வெள்ளி, 29 அக்டோபர், 2010

நிகழவே இல்லை நம் சந்திப்பு.......

நான் உன் பின்னே வர
நீ எதன் பின்னோ விரைய
குதிரை முன் கட்டிய கொள்ளுப்பை..

பாம்புகளும் ., பூரான்களும்
அடைசலாய் நெளியும்
கெட்ட கனவொன்றில் முழித்து..

வேர்வைச் சுரப்பிகள்
அமிலக் கண்ணீராய் அரிக்க..
இன்மையின் திரையில்..


பூக்கள் இருப்பதாய்
உணர்ந்த இடத்தில்
தொட்டுப் பார்க்க..
உறுத்திய முட்களும் இல்லை..

பூநாகமும்., திருநீற்றுப் பச்சையும்
மணத்துக் கிடக்க.. நிலவைப்
பலமுறை பின்னுருட்டினேன்..

உராய்ந்த தடமறியா
வலியுணராமல் பின்னோக்கி
பாதச்சுவடுகள் தேயத்தேய...

கொடுத்ததெல்லாம் திருப்பி
நேர்த்திக்கடனை நேர் செய்தேன்..
சந்தனமும் மிளகாயும் அரைத்துப் பூசி..

குழப்பம் இல்லா
குழந்தைச் செடியாய்
மொக்குகள் சுமந்தேன்..

பூக்கள் மணக்கும் நாளில்
நானும் நீயும் சந்திக்கவேயில்லை..
இனி சந்திக்கப் போவதுமில்லை...

டிஸ்கி :- இது 24. 10. 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது.

29 கருத்துகள் :

THOPPITHOPPI சொன்னது…

அருமையான பதிவு

ராமலக்ஷ்மி சொன்னது…

கவிதை அருமை தேனம்மை. திண்ணையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!

LK சொன்னது…

எனக்குப் புரியலை

வானம்பாடிகள் சொன்னது…

பின்னூட்டமல்ல

பூக்கல் இருப்பதாய்

பூக்கள்

தமிழ் உதயம் சொன்னது…

வார்த்தைகளை எப்படி கோர்க்கிறிர்கள். அருமை....

நட்புடன் ஜமால் சொன்னது…

பின்னுருட்டினேன்..

முதன் முறையாக கேட்டது போல் இருக்கு

கலாநேசன் சொன்னது…

அமிலக்கண்ணீர்க் கவிதை அருமை

ஜோதிஜி சொன்னது…

தமிழ் உதயம் மிகச் சரியாகவே சொல்லியுள்ளார்.

நசரேயன் சொன்னது…

//டிஸ்கி :- இது 24. 10. 2010 திண்ணையில்வெளிவந்துள்ளது.//

கவுஜ எழுதி கசக்கி திண்ணையிலே போட்டுருவீங்களோ ?

மதுரை சரவணன் சொன்னது…

//
குழப்பம் இல்லா
குழந்தைச் செடியாய்
மொக்குகள் சுமந்தேன்..//

vaalththukkal. vaarththakal vanthu thaanai vilukinrana.

யாதவன் சொன்னது…

அருமை அருமை கஷ்டப்பட்டு வாசித்து முடித்தேன்

sakthi சொன்னது…

பூக்கள் மணக்கும் நாளில்
நானும் நீயும் சந்திக்கவேயில்லை..
இனி சந்திக்கப் போவதுமில்லை.

அருமை

சே.குமார் சொன்னது…

அக்கா...

கவிதை அருமை.

திண்ணையில் அடிக்கடி இடம் பிடிப்பதற்கு வாழ்த்துக்கள்.

இப்ப கை பரவாயில்லையா?

Chitra சொன்னது…

அக்கா, கவிதை ரொம்ப நல்லா வந்து இருக்குதுங்க.... திண்ணையில் வந்ததற்கும் பாராட்டுக்கள்!

சிநேகிதி சொன்னது…

அருமை

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கவிதை அருமை

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் அக்கா.

வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…

திண்ணையில் வந்ததற்கு பாராட்டுக்கள்!

சசிகுமார் சொன்னது…

அருமை

வெறும்பய சொன்னது…

அருமை

D.R.Ashok சொன்னது…

நல்லாயிருக்குங்க :)

Balaji saravana சொன்னது…

//கெட்ட கனவொன்றில் முழித்து..//
உங்களுக்குமா அக்கா? :)

கவிதை அருமை

ஜிஜி சொன்னது…

திண்ணையில் வந்ததற்கு பாராட்டுக்கள்! கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.

தமிழ்க் காதலன். சொன்னது…

உங்கள் எழுத்தில் உங்களின் எண்ணக் குவியல்கள் புரிய முடிகிறது. சொல்ல நினைப்பதை வெளிப்படையாய் சொல்லாமல் உறையிட்ட வாளாய் ஊடுருவி வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறீர்கள். சொல்லாடல் அருமை. வலிகள் பேசுமிடத்து வார்த்தைள் அருமை. மிக்க நன்றி. வருகை தாருங்கள்... ( ithayasaaral.blogspot.com )

Diamond சொன்னது…

ARUMAYANA THOGUPPU THOZHI...THANGALIN........THONDU THODARATTU............THOZHI............................

Jayaraj சொன்னது…

Your command over language is excellent. Feelings expressed in beautiful words - those with tender heart will understand them exactly the way you intended them to understand. Those with a different type of heart, they will just keep on trying to understand. Great, my dear friend HONEY!

Dr.Rudhran சொன்னது…

good

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி தொப்பி., ராமலெக்ஷ்மி., கார்த்திக்., பாலா சார்., ( திருத்திட்டேன்) ., ரமேஷ்., ஜமால்., கலா நேசன்., ஜோதிஜி., நசர்.. ( ஹிஹிஹி ஆமாம் ) ., சரவணன்., யாதவன்., சக்தி., குமார்., சித்து., சிநேகிதி., டி வி ஆர்., சை ..கொ. ப., யோகேஷ்., சசி., வெறும்பய., அஷோக்., பாலாஜி., ஜிஜி., தமிழ்க்காதலன்., டைமண்ட்., ஜெயராஜ்., ருத்ரன்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...