எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 5 ஏப்ரல், 2010

கைவசம்

உன் கைப்பிடித்து வர
கையில் இருந்தவற்றைக்
கழட்டி வைத்தேன்...

உன் கை நெகிழ
கழற்றிய ஒவ்வொன்றாய்
கை வசமாக ..
கைக் கவசமாக...


திரும்பக் கைப்பிடிக்குள்
கையடக்க நினைக்கிறாய்...
கை வசமானது
கை விட்டுப் போகாமல்
கை வசமாக..

உன் கை வசமாவது
கை மட்டும்தானா இல்லை
என் மனசும் இருக்கிறதா அதில்...?

http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem020410.asp

டிஸ்கி 1 :- இந்த இடுகை யூத்ஃபுல் விகடனில் ஏப்ரல்
இரண்டாம் தேதி வந்து இருக்கு..
டிஸ்கி 2:- கவிக்கோவின் இடுகை அடுத்து வரும்
மக்களே...

44 கருத்துகள்:

 1. உன் கை வசமாவது
  கை மட்டும்தானா இல்லை
  என் மனசும் இருக்கிறதா அதில்.

  good sirappana varigal

  பதிலளிநீக்கு
 2. இருக்கா இல்லையா தெரியாதா உங்களுக்கு? தெரியாத மாறி கேக்கறீங்க?
  கவிதைவசம் ஆனது மனது

  பதிலளிநீக்கு
 3. //
  உன் கை வசமாவது
  கை மட்டும்தானா இல்லை
  என் மனசும் இருக்கிறதா அதில்...?//

  அருமை தேனம்மை.

  பதிலளிநீக்கு
 4. அற்புதம்!!! அக்கா.
  உங்களுக்கு விருது கொடுத்து
  இருக்கிறேன், பெற்று
  கொள்ளுங்கள், நன்றி.

  பதிலளிநீக்கு
 5. எங்கள் மனசு, கவிதை வசமானது
  இப்போது.
  நல்லாயிருக்கு தேன்னம்மை.

  பதிலளிநீக்கு
 6. //கை வசமானது
  கை விட்டுப் போகாமல்
  கை வசமாக//

  மனது வசமானது
  உங்கள் கவிதைக்கு

  பதிலளிநீக்கு
 7. நல்ல கவிதை அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. intha mara mandaikku konjam lateaagathan purinjathu.. nice words.. hm thank you for the info about youthfull vigadan..

  பதிலளிநீக்கு
 9. வழக்கம்போல் இன்னோரு நல்ல கவிதை:). பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. உன் கை வசமாவது
  கை மட்டும்தானா இல்லை
  என் மனசும் இருக்கிறதா அதில்...?


  ...... very nice, akkaa.
  Congrats!

  பதிலளிநீக்கு
 11. தேன்,

  உண்மையிலேயே “யூத்ஃபுல்” கவிதை தாங்க.

  பதிலளிநீக்கு
 12. கைக்கு அடக்கமான
  கைவிட முடியாத
  கவிதை!

  பதிலளிநீக்கு
 13. எல்லோரும் சொல்வது போலக் கடைசி வரிகள் அருமை.

  பதிலளிநீக்கு
 14. //////உன் கை வசமாவது
  கை மட்டும்தானா இல்லை
  என் மனசும் இருக்கிறதா அதில்...?/////////  கவிதை அருமை !
  ஆனால் இன்னும் பதில் சொல்லவில்லையே ??????

  பதிலளிநீக்கு
 15. //கை வசமாக ..
  கைக் கவசமாக...//

  வார்த்தை விளையாட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
 16. //உன் கை வசமாவது
  கை மட்டும்தானா இல்லை
  என் மனசும் இருக்கிறதா அதில்...?// சூப்பர் அக்கா!!

  வாழ்த்துக்கள் விகடனில் வந்ததற்க்கு...

  பதிலளிநீக்கு
 17. வாழ்த்துகள்...வாழ்த்துகள்....அருமையாக இருக்கின்றது....

  பதிலளிநீக்கு
 18. அருமை அக்கா..

  கை வசமானது... கை விட்டுப் போகாமல்..கை வசமாக..
  இந்த வரிகள், ரொம்ப பிடிச்சிருக்கு..!
  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 19. கைக்கு அடக்கமான
  கைவிட முடியாத
  கவிதை!

  கவி வசமானது மனது....

  பதிலளிநீக்கு
 20. சொல் விளையாட்டில் சுற்றியடிக்கிறீர்கள்!!! யூத்புல் விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 21. நன்றி முனியப்பன் சார்

  நன்றி அரும்பாவூர்

  பதிலளிநீக்கு
 22. நன்றி நேசன்

  நன்றீ பத்மா சும்மா கேட்டுக்கிறதுதான்

  பதிலளிநீக்கு
 23. நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி சை கொ ப
  விருது கொடுத்து கௌரவிச்சதுக்கும்

  பதிலளிநீக்கு
 24. நன்றி சசி உங்கள் புகழும் மென்மேலும் உயரட்டும்

  நன்றி மாயோ

  பதிலளிநீக்கு
 25. நன்றி சக்தி உங்க லிங் ல பின்னூட்டம் போட முடியல பாருங்க

  நன்றி பாலா சார்

  பதிலளிநீக்கு
 26. நன்றி பனித்துளி சங்கர்...இருக்கிறது

  நன்றி ஹுசைனம்மா

  பதிலளிநீக்கு
 27. நன்றி குமார்

  நன்றீ அன்புத்தோழன்

  பதிலளிநீக்கு
 28. வலைப்பதிவர் ஒற்றூமை ஓங்கட்டும் என்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...