எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

ட்ராகுலாவும் வாம்பயரும்

சிம்பன்ஸியாகவோ
சாத்தானாகவோ இருப்பது
உன் விருப்பம் ...
என்னை ஏன் பிறாண்டுகிறாய்..?
நானும் உன் போல்தான் ....!
இருந்தாலும்...???

நீ யாருடன் பேசுகிறாய் என
நான் கண்காணிப்பதில்லை...
நான் எதுபற்றி பேசினாலும்
கவலையுறுவதாய் பசப்புகிறாய்..


நான் கொதிக்காமல் கொதிக்க.,
புகையாமல் புகைய.,
வேகாமல் வேக.,

நீ உன் புறணியோடும்.,
புன்னகையோடும்.,
பாசாங்கோடும்.....

உன் புறக்கணிப்பும்
புறக் கணிப்பும்.,
என் கணிப்பில் திலகம் நீ...

அக்கறையா..? உனக்கா..?
இக்கரைக்கு அக்கரை...?
கறையிலாமல் இருக்கா..?

உன் புன்னகை உறிஞ்சிக்குடிக்கும்
வாம்பயர் நான்...
என் காயம் சுவைக்கும்
ட்ராகுலா நீ....

தூர் வார வேண்டும்...
தூர்ந்து போகுமுன்னே.,
நமக்கிடையே எல்லாமும்.............

55 கருத்துகள்:

 1. "வேம்பயரோட" உணர்வுகளின்
  வெளிப்பாடு நல்லா வந்திருக்கு.

  பதிலளிநீக்கு
 2. //என்னை ஏன் பிறாண்டுகிறாய்..?
  நானும் உன் போல்தான் ....!
  இருந்தாலும்...???//

  நம்ம விஸ்வரூபத்தை காண்பிக்க வேண்டியதுதான். :-))கவிதை அழகா இருக்கு.

  பதிலளிநீக்கு
 3. //புறக்கணிப்பும்.. புறக் கணிப்பும்.... //

  பின்னிட்டீங்க அக்கா....

  //கறையில்லாத கரை இருக்கா..... //

  அகராதியில் அருகருகே இருக்கும் வார்த்தைகளை வைத்து அதன் முரண்களோடு விளையாடி அசத்திட்டீங்க அக்கா....

  காலைக் காஃபி போன்ற கவிதை அக்கா... படிச்சிட்டு சுறுசுறுன்னு ஆகிட்டது மனது :)


  //புன்னகையை உறிஞ்சிக்குடிக்கும் வேம்பயர் நான்...

  காயத்தை ருசிக்கும் டிராகுலா நீ....

  தூர்ந்துபோகும் முன்னே தூர்வார வேண்டும்.... //

  அதிரடியா ஒரு பாட்டுக்கு ஒரு trendy பல்லவியாகத் தெரிகிறது..... டியூன் போடத் தெரியலையே எனக்கு!!

  ரசித்தேன் அக்கா :) :) :)

  பதிலளிநீக்கு
 4. தூர் வார வேண்டும்...
  தூர்ந்து போகுமுன்னே.,
  நமக்கிடையே எல்லாமு....


  your feelings have come out well

  பதிலளிநீக்கு
 5. //உன் புன்னகை உறிஞ்சிக்குடிக்கும்
  வேம்பயர் நான்...
  என் காயம் சுவைக்கும்
  ட்ராகுலா நீ....//

  ட்ராகுலாக்கள் மத்தியில் வேம்பயர்கள் படும்பாட்டை வேம்பயரின் உணர்வு நன்றாக வெளிப்படுத்துகிறது.

  அருமையான வார்த்தை பிரயோகம்...

  //உன் புறக்கணிப்பும்
  புறக் கணிப்பும்...//

  உங்கள் கவிதைகள் வாழ்க்கையை உணர்த்துகின்றன.

  வாழ்த்துக்கள் தேனம்மை.

  ஆமா, ரொம்ப நாளா நம்ம பக்கம் ஆளையே காணோம்.?

  பதிலளிநீக்கு
 6. //உன் புறக்கணிப்பும்
  புறக் கணிப்பும்.,
  என் கணிப்பில் திலகம் நீ...
  //

  அருமை :)

  பதிலளிநீக்கு
 7. உன் புறக்கணிப்பும்
  புறக் கணிப்பும்.,
  என் கணிப்பில் திலகம் நீ...//
  wonderful

  பதிலளிநீக்கு
 8. உன் புன்னகை உறிஞ்சிக்குடிக்கும்
  வேம்பயர் நான்...
  என் காயம் சுவைக்கும்
  ட்ராகுலா நீ....


  .....மெல்லிய நட்புணர்வுடன் இருக்கும் அக்காவையும் இப்படி நோகடிக்க செய்தது யாரோ?
  கவிதையில், உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 9. நல்ல கவிதை அக்கா, உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளவும்.
  http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post_09.html

  பதிலளிநீக்கு
 10. \\தூர் வார வேண்டும்...
  தூர்ந்து போகுமுன்னே.,
  நமக்கிடையே எல்லாமும்.............\\
  :-))

  பதிலளிநீக்கு
 11. //சிம்பன்ஸியாகவோ
  சாத்தானாகவோ இருப்பது
  உன் விருப்பம் ...
  என்னை ஏன் பிறாண்டுகிறாய்..?
  நானும் உன் போல்தான் ....!
  இருந்தாலும்...???/// அழகாக உணர்வுகளை வெளிபடுத்திருக்கிங்க அக்கா ...

  பதிலளிநீக்கு
 12. //உன் புன்னகை உறிஞ்சிக்குடிக்கும்
  வேம்பயர் நான்...
  என் காயம் சுவைக்கும்
  ட்ராகுலா நீ....//

  அழகான வரிகள்....

  பதிலளிநீக்கு
 13. கவிதை சிறப்பு . பகிர்வுக்கு நன்றி ! மீண்டும் வருவேன்

  பதிலளிநீக்கு
 14. ரொம்ப நல்லாவே எழுதியிருக்கீங்க, மேடம்!

  பதிலளிநீக்கு
 15. //உன் புன்னகை உறிஞ்சிக்குடிக்கும்
  வேம்பயர் நான்...
  என் காயம் சுவைக்கும்
  ட்ராகுலா நீ....//

  தேனக்கா என்னதான் கோவமா இருந்தாலும் இப்டியா ஹ..ஹ..ஹ...நல்லா வந்துருக்கு அக்கா...டாக்டர் செலவு எவ்ளோ ஆச்சு???அதையும் சொல்லி இருக்கலாம்..

  பதிலளிநீக்கு
 16. //என்னை ஏன் பிறாண்டுகிறாய்..?
  நானும் உன் போல்தான் ....!//

  super akka.. very nice kavithai..
  vaarththai ubayogam arumai.. :)

  பதிலளிநீக்கு
 17. //தூர் வார வேண்டும்...
  தூர்ந்து போகுமுன்னே.,
  நமக்கிடையே எல்லாமும்.............//

  கண்டிப்பாக இது தேவைதான், நம் அனைவருக்கும், இந்த கணம்....

  வாழ்த்துக்கள் தேனம்மை....

  பதிலளிநீக்கு
 18. கவிதை அழகாயிருக்குங்க பகிர்வுக்கு நன்றி.........

  பதிலளிநீக்கு
 19. அக்கறையா..? உனக்கா..?
  இக்கரைக்கு அக்கரை...?
  கறையிலாமல் இருக்கா..?

  கவிதை மிக அருமை!!!

  பதிலளிநீக்கு
 20. உணர்வு பூர்வமான கவிதை., எதார்த்தம் அருமை.

  பதிலளிநீக்கு
 21. //உன் புன்னகை உறிஞ்சிக்குடிக்கும்
  வேம்பயர் நான்...
  என் காயம் சுவைக்கும்
  ட்ராகுலா நீ....//

  நன்றாக ரசித்தேன்..

  வாழ்க..

  நன்றி..

  பதிலளிநீக்கு
 22. //உன் புறக்கணிப்பும்
  புறக் கணிப்பும்.,
  //
  //தூர் வார வேண்டும்...
  தூர்ந்து போகுமுன்னே.,
  நமக்கிடையே எல்லாமும்.............//

  கட்டிப் போடுதுங்க மேடம் இந்த வரிகள்..

  பதிலளிநீக்கு
 23. சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html

  பதிலளிநீக்கு
 24. நல்ல கவிதை தேனம்மை. முதலில் புரியல..படிக்க படிக்க புரிந்தது.

  பதிலளிநீக்கு
 25. வேதனையின் வெளிப்பாடு. காலங்காலமாக இதுதானே நடக்கிறது.

  பதிலளிநீக்கு
 26. //உன் புறக்கணிப்பும்
  புறக் கணிப்பும்.,
  என் கணிப்பில் திலகம் நீ...//

  அருமையான வார்த்தை பிரயோகம்.

  பதிலளிநீக்கு
 27. உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடு அழகழகான வரிகளில்... அருமை.

  பதிலளிநீக்கு
 28. நன்றீ சை கொ ப..

  நன்றி அமைதிச்சாரல் ..
  நம்ம விஸ்வரூபத்தை காண்பிக்க வேண்டியதுதான். :-))..//

  இதை மிகவும் ரசித்தேன் சாரல்

  பதிலளிநீக்கு
 29. நன்றீ கதிர்..ஆமா வாசப்படிதான்..

  நன்றி பிரபு...இசை அமைச்சிறலாம்

  பதிலளிநீக்கு
 30. நன்றீ செந்தில்நாதன்

  நன்றி டி வி ஆர்

  பதிலளிநீக்கு
 31. உங்க முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றீ சந்தன முல்லை

  நன்றி சசி வாழ்த்துக்கும்., விருதுக்கும்..

  என்ன தவம் செய்தேன் உங்களைப் போன்ற சகோதர சகோதரியர் பெற

  பதிலளிநீக்கு
 32. நன்றீ யாநிலாவின் தந்தை


  நன்றி பனித்துளி சங்கர்

  பதிலளிநீக்கு
 33. நன்றி பெயரில்லா

  நன்றி அகல்விளக்கு

  பதிலளிநீக்கு
 34. சீமான்கனி இது காயம் அல்ல தழும்பு

  நன்றீ ஜெயராஜ்..உண்மை

  பதிலளிநீக்கு
 35. நன்றீ ஸாதிகா உங்க அன்புக்கும் விருதுக்கும்

  நன்றி கோபிநாத்

  பதிலளிநீக்கு
 36. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

  பதிலளிநீக்கு
 37. உன் புறக்கணிப்பும்
  புறக் கணிப்பும்.,
  என் கணிப்பில் திலகம் நீ...//

  மொத்த கவிதையிலும்...

  மிக மிக வியந்தது இவ்வரிகள்.....

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...