திங்கள், 22 நவம்பர், 2010

மந்திரப் புன்னகை.. எனது பார்வையில்.

மந்திரப் புன்னகை.. நல்ல மர்மம் கொண்ட புன்னகைதான்... புதிதாக ஹீரோவாயிருக்கும் கரு. பழனியப்பனுக்கு.. நல்ல திராவிட நிறம் கொண்ட வெகு இயல்பான ஹீரோ.. நிச்சயம் இந்தக் கதையில் இவரால்தான் சிறப்பாக செய்ய முடியும்.. என்ன., இவர் வசனம் போல பேச்சுத்தான் பலமும்... சொற்ப இடங்களில் பலகீனமும்.


பார்த்திபன் கனவு படைத்த பழனியப்பன்தானா இது என்ற எண்ணம் கூட முதலில் வந்தது.. ஆனால் இது வேறு களம்.. வேறு ஆட்டம்.. மனச்சிதைவு.. ஆனால் இப்படி கண்டிநியுவஸாக ஒரு ஹோட்டலின் மேல் மாடிவரை செல்வதும் பார்ப்பதும் முடியுமா என்ன..?

முதல் கொஞ்ச சீன்கள் கலாசார அதிர்ச்சியாய் இருந்தது.. அழகிய தவறு என்று புத்தக அட்டை வேறு சிம்பாலிக்காக.. அடுத்து அவரின் வசனங்கள் ...பேனாக்கத்தி போல கூர்மை.. சேரன் படம் போல என ஒரே வார்த்தையில் சொல்ல முடியாது.. ஏனெனில் சேரன் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது.. சேரனைப் போல நல்லதைத் தர நினைக்கும் ஒரு ஹீரோ., இந்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.. ஆனால் நிறைய இடங்களில் ஆண்கள் கைதட்டி ரசிக்கிறார்கள்..

ஹீரோவின் மனநிலை பாதிப்பு... பாதிப் படம் முடியும் போதுதான் தெரிய வருகிறது.. தன் தந்தையிடம் அவர் பேசும் காட்சிகள் எல்லாம் தத்ரூபம்.. நிஜமாய் இருப்பது போல்.. காதலியைக் கொல்லும் இடங்களில் கூட ரத்தச் சகதி தெறிப்பது போல் இருக்கிறது நமக்கு..

”தாய்மை என்பது தகுதி இல்லை அது ஒரு நிலைமைதான்” என்ற பாலகுமாரனின் பச்சை வயல் மனது ஞாபகம் வந்தது கதாநாயகன் கதிரின் பேச்சில்..


தண்ணியடிப்பதும்., பெண்களிடம் செல்வதும் ., இயல்பான ஒருவன் தனக்கு வரும் மனைவி மட்டும் குற்றமற்றவளாக இருக்க வேண்டும் என நினைக்கிறான்.. எல்லா ஆண்களின் மனோபாவமும் இது.. இதற்கு டாக்டர் சொல்லும் வசனம்.. “ஏன் நீ செய்யலாம்.. அவ செய்யக் கூடாதா..”

கைது செய்யப்பட்டு வேனில் செல்லும் போது போலீஸ்காரரிடம் புகைக்க சிகரெட் கேட்கும் காட்சியில் மனிதர்கள் பழக்கங்களுக்கு எவ்வளவு அடிமை ஆகி இருக்கிறார்கள் என உணர்த்துகிறார்..


முழுக்க முழுக்க கதிரின் ஆதிக்கம் படம் முழுவதும்.. சந்தானம்., மகேஸ்வரி., மீனாட்சி., ரிஷி ., தம்பி ராமையா எல்லாரும் மிகவும் இயல்பாக நடிக்கிறார்கள்.. கரு. பழனியப்பனை விட மீனாட்சி வசனம் பேசுவதும் நடிப்பதும் வெகு இயல்பு.. புடவையை விட மாடர்ன் உடைகளில் க்ளாமராக இருக்கிறார்..மீனாட்சி..

இந்திரா பிக்சர்ஸின் படம்., வித்யா சாகர் இசை ., ராம்நாத் ரெட்டியின் காமிரா., அறிவுமதி., யுகபாரதியின் பாடல்கள் அருமை..

வசனம் பாஸ்கர் சக்தி.. குங்குமத்தில் இவரின் கதைகள் படித்த ஞாபகம். அந்த பாஸ்கர் சக்தி இவர்தானா .. தெரியவில்லை..

என்னைக் கவர்ந்த வசனங்கள்..

காரணமே இல்லாம பார்க்க வர்றது., பேசணும்னு நினைக்கிறது இதுக்கு பேர்
காதல்..

என்னை ஆண்டவன் தப்பா படைச்சிட்டான் .. மேனுஃபாக்சரிங் டிஃபெக்ட்..

எந்தப் புருஷனும் தன் மனைவிகிட்ட தினமும் சோறு நல்லா இருக்கு., இட்லி நல்லா இருக்கு., ரசம் நல்லா இருக்குன்னு பாராட்டிக்கிட்டு இருக்க மாட்டான்..

உங்க அம்மா ஏன் பிரிஞ்சு போனாங்கன்னு உனக்கு எப்பிடித் தெரியலையோ.. அது மாதிரித்தான் எனக்கும் நான் ஏன் இன்னும் உன் கூட ஒட்டிக்கிட்டு இருக்கேன்னு தெரியல..

கொடுமையைத் தாங்க முடியாதவங்க இருக்கலாம்.. கோபத்தைத் தாங்க முடியாதவங்க இருக்கலாம்.. அநியாயத்தைத் தாங்க முடியாதவங்க இருக்கலாம்.. ஆனா அன்பைத் தாங்க முடியாதவங்க இருக்க முடியுமா.. ஆனா உன்னால என் அன்பைத் தாங்க முடியல.. அதான் பிரிஞ்சு போறே. அதுனாலதான் காதலிக்கிறேன்..

அப்புறம் முக்கியமான விஷயம் இந்தப் படத்தில் எங்கள் முகப் புத்தகத் தோழர்., எல்லாராலும் ஜாமூன் என்று செல்லமாக அழைக்கப் படும் ( குலோப் ஜாமூன் விளம்பரத்தில் நடித்ததால் இந்தப் பேரு..) நிதிஷ் குமார்.... இதில் கார் வாங்க வரும் வாடிக்கையாளராக நடித்திருக்கிறார்.. மிக அருமையான மனிதர்.. ஆனால் படத்தில் ஜொள்ளு பார்ட்டியாக கதா பாத்திரம்.. அதிலும் கலக்கிட்டார் நிதிஷ்.. நிதிஷ் வாழ்த்துக்கள்....

நேற்று நானும் என் கணவரும் அம்பாவில் பி.வி.ஆர் ஆடி 1 இல் மந்திரப் புன்னகையில் நிதிஷ் நடித்திருக்கிறார் என்பதே தெரியாமல் பார்க்கச் சென்றோம்.. பார்த்தவுடன் அவரின் புன்னகை எங்கள் இருவருக்கும் தொற்றிக் கொண்டது.. இன்னும் நிறையப் படங்கள் வெளிவர வாழ்த்துக்கள் நண்பரே..

கரு. பழனியப்பன் நல்ல படம் .. எழுத்தின் வசியம் அருமை.. பெரிய நிறுவனங்களே விளம்பரங்களை நம்பி இருக்கும் நிலையில் தியேட்டரில் பெரும் பகுதி உங்கள் வசனங்களுக்காகவே ரசிக்கிறார்கள்.. உங்களிடம் படைப்பாக்க நெருப்பு இருக்கிறது .. கொஞ்சம் கவனமாக உபயோகப் படுத்துங்கள்.. வாழ்த்துக்கள்..

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும். 
39 கருத்துகள் :

சசிகுமார் சொன்னது…

Nice

அ.வெற்றிவேல் சொன்னது…

கரு.பழனியப்பன் ஒரு அருமையான திறமையான படைப்பாளி. மதுரையில் இருந்து வந்ததும் நகரத்தார் பின்னணி இருப்பதும் அவர் பலம். நிச்சயம் நல்ல படமாகத் தான் இருக்கும் என்று தெரிகிறது.. கண்டிப்பாக பார்க்கத் தூண்டும் விமர்சனம்..

Balaji saravana சொன்னது…

ம்.. பார்த்திடுறேன் :)

Dr.Rudhran சொன்னது…

"வேறு களம்.. வேறு ஆட்டம்.. மனச்சிதைவு.. "
மனச்சிதைவு குறித்து மேலோட்டமாக எழுதுவதும் பேசுசதும் நல்லதல்ல

Nithish Kumar சொன்னது…

Mikka nandri Mrs & Mr.Thenammai,ungal vimarsanam enaku periya Tiraiyil Mudal vetri padi...

sakthi சொன்னது…

நல்ல விமர்சனம்ங்க... வசனங்களை கூட மறக்காம சொல்ற உங்க ஞாபகசக்தியை பாராட்டறேன்...

சே.குமார் சொன்னது…

nalla vimarsanam...

tamizhselvi சொன்னது…

nice...

Nithish சொன்னது…

நன்றி...நன்றி...தேனம்மை உங்கள் விமரிசனம் பெரிய திரையில் என் முதல் வெற்றி படி...

வெறும்பய சொன்னது…

Nalla vimarsanam...

asiya omar சொன்னது…

அருமையான விமர்சனம்,பாராட்டுக்கள்.நிதிஷ் க்கு வாழ்த்துக்கள்.

asiya omar சொன்னது…

அருமையான விமர்சனம்,பாராட்டுக்கள்.நிதிஷ் க்கு வாழ்த்துக்கள்.

பிரபு . எம் சொன்னது…

இந்த மாதிரி படங்கள் பெண்களால் எப்படிப் பார்க்கப்படுகிறது என்று பெண்குரலில் பதிவுசெய்திருக்கும் விமர்சனம் அக்கா...

தொடர்ந்து விமர்சனங்களும் எழுதுங்களேன்...
நல்ல விமர்சனம்....

வினோ சொன்னது…

நானும் படம் பார்க்கிறேன்... நல்ல விமர்சனம்...

ஆகாயமனிதன்.. சொன்னது…

//தண்ணியடிப்பதும்., பெண்களிடம் செல்வதும் ., இயல்பான ஒருவன் தனக்கு வரும் மனைவி மட்டும் குற்றமற்றவளாக இருக்க வேண்டும் என நினைக்கிறான்.. எல்லா ஆண்களின் மனோபாவமும் இது.. இதற்கு டாக்டர் சொல்லும் வசனம்.. “ஏன் நீ செய்யலாம்.. அவ செய்யக் கூடாதா..”//

//Dr.Rudhran கூறியது...
"வேறு களம்.. வேறு ஆட்டம்.. மனச்சிதைவு.. "
மனச்சிதைவு குறித்து மேலோட்டமாக எழுதுவதும் பேசுசதும் நல்லதல்ல//


உங்களின் விமர்சனம் அருமை..
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டும்...
பொருந்துமோ ?
(உங்கள் வரிகளும்.. Dr.ருத்ரனின் வரிகளும்)

சத்ரியன் சொன்னது…

தேனக்கா,

படம் பாக்க தூண்டியதற்கு நன்றி.

Mrs.Menagasathia சொன்னது…

விமர்சனத்திலும் கலக்குறீங்க அக்கா...

பாரத்... பாரதி... சொன்னது…

//சேரன் படம் போல என ஒரே வார்த்தையில் சொல்ல முடியாது.. ஏனெனில் சேரன் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது.. சேரனைப் போல நல்லதைத் தர நினைக்கும் ஒரு ஹீரோ., இந்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.. ஆனால் நிறைய இடங்களில் ஆண்கள் கைதட்டி ரசிக்கிறார்கள்..//

உண்மை தான் சேரனுடன் ஓப்பிட அனைவருக்கும் தோன்றும்...

பாரத்... பாரதி... சொன்னது…

//"வேறு களம்.. வேறு ஆட்டம்.. மனச்சிதைவு.. "
மனச்சிதைவு குறித்து மேலோட்டமாக எழுதுவதும் பேசுசதும் நல்லதல்ல//

ஆகா.. டாக்டர்.ருத்ரன் உங்களுக்கு பின்னூட்டமிட்டுள்ளார்.
அவர் சொன்னதை கவனியுங்கள்..

நாய்க்குட்டி மனசு சொன்னது…

உங்களுக்கு பிடித்த வசனங்கள் எல்லாம் எனக்கும் பிடித்தன தேனம்மை. புது படம் எங்கே போய் பார்க்க முடியுது. அடுத்த பிறவியிலாவது ஆணாய் பிறந்து கல்யாணம் பண்ணாமல் ஜாலியா நினைச்சதை செய்யணும் ம்ம்ம்ம் கதை முடிச்சிட்டேன் . பார்த்திட்டு எப்படி இருக்குனுசொல்லுங்க

யாதவன் சொன்னது…

நல்ல இருக்கு

தமிழ் உதயம் சொன்னது…

வசனம். பாஸ்கர்சக்தி என்று வேறு பதிவர்களின் விமர்சனத்தில் வாசித்தேன். அவரை விட்டுவிட்டீர்கள்.

ம.தி.சுதா சொன்னது…

தங்களின் பார்வை வித்தியாசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

ஹேமா சொன்னது…

அப்போ...படம் பார்க்கலாம்ன்னு சொல்றீங்கதானே தேனக்கா !

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு விமர்சனம்.

ஜோதிஜி சொன்னது…

மெருகு ஏறியுள்ளது.

ராமலக்ஷ்மி சொன்னது…

நிறைகுறைகளை அழகாக அலசும் அருமையான விமர்சனம்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

விமர்சன பாணி சற்றே வித்தியாசமாக இருக்கு!

LK சொன்னது…

உங்கள் கவிதைகளை போல விமர்சனமும் வித்யாசம். நிதீஷ்க்கு வாழ்த்துக்கள்

VELU.G சொன்னது…

நல்ல விமர்சனம்

அம்பிகா சொன்னது…

நல்லதொரு விமர்சனம்

பெயரில்லா சொன்னது…

//இந்திரா பிக்சர்ஸின் படம்., வித்யா சாகர் இசை ., ராம்நாத் ரெட்டியின் காமிரா., அறிவுமதி., யுகபாரதியின் பாடல்கள் அருமை..
//

பாவங்க நீங்க, விமர்சணம் எழுதினா கண்டிப்பா இதெல்லாம் இருக்கனும்னு நினைச்சு சேர்த்திருக்கீங்க. இந்திரா பிக்சர்ஸ் என்ன ஏவிஎம், சன் மாதிரியா..... அய்யோ அய்யோ!!!

பட விமர்சணம் உங்க கவிதைகள் மாதிரியே இருக்கு. அதாவது நிறைய இம்ப்ரூவ்மண்ட் தேவைப்படுது.

காவேரி கணேஷ் சொன்னது…

சகோ, ரொம்பவே நேர்மையான விமர்சனம்.
என்ன செகண்ட ஆப் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம்.

என்ன களம் புதிய களம்.

வசனம் பாஸ்கர் சக்தி, கோலங்கள் சீரியல் வசனகர்த்தா.
பிளாக்கர் சந்திப்புகளுக்கு வந்துள்ளார்.

நல்லா பேசுவார், நீங்க பேச வேண்டிய நபர் .

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

நல்ல விமர்சனம்...

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

நல்ல விமர்சனம்...

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சசி., வெற்றி., பாலாஜி., ருத்ரன்., நிதிஷ்., சக்தி., குமார்., தமிழ்., ஜெயந்த்., ஆசியா., பிரபு., வினோ., யுவா., சத்ரியன். மேனகா., பாரத்., ருஃபினா,., யாதவன்., ரமேஷ்., சுதா., ஹேமா., ஸ்ரீராம்., ஜோதிஜி., ராமலெக்ஷ்மி., சை கொ ப., கார்த்திக்., வேலு., அம்பிகா., பெயரில்லா., கணேஷ்., பிரியமுடன் ரமேஷ்.,

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Suresh சொன்னது…

தங்களது விமர்சனத்தை படித்துவிட்டு தான் படம் பார்த்தேன். நன்றாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள். என்னை பெற்றதால் தான் அவர் தாய். இல்லை என்றால் அவர் மலடி என்ற வசனம் ஏற்கனவே நாட்டாமை படத்தில் நடிகர் பொன்னம்பலம், நமது ஆச்சி மனோரமாவைப் பார்த்து சொல்லும் அதே வசனம் அப்படியே இருப்பது போல் தெரிகிறது.

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கு நன்றி சுரேஷ்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...