எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன்..THE ROBOT..எனது பார்வையில்...



கடவுள் இருக்கிறாரா..? இந்த கேள்விக்கு சிட்டியை கேளுங்கள் ..சொல்வார்.. இருக்கிறார்.. அவர்தான் வசீகரன்.. என்னைப் படைத்த கடவுள்..என்று.
ஒரு ரோபோ சொல்லும் சிம்பிள் ஆன்ஸர்..
 
ரோபோவுக்கு மனித உணர்ச்சிகள் வந்தால் எப்படி இருக்கும்..? அதுதான் கதை..முதலில் கோபம் வருகிறது..பின்பு உற்சாகம்.. பின் காதல்..
காதல் வந்ததும் ஆக்கபூர்வமான மனது காதல் போட்டியில் டிஸ்ட்ரக்டிவாக எப்படி எல்லாம் செய்ய முடியும்.. இதுதான்.. ஜெயண்ட் சைஸ்.. ரோபோ..
இது கலாநிதிமாறனின் லேபிளில் மிக அட்டகாசமாக வந்துள்ளது..



 ரஜனி என்ற சுப்ரீம் ஸ்டாரின் இரட்டைச் சிங்கங்கள் சுஜாதா மற்றும் சங்கர்..
என் இனிய இயந்திரா..ஞாபகம் வந்தது .. நிறைய இடங்களில் கதையில் சுஜாதாவின் இருப்பை உணர முடிந்தது..

 டெர்மினேட்டர்., ஐ ரோபோட்., மாட்ரிக்ஸ்..போன்ற படங்கள் அவ்வப்போது நினைவில் வந்தாலும்..ரஜனி ரஜனிதான்.. அந்த கூலர்ஸ் எல்லாம் ரோபோ ரஜனிக்கு ரொம்ப அட்டஹாசம்.. எந்த கண்ட்ரியிலெல்லாம் வாங்கினீங்க..
அதுபோல் ரோபோ ரஜனியின் காஸ்ட்யூம்ஸ்.. மார்வலஸ்.. இனி அடுத்த ஹேர் கட் மற்றும் கிருதா எல்லாம் வில்லன் ரஜனியின் ஸ்டைலாகத்தான் இருக்கும்..

"காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்" பாடிய ரஜனி.," காதல் அணுக்கள்., கிளிமாஞ்சாரோ., இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதே"., எனப்பாடினாலும்., ஐஷுடன் டான்ஸ் ஆடினாலும் பார்க்கப் பார்க்கச் சலிக்கவில்லை..

செண்ட் ஆஃப் வுமன்., மாஸ்க் ஆஃப் ஸாரோ ., ட்ரூ லைஸ் ., டேக் த லீட் போன்ற படங்களின் நடனங்களை விரும்பிப்பார்த்தது போல் எந்திரனிலும் ரோபோவின் நடனம் சூப்பர்ப்..அதிலும் தொப்பி போட்டு மைக்கேல் ஜாக்சன் போல் ஒரு ட்விஸ்ட் ஆடுவார் பாருங்கள்.. கொள்ளை அழகு.. ரஜனி.. ப்ளீஸ் சொல்லுங்க உங்க வயசென்ன.?

இரும்பிலே ஒரு இதயம் துடிக்கும் பாடலில் ரோபோவின் சில்வர் க்ரே ட்ரெஸ்ஸில் ஆடும் போது இரும்புத் தாமரைகளும்., கோல்டன் கலர் ட்ரெஸ்ஸில் ஆடும் போது தங்க மீன் தொட்டியும் அழகு.. கிளிமாஞ்சாரோ பாடலில் இயற்கைஅழகும் ரஜனி ஐஸின் அழகும் போட்டி போட்டுக்கொண்டு ஜொலிக்கிறது..

ஐஸ் ஏக் தம் ஃபிட்.. அடுத்த ஆச்சர்யம் இவர்.. டைனோராவா., சாலிடரா தெரியவில்லை.. அந்த விளம்பரத்தில் அழகுக் கிளியாக வந்தவர்.. சிறிது பூசினாற்போல இருந்தாலும்.. கொள்ளை அழகுதான்.. நல்ல ஸ்கின் டோன்...சிவப்பு உடைகளில்..திரையில் நெருப்புப் பிடித்தது போலிருக்கிறது இவரின் நடனம்..

சந்தானம்., கருணாஸ்., டானி டெங்சோபா., கலாபவன் மணி ., ராகவ் எல்லாரும் உண்டு..கடைசி கட்ட கிராஃபிக்ஸை குறைத்து இவர்களுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.. அருமையான நடிகர்கள்..
பீட்டர் ஹெய்ன்., அலெக்ஸ் மார்ட்டின் சண்டைக்காட்சிகள் பிரமிப்பு..
வைரமுத்து., மதன் கார்க்கி., பா. விஜய் பாடல்கள் அருமை.. பா. விஜய்.. உங்க கிளிமாஞ்சாரோ வரிகள் ரொம்ப அற்புதம். மதன் உங்க இரும்பிலே பாடல் ரொம்ப டச்சிங்கா இருந்தது..வைரமுத்து எப்பவும் வியக்க வைப்பவர்.
சங்கர்.. ஹேட்ஸ் ஆஃப் யூ.. வழக்கம் போல சக்ஸஸ் ஃபார்முலா.. குட் லீடிங்.. நல்ல டைரக்‌ஷன்.. ஏ.ஆர். ரஹ்மான் சில பாடல்களில் வியக்க வைக்கிறார்.. சில பாடல்கள்.. ம்ம்ம்..சாபு சிரில்., ரசூல் பூக்குட்டி., பிரபு தேவா.அற்புதம்..
ஆனால் சவுண்ட் டிடிஎஸ் எஃபெக்ட் சரியாக இருக்கும் தியேட்டர்களில் பார்க்கவேண்டும்..


தேவி கருமாரியில். படம் ஆரம்பிக்க உள்ளே போகுமுன் இருந்த மக்கள் கூச்சல் உள்ளே குறைவுதான்.. படமும் நல்ல டெப்தாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

வில்லன் ரஜனியின் சில அசைவுகள் மிரட்டலாய் இருக்கின்றன,,
நல்ல ஹுமனாய்டு.. குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவு யோசிக்கிறது..பயமாய் இருக்கிறது.. எதிர்கால ரோபோக்கள் சிந்திக்கும் திறனுடன்.. உணர்வுகளுடன் இருக்க சாத்தியமா..?

கடைசியாக ரோபோ ரஜனி சொல்லும் வசனம்தான்..கோபம்., பொறாமை போன்றவை மனுஷ குணங்கள்... படைத்தவனின் கட்டளையை மீறி நடக்கக் கூடாது..

பொழுதுபோக்கு., மற்றும் ரஜனி படம் (வழக்கமான பஞ்ச் லயலாக் இல்லை)., சங்கர் டைரக்‌ஷன்., கலாநிதி மாறன் தயாரிப்பு என்பதெல்லாம் மீறி.. ரஜனியின் மிக உருப்படியான இன்னொரு படம்..பார்க்கலாம் மக்காஸ்.. அடுத்து பிவிஆர் அல்லது ஏஜிஎஸ் இல் பார்க்கலாம் என்று இருக்கிறேன்..
டிஸ்கி:- என்ன என்னுடைய ப்ளாக்கில் திரை விமர்சனமா எனப் பார்க்கிறீர்களா..? நாங்களும் பள்ளிக்கூட வயசிலிருந்தே ரஜனி ஃபான்ஸ்தானே,,..:)) முதல் முறை திரை விமர்சனமும் எழுத நினைத்தேன்.. அது நம்ம தளபதி படமா அமைஞ்சிருச்சு..:))..

டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் பண்ணியாச்சு.. அதுக்குள்ள கையில் ஒரு இஞ்சூரியாகி ஹாஸ்பிடலைஸ் செய்து சர்ஜரி வரை வந்து க்யூர் ஆகி ரெண்டு நாள்தான் ஆகுது.. ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸோட ஒற்றைக் கையால் டைப் செய்த விமர்சனம் இது..

முதல் நாள் 4 வது ஷோ கைக்கட்டோட போய்ப் பார்த்துட்டுட்டு.வந்து சூட்டோட சூடா போட்ட ரிவ்யூ...:))

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.



 



33 கருத்துகள்:

  1. ரஜினின்னா கைவலி கூட மறந்து போகுதுதாக்கா உங்களுக்கு.. டேக் கேர்.. விமர்சனம் சூப்பர் :)

    பதிலளிநீக்கு
  2. என்ன ஆச்சு ??? நானும்ம் தேவி கருமாரில பாக்கலாம்னு நினச்சேன். பட் அரங்கு எப்படி இருக்கும்னு தெரியாது அதனால தவிர்த்தேன் இன்றைக்கு போறேன் வந்து விமர்சனம் எழுதறேன்..

    பதிலளிநீக்கு
  3. அதிரடி விமர்சனம்....ரசித்தேன்.......

    பதிலளிநீக்கு
  4. முதல் நாள் 4 வது ஷோ பார்த்துட்டீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. என்னாச்சு அக்கா ?

    கை பரவாயில்லையா ?

    பார்த்துகொள்ளுங்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. கோபம்., பொறாமை போன்றவை மனுஷ குணங்கள்... படைத்தவனின் கட்டளையை மீறி நடக்கக் கூடாது..

    நல்ல மெசேஜ்.. நல்ல விமர்சனம்..

    பதிலளிநீக்கு
  7. //அதுக்குள்ள கையில் ஒரு இஞ்சூரியாகி ஹாஸ்பிடலைஸ் செய்து சர்ஜரி வரை வந்து க்யூர் ஆகி ரெண்டு நாள்தான் ஆகுது //

    அக்கா உங்களோட சமையல் குறிப்பை படிச்சவங்களோட சதியா இருக்குமோ ?

    பதிலளிநீக்கு
  8. நல்ல விமர்சனம்
    தரமான கருத்துக்கள்


    இன்னொரு விமர்சனம்
    http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.html

    பதிலளிநீக்கு
  9. யக்கோவ் ...கையில் கட்டோட எந்திரன் படத்த பார்த்துட்டு வந்ததோட இல்லாம ஒரு கையாலேயே அதற்கு விமர்சனமும் எழுதிட்டு சின்ன வயசுலேர்ந்து நானும் ரஜினி விசிறி..தான்னு போட்டு தாக்கி இருக்கிங்க பாருங்க ......உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு :))
    இதுல அடுத்த ஷோவுக்கு இப்பவே அச்சாரம் வேறயா ?? கைய கவனிங்க முதல்ல...!!

    -அன்புடன் தம்பி,
    பாபு பழமலை .

    பதிலளிநீக்கு
  10. சிறந்த சுருக்கமான விமர்சனம்

    பதிலளிநீக்கு
  11. தேனம்மை விமர்சனம் அற்புதம்!!!

    பதிலளிநீக்கு
  12. விமர்சனம் அருமை. தலைவர் கலக்கிட்டார்.

    கை பத்திரம் அக்கா. இப்ப எப்படி இருக்கு?

    பதிலளிநீக்கு
  13. intha rajini paya pulla yellaraiyum yeppadi yellam attu vikkuthu .....

    பதிலளிநீக்கு
  14. படம் பார்கத்தூண்டுகிறது பார்க்கம் வரை நன்றி இன்னும் பார்க்கவில்லை அருமையான விமர்சனம்

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப நல்ல இருக்கு

    பதிலளிநீக்கு
  16. //நாங்களும் பள்ளிக்கூட வயசிலிருந்தே ரஜனி ஃபான்ஸ்தானே,,..:)) முதல் முறை திரை விமர்சனமும் எழுத நினைத்தேன்.. அது நம்ம தளபதி படமா அமைஞ்சிருச்சு..:))..//

    நீங்களும் நம்மாளுதானா?

    பொசிடிவான விமர்சனத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அருமையான விமர்சனம் அக்கா..

    take care ..

    பதிலளிநீக்கு
  18. கை வலி இப்போ பரவாயில்லையா அக்கா!
    முதல் விமர்சனமே அட்டகாசம்!

    பதிலளிநீக்கு
  19. ரஜனி போலவே அதிரடி விமர்சனம் !

    பதிலளிநீக்கு
  20. விமர்சனம் கலக்கல்.. கையை பார்த்துக் கொள்ளுங்கள்...

    பதிலளிநீக்கு
  21. தேனுவின் இனிவரும் அணைத்து விமர்சனங்களும் இன்ட்லி'யில் 50 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெரும்...வாழ்த்துக்கள்
    - இந்த படத்தின் விமர்சனம் தேனுவின் பதிவுக்காக படித்தது....
    படம் பற்றிய என் கருத்து வேறுபடும்...மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  22. தேனம்மை மேடம்....

    ரஜினி ரசிகனான நானே எல்லாரும் விமர்சனம் எழுதறாங்களே / எழுதப்போறாங்களேன்னு நெனச்சு எழுதாம இருந்தேன் / இருக்கேன்...

    ஆனாலும், நீங்கள் படத்தை அக்குவேறு, ஆணிவேராக ரசித்து எழுதி இருக்கிறீர்கள்..

    இன்னொரு முறை படம் பார்த்த ஃபீல் கொண்டு வருகிறது உங்கள் விமர்சனம்..

    எப்போதும் போல், உலகமெங்கும் ரிலீஸாகும் தேதிக்கு முந்தையே தேதியில் துபாயில் பார்த்தாச்சு...

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து வெர்ஷனும் படு ஹிட்டாம்.

    உலகத்தின் மிக முக்கியமான USA, UK, SOUTH AFRICA, AUSTRALIA, UAE போன்ற நாடுகளில் டாப்-10ல் இடம் பிடிக்க இருக்கும் முதல் தமிழ்ப்படம் ”எந்திரன்” தான்...

    இதற்கு முன் “சிவாஜி” யூ.கே.டாப்-10ல் 9வது இடத்தை பிடித்ததே சாதனையாக இருந்தது...

    பதிலளிநீக்கு
  23. அம்மாடியோவ்! மத்த விமர்சகர்களுக்கு ஏதும் பாக்கி வைத்திருக்கிறீர்களா? சுவாரஸ்யமாய் விமரிசித்திருக்கிறீர்கள்.
    பின்னூட்டங்களிளிருந்து சுகவீனப் பட்டிருக்கிறீர்கள் என அறிகிறேன். விரைவில் முழு நலம் பெற விழைகிறேன்!

    பதிலளிநீக்கு
  24. அப்ப பார்க்கலாம்ன்கிறீங்க...

    பதிலளிநீக்கு
  25. //கைக்கட்டோட போய்ப் பார்த்துட்டுட்டு.வந்து...//

    என்னாச்சு அக்கா? கை பரவாயில்லையா? பார்த்துகொள்ளுங்கள் ...

    படம் பற்றிய என் கருத்து வேறுபடும்...மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  26. //கைக்கட்டோட போய்ப் பார்த்துட்டுட்டு.வந்து...//

    என்னாச்சு அக்கா? கை பரவாயில்லையா? பார்த்துகொள்ளுங்கள் ...

    படம் பற்றிய என் கருத்து வேறுபடும்...மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  27. நன்றி ராமசாமி கண்ணன்., கார்த்திக்., ஜெரி., ரமேஷ்., விஜய்., ரிஷபன்., நசர்., சௌந்தர்., கிருத்திகன்., யாதவன்., பாபு., சதீஷ்., சக்தி., செந்தில்நாதன்., செந்தில்., ஹாசிம்., பெயரில்லா., எப்பூடி., கணேஷ்., ஆர் ஆர் ஆர்., சரவணா., வெறும்பய., ஹேமா., வினோ., ஆகாய மனிதன்., கோபி., ஹுஸைனம்மா., மோகன் ஜி ., கமலேஷ்., டெனிம்., குமார்., தங்கதுரை.

    பதிலளிநீக்கு
  28. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...