருந்தார் என் கணவர். ( என் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் ஆண்..:)) .. நிறைய புத்தகங்களும் வாங்கி வந்துள்ளார்.. படிக்க வேண்டும்.. :))
நன்றி ..எங்களை அறிமுகப்படுத்திய இவள் புதியவளுக்கும்., மை. பாரதிராஜா., கவிமணி., முத்துக்குமாருக்கும்., டிஸ்கவர் புக் பேலஸின் உரிமையாளர் வேடியப்பனுக்கும்., :))வேடியப்பன் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்., கதைத்தொகுதியின் பெயர் முணுமுணுப்பு.. அதன் முன்னுரை கண்மணி குணசேகரன் வழங்கி இருக்கிறார். சீக்கிரம் விமர்சனம் எனது பார்வையில் வெளிவரும்..:))
மேலதிக விவரங்களுக்கு ஸாதிகாவின் இந்த வலைப்பூவை பார்க்கவும். :)
வாழ்த்துக்கள் அனைவருக்கும்..
பதிலளிநீக்குhttp://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_1913.html
வாழ்த்துகள் வாழ்த்துகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்....
பதிலளிநீக்குஆனா பதிவு ரொம்ப லேட்னு நினைக்கறேன்
பதிலளிநீக்கு>>3 மணி நேரம் போனதே தெரியவில்லை
பதிலளிநீக்குhaa haa ஹா ஹா நோ கமெண்ட்ஸ்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் மேடம்
பதிலளிநீக்குசந்தோஷமான விஷயம். வாழ்த்துக்கள்.அனைவர்க்கும்.
பதிலளிநீக்குஅக்கா, எல்லோரும் சந்திச்சு தூள் கிளப்பிட்டீங்க.... சூப்பர்!
பதிலளிநீக்குஆஹா நல்ல ஆரம்பம் . எல்லோரின் முகத்தையும் பார்த்ததில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு தேனம்மை. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவாத்துக்கள் சகோ..
பதிலளிநீக்குமதுமிதா என்றவர், அந்த கடற்கரையில் போராட்டம் நடத்தியவர் தானே.
வசு, மதுமிதா, நீங்கள் நண்பிகள் குழாம் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்
அருமையான சந்திப்பு, அருமையான உரையாடலும்,
பதிலளிநீக்குநான் தான் உஙக்ளை சந்திக்கமுடியாமல் போனது
அனைவரிக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குரொம்ப சந்தோஷமான விஷயம்..
பதிலளிநீக்குஅனைவரையும் பார்த்ததில் சந்தோஷம்.
பதிலளிநீக்குமகளிர் சக்தி வளர வாழ்த்துகள்.
உங்கள் பங்களிப்புக்கும்
மனமார்ந்த நன்றிகள்.
அனைவருக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅட! எங்களையெல்லாம் கூப்பிடமாட்டீங்களா???
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி. வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மேம்..ஆண் பதிவர்களும் இந்த மாதிரி ஒன்று நடத்தி, எங்கள் சிவனை(உங்களுக்கு சக்தி, எங்களுக்கு சிவன்!)அனைவருக்கும் புரிய வைப்போம்!!
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குTeam spirit is your great asset machi....It will help you in a long way in achieving your objectives....keep the good spirit up and all the best for your endeaviour!
பதிலளிநீக்குதேனக்கா உங்கள் பகிர்வை இப்ப தான் பார்க்கிறேன்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிஜய் தொலைக்காட்சியில் வந்த காணொளியை வலையேற்றுங்களேன்.
பதிலளிநீக்குநன்றி கருன்
பதிலளிநீக்குநன்றி மனோ
நன்றி செந்தில்
நன்றி அம்பிகா
நன்றி சித்து
நன்றி மஹி
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி பிரஷா
நன்றி சசி
நன்றி கணேஷ்
நன்றி ஜலீலா
நன்றி ஷாந்தி
நன்றி வல்லிசிஹன்
நன்றி உழவன்
நன்றி அருணா..( எங்கே இருக்கீங்க நீங்க..?)
நன்றி மாதவி
நன்றி மாதேவி
நன்றி மோகன்
நன்றி சரவணா
நன்றி ஆர் ஆர் ஆர்
நன்றி நேசன்
நன்றி இளங்கோ
நன்றி ஆசியா
நன்றி ஜோதிஜி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!என்றும் நம்முள் வலிமை பெருக்ட்டும்.!
பதிலளிநீக்கு