எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சொல்வனம் மின்னிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்வனம் மின்னிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஜனவரி, 2016

எட்டிப் பார்க்கும் வேற்றுக்கிரகவாசிகள்.:- ( சொல்வனம் )

எட்டிப் பார்க்கும் வேற்றுக்கிரகவாசிகள்:-
******************************************
மொட்டைமாடிகள்
நடப்பதற்கானவை.
அமரும்போது அமரும்
நிற்கும்போது நிற்கும்
நிழல்களை வரையும்
நிலாவை உடையவை.
முன்னெடுத்து விடப்பட்ட
முடியைப் போலச்
சிலும்பும் மரங்கள்
சிணுங்க நிற்பவை.

புதன், 16 டிசம்பர், 2015

ஸ்வயம்:- (சொல்வனத்தில்)



ஸ்வயம்:-

குளக்கரை
ஓ.
உன்னுள் ஏன்
இத்தனை மிதக்கும் குழப்பம்.
மேலோட்டத்தில்
அலைமோதும்
அழுக்குச் சில்லுகள்
எருமைகளின் கால்படாத
ஆழ்குளம்.

திங்கள், 14 செப்டம்பர், 2015

பரல்கள். சொல்வனம் பெண்கள் சிறப்பிதழ் - 2

பரல்கள்.

சுயமறுத்துச்
சலங்கைகள் சிதற
நடனமாடிச் செல்கிறது மழை.
மோகம் சுமந்த
மேகம் சுமந்து
அலைமோதுகிறது காற்று
இருப்பிடம் குழம்பி.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

துணை. - சொல்வனத்தில்.


துணை.:-


விஷ்க் என்று காதுப்பக்கம் சுத்திக்கொண்டிருந்தது ஒரு . காலையில் விழிப்பு வந்ததில் இருந்து இந்த ஒரு பண்டம் போல அவனை மொய்த்துக்கொண்டிருந்தது. விலகிக்கிடந்த போர்வையின்வழி காலில் அமர்ந்து கூசியது. காலை அசைத்தான்.

மெல்ல அசங்கியபடி  பறந்து அடுத்த காலில் அமர்ந்தது.

கீழ்வீட்டின்  நாயைப் பார்த்து வீட்டுக்காரர் சத்தம்போட்டுக்கொண்டிருந்தார். லோப்ல லேது என்று எத்தி கதவைச் சாத்திக்கொள்வார். எதற்கு வளர்ப்பு மிருகம். மனிதனுக்குள்ளே பல மிருகங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.  மற்றொரு மனிதனைப் பார்த்துக் கத்தினால் பதிலுக்கு குதறிவிடுவான், அதை நன்றியுள்ள நாய் செய்யாது என்பதாலா.


பாவம் அதன் வாயை வேறு அவ்வப்போது சிவப்பு ரிப்பன் கொண்டு கட்டிவிடுகிறார்கள். அது அவனைப்பார்த்தால் ஓடிவந்து குலவ வருகிறது . அவனுக்கும் ஃபாத்திமாவுக்கும் வளர்ப்புப்பிராணிகள் என்றால் அலர்ஜிபடி இறங்கிப்போகும்போது அது ஓடிவந்தால் அப்படியே மூச்சைப்பிடித்தது போல நின்று கொள்வார்கள் சாலமனும் ஃபாத்திமாவும்.


வீட்டுக்காரர் பையன் வந்துடர்னா மத் அங்கிள். குச் பீ நஹி கரேகாஎன்று சொல்லி காலிடுக்கில் அதன் சங்கிலியை மிதித்துப் பிடித்துக்கொள்வான்.

புதன், 8 ஜூலை, 2015

”இணைய”ற்ற தெப்பம். ( சொல்வனத்தில் )

”இணைய”ற்ற தெப்பம்..
******************************
 மந்திர உச்சாடனங்களுக்குள்
மிழற்றுகின்றன மாயக் கிளிகள்.
தாழி தப்பிய ஆலிலை வெண்ணைய்
பில்லையில் சுமந்தபடி பயணிக்கிறார் பெருமாள்.
சவ்வுமிட்டாயும் சீனிமிட்டாயும்
சிவப்பாய் சிதறிக்கிடக்கின்றன காடா விளக்கில்.
வாழையை வாளெடுத்து
வெட்டிச் செல்கிறாள் கரகமஹாராணி.

செவ்வாய், 12 மே, 2015

ஓலை. ( சொல்வனம் )



ஒரு பறவையை
தூதனுப்ப நினைக்கிறேன்.
தன் காலை உடைத்துக் கொள்கிறது.
தீனி தின்ற வயிற்றுப் புடைப்பைக் காட்டுகிறது.
அலகின் கூர்மை மழுங்கியதாகச் சொல்கிறது.
முன்பு சென்ற தடம் ஓர்மையில்இல்லையென்கிறது.
காற்றின் திசையில் ஏழுலோகத்துக்குள்
எந்த லோகம் என்று திரும்பத் திரும்ப விசாரிக்கிறது
கடலில் அலையும் பாய்மரம் போல
இறகை விரித்து விரித்துக் கோதி
விரிவு பத்தாதென்கிறது.

புதன், 15 ஏப்ரல், 2015

பூனைச் சொப்பனம். ( சொல்வனத்தில் )



எண்ணெய்ப்புகை காரம் இழுத்து
வெளியெறியும் மின் போக்கிவழி 
கரேலென்று உள்நுழைந்து
தொலைக்காட்சி அட்டைமேல்
சுருண்டு துயிலும் அது.
தடைபட்ட மின்சாரம் வேர்வையூற்ற
சமையலறை இருளில்
தாகமடக்க நீர்விழுங்கி
மல்லாந்திருக்கும் போது
பரணில் மின்னும் இரட்டை வைரம்

வியாழன், 9 ஏப்ரல், 2015

நினைவுகள்.:-

நினைவுகள்.:-
******************
வாலைச் சாமரமாக்கி
சுற்றி வரும்
ஈக்கு விசிறியபடி
எருமை இறங்கியது
நீருக்குள்..
முதுகு நனையாமல்
தெப்பமாய் நகர்ந்தது.
வைக்கோல் தேய்த்துத்
தண்ணியள்ளி அலசி
ஊற்றினான் மேய்ப்பன்.

வியாழன், 12 பிப்ரவரி, 2015

நிழல்கள் உலவும் தெரு:- ( சொல்வனத்தில் )



நிழல்கள் உலவும் தெரு:-

மரத்தின் கிளைகளிலிருந்து
நிலவுச்சுடர் தெறிக்கச் சிதறிவிழுந்தது
ஒரு வாதாங்கொட்டை.

வாலைமடித்துக் கூர்கண்கள் ஜொலிக்கக்
குப்பைத்தொட்டியினருகே
காத்திருந்தது ஒரு நாய்.
Related Posts Plugin for WordPress, Blogger...