எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 நவம்பர், 2010

ப்ரக்ஞை..

இருப்புத் துருவும்
எண்ணங்களூடே
பயணத்தில்...
இருப்பற்றுக் கிடப்பது...
எதாகவாவது..

யாதுமாய்.., அற்றதாய்..,
செவிப்பறையில்
சத்தமற்ற சத்தம்..
கண்ணுள் ஒளியற்ற ஒளி..
நாசியும்., நாவும்., மெய்யுமாய்..
வெளியற்ற வெளி..


யானெதற்கு...
இறையெதற்கு.,
இருப்பெதற்கு.,
உணவெதற்கு..

சலிப்புற்றுக் கவிழ்தலில்
சகலமும் நின்று
ஞானமுற்றதாய்
ப்ரம்மையில்..

பிரக்ஞையற்ற
நிகழ்வெளியில்...
வெளி., உள்ளில் துழாவி..
எல்லையற்ற அதாகி...

ஆவியடங்கி
அதைச் சேரத் துடிக்கும்
அதற்ற அதுவாகி

உயிர்க்க உண்ணும் யானாகி.,
உயிர்த்து உறையும் நானாகி.,
பிழையுற்றுக் குறையுற்றுக்
கிடக்கும் ப்ரக்ஞை...

டிஸ்கி :- இந்தக் கவிதை நவம்பர் 21., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது..

18 கருத்துகள்:

  1. //யானெதற்கு...
    இறையெதற்கு.,
    இருப்பதெற்கு.,
    உணவெதற்கு..

    சலிப்புற்றுக் கவிழ்தலில்
    சகலமும் நின்று
    ஞானமுற்றதாய்
    ப்ரம்மையில்..

    பிரக்ஞையற்ற
    நிகழ்வெளியில்...//

    அருமையான வரிகள் தேனம்மை.
    நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. / யானெதற்கு...
    இறையெதற்கு.,
    இருப்பதெற்கு.,
    உணவெதற்கு..

    சலிப்புற்றுக் கவிழ்தலில்
    சகலமும் நின்று
    ஞானமுற்றதாய்
    ப்ரம்மையில்.. /

    கவிதை அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  3. //இருப்பதெற்கு.,//

    "இருப்பதற்கு" என்று வர வேண்டுமா இல்லை "இருப்பதெதற்கு" என்று வர வேண்டுமா..? இல்லை சரியாகத்தான் எழுதி உள்ளீர்களா என்று தெரியவில்லை..

    ஆனால் நல்ல ஒரு கவிதை.. நன்றி..

    பதிலளிநீக்கு
  4. சத்தமற்ற சத்தம்....உய்..என்ற ஊழிக்காற்று..? மௌனத்தின் அலறல்!..வெளியற்ற வெளி, அதற்ற அது...ஏகப் பட்ட ஆக்சிமோரான்கள்!

    பதிலளிநீக்கு
  5. \\உயிர்க்க உண்ணும் யானாகி.,
    உயிர்த்து உறையும் நானாகி.,
    பிழையுற்றுக் குறையுற்றுக்
    கிடக்கும் ப்ரக்ஞை\\

    பதிலளிநீக்கு
  6. யாம்.......!!!!!! எச்சமில்லா எல்லாமாகிய யாம்...!!!!

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள்!!!!!!!!!!
    நல்லதொரு கவிதை.

    பதிலளிநீக்கு
  8. நல்ல கவிதை. யோசிக்க வைத்தது தேனம்மை மேடம்

    பதிலளிநீக்கு
  9. அக்கா, பெரிய பெரிய விஷயங்களை உள்ளடக்கிய அருமையான கவிதை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  10. அருமை தேனக்கா :)

    பதிலளிநீக்கு
  11. கவிதை அருமை! பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. ///உயிர்க்க உண்ணும் யானாகி.,
    உயிர்த்து உறையும் நானாகி.,
    பிழையுற்றுக் குறையுற்றுக்
    கிடக்கும் ப்ரக்ஞை.../// அருமை

    பதிலளிநீக்கு
  13. உயிர்க்க உண்ணும் யானாகி.,
    உயிர்த்து உறையும் நானாகி.,
    பிழையுற்றுக் குறையுற்றுக்
    கிடக்கும் ப்ரக்ஞை...////

    இந்த வரிகள் எனக்கு புதியதாக இருந்தது நல்லா இருக்கு அக்கா

    பதிலளிநீக்கு
  14. .. நல்ல தெளிந்த சொற்கட்டமைப்பு தேனம்மை... இதை படித்த உடனெ என்னில் தோன்றியது....
    "இந்த காற்றில் ஒரு நளினமும்
    இதுவரை உணர்ந்திராத சுகந்தமும்... நன்றாக உள்ளிழுத்து வெளிவிடும்போது ஒரு சுதந்திரமும் தெரிகிறது"...

    வாழ்த்துக்கள்..தேனம்மை

    பதிலளிநீக்கு
  15. நன்றி ராமலெக்ஷ்மி., வினோ., பிரகாஷ்., ஸ்ரீராம்., அம்பிகா., தேவா., யோகேஷ்., மோகன் ஜி ., குமார்., சித்து., பாலாஜி., வரோ., நந்தா., சௌந்தர்., ஜெயந்த்., ஹரி

    பதிலளிநீக்கு
  16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...