எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 23 அக்டோபர், 2010

வெள்ளி கொலு..







கொலுவென்றால் என்னவெல்லாம் தோன்றும் உங்களுக்கு..
சுண்டல்., மரப்பாச்சி., பொம்மைகள்., பார்க்., மலை., ஃபவுண்டன்., கோலம்., பாடல்கள். , பட்டுப் பாவாடை ஜிமிக்கியில் கண்மை தீட்டிய குழந்தைகள்..
இப்படித்தான் நினைத்து நானும் சென்ற வாரம் என் நண்பர் அருண் வீட்டு கொலுவுக்கு சென்றேன்.. கை மாவுக்கட்டு இருந்தால் என்ன..? நட்பு முக்கியம் இல்லையா..:))
உள்ளே நுழைந்ததும் அசந்து போனேன் .. பிரம்மண்டமாய் .. ஏதோ டால் எம்போரியத்தில் நுழைந்து விட்டோமாவென்று இருந்தது.. டில்லியில் சங்கர்ஸ் டால் மியூஸியம் பார்த்தது போல்..
மிக அட்ராக்டிவ் அம்சங்கள் அவர் அம்மா வத்சலா அவர்கள் தன் கையாலே செய்த சகுந்தலை கதை.. பொம்மைகள்.. பொம்மைகளே செய்யப் பட்டு பின் அவற்றுக்கான உடைகளும்.. கண்வ மகரிஷியின் பர்ணசாலையில் சகுந்தலை வளர்வதும்., துஷ்யந்தனைக் கண்டு காதல் வயப்படுவதும்., மோதிரம் அணிந்து காந்தர்வ மணம் புரிவதும்., அந்த அன்பின் நினைப்பிலேயே குடிலுக்கு வந்த துர்வாசரை வரவேற்காததால் கோபமுற்ற அவர் சாபமிடுவதும் ., அந்த மோதிரம் நீர்நிலையில் விழுந்து விடுவதும் ..பின் துஷ்யந்தனைப் பார்த்து அவள் வருந்துவதும் .. என எல்லாம் தத்ரூபமாய்..
ஆந்திரா கர்நாடகாவின் கலைகளான பொம்மை செய்தலை ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன் மங்கையர் மலர் மூலம் தான் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்... பொம்மைகளை துணியில் செய்து கம்பிகளில் கை கால்களை நுழைத்து ., ஒரு ஸ்டாண்டில் நிற்கவைத்து இருக்கிறார். முகத்துக்கு மாஸ்க் பொம்மைகள் உபயோகப் படுத்தப் பட்டு இருக்கிறன.
தினமும் மரப்பாச்சி பொம்மைகள் இரண்டுக்கு விதம் விதமான காஸ்ட்யூம்ஸ்.. இதில் பெரிய ஸ்டாண்டில் 7 ஷெல்ஃப்களும் சின்னதில் 5 ஷெல்ஃப்களும் பொம்மைகள்.. ஓரினத்திலிருந்து ஒருவனே தேவன் வரை..
இதில் ஹை லைட் ராம் சீதா திருமணவைபவம்.. நிஜ சீர் சாமான்கள் தோற்றுவிடும் அழகில் கிட்டத்தட்ட 2 கிலோ வெள்ளியில் 5 படிகளில் சீர் பொருட்கள்.. அழகு.. பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க.. ஆமாம் வெள்ளியில்லையா....
கேசரி., சுண்டலுடன் ஒரு பர்ஃபெக்டான நவராத்திரி.. அருண் இத பார்க்கிறதுக்கு எல்லாருக்கும் நீங்க டிக்கெட் கொடுத்தீங்கன்னா எந்திரன் படத்தை விட அதிகமா வசூலாகும்..

15 கருத்துகள்:

  1. கையில் மாவுக்கட்டு என்ன ஆனது அக்கா ஏதேனும் விபத்தா

    பதிலளிநீக்கு
  2. வெள்ளிக்கொலு அட்டகாசம். முதல்முறையாப் பார்க்கிறேன்.

    ஆமாம்...அதென்ன மாவுக்கட்டு?

    பலத்த அடியோ!!!

    இப்ப தேவலையா? வலி குறைஞ்சுருக்கா?

    பதிலளிநீக்கு
  3. வெள்ளிக்கொலு தகதகன்னு இருக்கு.. வடக்கேயும் கல்யாணங்களின்போது, பெண்ணுக்கு கொடுக்கும் சீர்வரிசைகளை (ஸ்பூன் உட்பட)கொலுப்படியாட்டம் அடுக்கி வெச்சிருப்பாங்க. அதை அப்படியே தத்ரூபமா செஞ்சுருக்காங்க..

    பதிலளிநீக்கு
  4. கொலு அழகு.பகிர்வுக்கு நன்றி.

    உங்கள் கையில் என்ன மாவுகட்டு ?

    இப்போது தேவலையா?

    கவனமாய் எங்கேயும் இடித்துக் கொள்ளமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    விரைவில் குணமாக வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. என்னக்கா ஆச்சு...
    மாவுக்கட்டு அது இதுன்னு சொல்லியிருக்கீங்க....
    இப்ப எப்படியிருக்கு...
    கொலு பகிர்வும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. இப்போ பரவாயில்லை சசி..
    நன்றீ சசி ., புவனா., கயல்.. ( ஆமாம்டா நீதான் கூட்டிக்கிட்டுப் போனாய்.. ) ., சௌந்தர்.,துளசி., ராஜி., ஆசியா., கௌசல்யா., கோமதி., வெறும் பய., குமார்., காஞ்சனா.,

    பதிலளிநீக்கு
  7. இப்போ பரவாயில்லை சசி..
    நன்றீ சசி ., புவனா., கயல்.. ( ஆமாம்டா நீதான் கூட்டிக்கிட்டுப் போனாய்.. ) ., சௌந்தர்.,துளசி., ராஜி., ஆசியா., கௌசல்யா., கோமதி., வெறும் பய., குமார்., காஞ்சனா.,

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...